வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை: பாஜக எம்.எல்.ஏவுக்கு 28 ஆண்டு சிறை! வி.எச்.பி பயங்கரவாதிக்கு ஆயுட்கால சிறை!

31 Aug 2012 அஹமதாபாத்: குஜராத்-நரோடா பாட்டியா இனக் கலவர வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. மாயா கோட்னானிக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனையும், வி.ஹெச்.பி பயங்கரவாதி பாபு பஜ்ரங்கிக்கு ஆயுட்கால சிறை தண்டனையும் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோத்ராவில் நடந்த ரயில் எரிப்பு சம்பவத்தின் பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தி குஜராத் மாநிலத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இந்திய வரலாறு காணாதா மாபெரும் இனப்படுகொலையில் ஈடுபட்டனர். ஊர் ஊராக முஸ்லீம்களைக் குறி வைத்து கொலை வெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த கொடும் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். பலரை உயிருடன் தீயில் போட்டுக் கொடூரமாகக் கொன்றனர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள். கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் நடந்த மறுநாள் அதாவது 2002 பிப்ரவரி 29-ஆம்தேதி குஜராத் மாநிலத்தின் நரோடா பாடியா என்ற இடத்தில் நடந்த கூட்டுப் படுகொலையில் 97 முஸ்லிம்கள் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டனர். இந்த நிலையில் அவ்வழக்கின் மீது கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், முன்னாள் விஎச்பி அமைப்பைச் சார்ந்த ஹிந்துத்துவா பயங்கரவாதி பாபு பஜ்ரங்கி, நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி உள்ளிட்ட 32 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். அதேசமயம், 29 பேரை விடுவித்து அவர் உத்தரவிட்டார். மாயா கோட்னானி தற்போதும் பாஜக எம்.எல்.ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரணை தொடங்கியது. மொத்தம் 70 பேர் மீது குற்றம சாட்டப்பட்டது. அதில் விஜய் ஷெட்டி உள்ளிட்ட 7 பேர் விசாரணைக் காலத்திலேயே இறந்து விட்டனர். மொத்தம் 327 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அதில் முக்கியமானவர் பத்திரிக்கையாளர் ஆசிஷ் கேதான் ஆவார். முதலில் 46 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். பின்னர் மேலும் 24 பேரை எஸ்ஐடி சிறப்புப் படையினர் கைது செய்தனர். இவர்களில் ஜாமீனில் வெளிவந்த மோகன் நேபாளி மற்றும் தேஜாஸ் பதக் ஆகிய இருவரும் தப்பி விட்டனர். இன்னும் இவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 32 பேருக்கு என்ன தண்டனை என்பதை நீதிமன்றம் இன்று அறிவித்தது. மாயா கோட்னானிக்கு 10 மற்றும் 18 ஆண்டுகள் என மொத்தம் 28 ஆண்டுகள் சிறை தண்டனையும், பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனையும், மேலும் 7 பேருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாபு பஜ்ரங்கி தனது வாழ்நாளை சிறையிலேயே கழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தொடரும் முஸ்லிம் வேட்டை: தீவிரவாத தொடர்பின் பெயரால் 11 இளைஞர்களை கைது செய்த கர்நாடகா பா.ஜ.க அரசு!

31 Aug 2012 பெங்களூர்:அரசியல் தலைவர்கள் உள்பட பிரமுகர்களை கொலைச்செய்ய திட்டம் தீட்டினார்கள் என குற்றம் சாட்டி 11 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து மீண்டும் தனது முஸ்லிம் வேட்டையை துவக்கியுள்ளது கர்நாடகா பா.ஜ.க அரசு. இதில் பிரபல பத்திரிகையான டெக்கான் ஹெரால்டில் பணியாற்றும் பத்திரிகையாளர் மற்றும் டி.ஆர்.டி.ஒ எஞ்சீனியர் மற்றும் டாக்டர் ஆகியோரும் அடங்குவர். ஹுப்ளி, பெங்களூர் ஆகிய பகுதிகளில் இருந்து இவர்களை கைது செய்ததாக கர்நாடகா மாநில டி.ஜி.பி தெரிவித்துள்ளார். போலீஸ் தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார். கடந்த புதன்கிழமை காலையில் ஹுப்ளி மற்றும் பெங்களூர் ஜெ.சி நகரில் கெம்பய்யா ப்ளாக்கில் முபாரக் மஸ்ஜிதுக்கு அருகே உள்ள வாடகை வீட்டில் வைத்து இவர்களை போலீஸ் கைது செய்துள்ளது. சாதாரண உடையில் வந்தவர்கள் இளைஞர்களை பிடித்துக் கொண்டுச் சென்றதாகவும், அவர்களைக் குறித்து தகவல் எதுவும் இல்லை என்றும் குற்றம் சாட்டி உறவினர்கள் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். இச்செய்தி பத்திரிகைகளில் வெளியானது. இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை மாலை போலீஸ் கைதை உறுதிச் செய்தது. இவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கியும், தீவிர செயல்கள் தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றியதாக போலீஸ் கூறுகிறது. முஸ்லிம் இளைஞர்களின் கைதின் பின்னணியில் மர்மம் நீடிக்கிறது.

கமுதி:முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ காதர்பாட்சா வெட்டிக் கொலை! – கொலையாளியும் அடித்து கொல்லப்பட்டார்!

31 Aug 2012 கமுதி:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக்கழகம் சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏவாக பதவி வகித்தவர் காதர் பாட்சா என்ற வெள்ளைச் சாமி(வயது 70) இவர் கமுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் வழக்கமாக காலையில் நடைப் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இன்று அதிகாலையில் வழக்கம்போல் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்பொழுது மேலராமநதியை சேர்ந்த தனசீலன் (வயது 42) என்பவர் வந்தார். அவர் திடீரென்று மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெள்ளைச்சாமியை வெட்டினார். அவர் கூச்சல் போட்டு அலறினார். அலறல் சத்தம் கேட்டு மனைவி ருக்குமணி ஓடிவந்தார். அவரையும் தனசீலன் அரிவாளால் வெட்டினார். சரமாரியாக வெட்டுப்பட்ட வெள்ளைச்சாமி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார். இதற்கிடையில் வெள்ளைச்சாமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். இதை அறிந்ததும் தனசீலன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவர்கள் தனசீலனை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் தனசீலன் இறந்துபோனார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பிணமாக கிடந்த வெள்ளைச்சாமி-தனசீலன் பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

விரைவில் விவாதம் பீ.ஜே - ரஷாதி :

விரைவில் விவாதம் பீ.ஜே - ரஷாதி : யார் பீ.ஜே ( பீ .ஜைனுல் ஆபிதீன்) : இந்தியாவின் தலை சிறந்த மார்க்க அறிஞர் சகோ. பீ.ஜே . அவர்களை பற்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் யாரும் அறியாமல் இருக்க முடியாது. இஸ்லாமிய மார்க்கத்தில் புரையோடி போயிருந்த மூட நம்பிக்கைகளை ஒழித்து கட்டுவதற்காக இவர் ஆற்றிய பணியை யாரும் மறுக்க முடியாது. மறைக்கவும் முடியாது. இஸ்லாத்திற்கு எதிராக களம் இறங்கிய நாத்திகர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் மார்க்கத்திகு எதிராக களம் இறங்கிய ஹாதியானிகள் உள்ளிட்ட பல கூட்டத்தினரை விவாதத்தின் மூலம் ஓடச்செய்தவர். ஜாக், தமுமுக , தவ்ஹீத் ஜமாஅத் போன்ற இயக்கங்களின் தலைவராக இருந்தவர். சகோ. பீ.ஜே யை பற்றி ஆய்வு செய்து சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவர் டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார். சகோ. பீ.ஜே அவர்கள் ஏராளமான மார்க்க நூல்கள் எழுதியுள்ளார். மேலும் உணர்வு, அல் ஜன்னத் , அல் முபீன், அன் நஜாத், ஏகத்துவம், போன்ற பத்திரிகைகளின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தமிழகத்தின் இந்த நூற்றாண்டில் தோன்றிய குறிப்பிடத்தக்க தலைவர்களில் ஒருவர். காயிதே மில்லத்தை கூட தெரியாத முஸ்லிம் பலர் இருக்கிறார்கள் ( பெரும்பாலும் அரசியல்வாதிகள்தான் காயிதே மில்லத்தை நியாபகம் வைத்துள்ளார்கள் ) . சகோ. பீ.ஜே . அவர்களை தெரியாத முஸ்லிம் தமிழர்கள் இருக்க முடியாது.இவரை தீவிரமாக எதிர்ப்பவர்கள் கூட இவரை சொற்பொழிவை ரசிப்பவர்கள் என்பது பீ.ஜே யின் தனிச் சிறப்பு. தொண்டியை சேர்ந்த சகோ. பீ.ஜே அவர்கள் திருக்குர்ஆன் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அவருடைய அதிகாரபூர்வ இணையதளம் யார் சைபுதீன் ரஷாதி :
பெங்களூருவில் உள்ள அரபிக் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றுகிறார். சுன்னத் ஜமாஅத் பொதுக்கூட்டங்களில் உரையாற்றியுள்ளார். பீ.ஜே யை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை தவிர வேறு பலம் இல்லை. பொதுவாகவே சுன்னத் ஜமாஅத் என்று சொல்பவர்கள் மத்ஹாப் இமாம்கள், முன்னோர்களை தூக்கி பிடிப்பதால் இவரை போன்றவர்கள் அடையாளம் இல்லாமல் போய்விடுகிறார்கள். கடந்த ௦ வருடங்களாக பீ.ஜே யுடன் விவாதம் செய்ய போகிறேன் என்று மேடைகளில் சவால் விட்டு வருபவர். இதுவரை யாருடனும் விவாதம் செய்யவில்லை என்பது இவரின் பலவீனம். அசிங்கமான வார்த்தைகளை உபயோகிக்கிறார் என்பது இவரை பற்றி பெரும்பாலோரின் கருத்து. முதல் தலைப்பே தனிப்பட்ட முறையில் இருவரின் நன்மதிப்பை நிரூபிக்கக்கூடிய தலைப்பாக உள்ளதால் தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. ஒப்பந்த நகல் இணைக்கப்பட்டுள்ளது.

புதன், 29 ஆகஸ்ட், 2012


free counters

உட்கார்ந்து சிறுநீர் கழியுங்கள்: தைவான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர்!

Taiwan minister says men should sit down to urinate
தைபே:ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிக்காமல் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என தைவானின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீஃபன் ஷென் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சரின் கருத்து அந்நாட்டில் கழிப்பறை சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
இதுக்குறித்து தைவான் நாட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிர்வாகம் கூறுகையில், “வீட்டிலும் சரி பொதுக் கழிப்பறைகளிலும் சரி அமைச்சர் ஸ்டீஃபன் ஷென் எப்போதுமே உட்கார்ந்துதான் சிறுநீர் கழிக்கிறார். இந்த வழக்கத்தை மக்கள் அனைவரும் பின்பற்றுவதன் மூலம் கழிப்பறைகளை மேலும் சுத்தமாக வைக்க முடியும்.” என்று தெரிவித்துள்ளது.
உட்கார்ந்து சிறுநீர் கழியுங்கள் என்று ஆண்களுக்கு அறிவுறுத்தும் அறிவிப்பு பிரசுரங்களை பொது இடங்களில் ஒட்டச் சொல்லி உள்ளூர் நிர்வாகத்தினரை அரசு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

அசாமில் நடப்பதென்ன; அந்நியர் படையெடுப்பா?: வி.சண்முகநாதநின் கட்டுரைக்கு நமது கமெண்ட்ஸ் :

சகோ. சண்முகநாதனின் மத துவேச கருத்துகள் ஜீரணிக்க முடியாத ஓன்று . முதலில் இந்த கட்டுரையை நான் பத்திரிகையில் தான் பார்த்தேன். என்னை போன்ற ஏராளமான வாசகர்களை கொண்டுள்ள தினமலர் இதுபோன்ற ஒரு மத வெறுப்பு கருத்துகளை வெளிப்படுத்தியிருக்க கூடாது என்றே நான் நினைக்கிறேன். பொதுவாகவே இந்திய பத்திரிகையாளர்கள் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கிறார்கள். அஸ்ஸாமில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் வங்கதேசத்தினர் என்று சொல்வதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் ? இந்த தேசத்தினரை , இந்த மண்ணிற்கு சொந்தக்காரர்களை அன்னியர் என்று சொல்லி அவர்களை அகதிகள் ஆக்க வேண்டும் என்பது தான் உங்களுடைய ஆசையா ? மத்தபடி வேறு நாடுகளுடன் ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் நான் இந்தியன். என்னுடைய நாட்டிற்கு வரும் ஒரு பாகிஸ்தான் இந்துவுக்கு இங்கு தங்குவதற்கு உரிமை உள்ளது,  என்னுடைய நாட்டிற்கு வரும் ஒரு இலங்கை இந்துவுக்கு இங்கு தங்குவதற்கு உரிமை உள்ளது , இன்னும் எத்தனையோ நாடுகளில் இருந்து வரும் புத்த மதத்தினருக்கு இங்கு தங்குவதற்கு உரிமை உள்ளது, இவர்கள் எல்லாம் இங்கு தங்கலாம் அவர்களை வரவேற்பது இந்தியர்களின் தாராள மனப்பான்மை, மனிதாபிமான நடவடிக்கை என்று சொன்னால் அந்த எண்ணம் ஏன் முஸ்லிம்கள் விசயத்தில் வருவது இல்லை. மற்ற நாட்டு முஸ்லிமகள் முன் எங்கள் இந்திய தேசம் வந்தாரை வாழ வைக்கும் முன் மாதிரி தேசம் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியாமல் போய் விட்டதே என்பது தான் நம் வருத்தம். 

சிரியாவில் வெளிநாட்டு தலையீட்டை எதிர்ப்போம்: முஹம்மது முர்ஸி!

Egypt against foreign intervention in Syria- Mohamed mursi!
கெய்ரோ:சர்வாதிகாரி பஸ்ஸாருல் ஆஸாத் அரசுக்கும், எதிர்ப்பாளர்களின் ஃப்ரீ சிரியா ஆர்மிக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள்ள சிரியாவில் வெளிநாட்டு தலையீட்டை ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டோம் என்று எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி திட்டவிட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: “சிரியா பிரச்சனைக்கு அமைதியான தீர்வு ஏற்படவேண்டும் என்பதே எகிப்தின் நிலைப்பாடாகும். ஒரு புரட்சி என்ற பெயரில் சிரியா மக்கள் எதனை விரும்புகின்றார்களோ, அந்த லட்சியத்தை அடைவதற்கு அவர்களுக்கு உதவும் வண்ணம் பிரச்சனைக்கு தீர்வை காணவேண்டும். போர் அமைதியை ஏற்படுத்தாது என்பது எல்லோரும் புரிந்துகொள்ளும் நேரம் இது. அமைதி என்பது நீதியின் அடிப்படையிலானது. அதனை தாக்குதல் மூலம் ஏற்படுத்துவது சாத்தியமாகாது. ஆனால், எங்களுடைய பிராந்தியத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை அங்கீகரிக்க முடியாது. இந்த அறிக்கை பிராந்தியத்தில் உள்ள நாடுகள் உள்பட அனைவருக்கும் பொருந்தும்.
அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் ராஜினாமாச் செய்யவேண்டும் என்பதையே சிரியாவில் உள்ள மக்கள் விரும்புகின்றார்கள்.”
இவ்வாறு முர்ஸி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

அஸ்ஸாம்:முழு அடைப்பு, வன்முறை, துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

Assam fire spreads with bandh, 1 dead
குவஹாத்தி:அஸ்ஸாமில் கொக்ராஜர் மாவட்டத்தில் மீண்டும் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் ஒருவர் மரணமடைந்தார். ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டது.
மாவட்டத்தின் 3 இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. ஸல்காதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஃபும்கி கிராமத்தில் முதலில் தாக்குதல் நிகழ்ந்தது. இங்கு யாருக்கும் காயம் இல்லை.
பக்ரிதோலா கிராமத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். நான்குபேருக்கு காயம் ஏற்பட்டது. துபிமாரியில் நிகழ்ந்த வன்முறையிலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. விஷமிகள் வீடுகளுக்கு தீவைத்தனர். போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து வன்முறையாளர்கள் ஓடிவிட்டதாக ஐ.ஜி எல்.ஆர்.பிஷ்ணோய் தெரிவித்தார்.
வன்முறையை கண்டித்து அகில அஸ்ஸாம் சிறுபான்மை மாணவர் யூனியன் அழைப்பு விடுத்த முழு அடைப்பில் மக்கள் மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறிய பகுதிகளில் ராணுவம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
கொக்ராஜர், சிராங், துப்ரி மாவட்டங்களில் இரவு கால ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது.
12 மணிநேர முழு அடைப்பிற்கு சிறுபான்மை மாணவர் யூனியன் அழைப்பு விடுத்திருந்தது. போடோலாண்ட் டெரிட்டோரியல் கவுன்சிலை கலைத்துவிட்டு அதன் தலைவர் ஹக்ராமா மொஹிலாரியை கைது செய்ய முழு அடைப்பை நடத்தியவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பொங்கைகான் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை மறித்தவர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயமடைந்தனர்.
துப்ரி மாவட்டத்திலும் வன்முறை நீடிக்கிறது. இங்கு மொஹிலாரியின் உருவத்தை தீ வைத்துக் கொளுத்தியவர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

கர்நாடகா:பெல்காமில் வகுப்புக் கலவரம் – 2 பேர் பலி!

2 killed in Karnataka communal clashes
பெல்காம்:கர்நாடகா மாநிலம் பெல்காமில் நிகழ்ந்த வகுப்புக் கலவரத்தில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காயம் அடைந்துள்ளார். கலவரத்தைத் தொடர்ந்து நகரில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு மஸ்ஜிதுக்கு முன்னால் பட்டாசு கொளுத்தப்பட்டது தொடர்பாக இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையில் முடிவடைந்ததாக பெல்காம் எஸ்.பி சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார். தாக்குதலில் தலையில் காயமடைந்த 28 வயது நபர் நேற்று மரணமடைந்தார். இன்னொரு நபரின் உடலும் நகரில் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவாஜி ஜெயந்தியையொட்டி லோக்மான்யா சமூக மற்றும் கலாச்சாரம் மையம் சார்பாக நடத்தப்பட்ட போட்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் வெற்றிப்பெற்ற கும்பல் மஸ்ஜிதுக்கு முன்னால் வந்து பட்டாசுகளை கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தை தட்டிக்கேட்ட வேளையில்தான் வன்முறை நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் ஆஸிஃப் மங்கோன்கர்(வயது 28) கொல்லப்பட்டார்.
நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீஸ் தெரிவிக்கிறது. மறு அறிவிப்பு வெளியாகும் வரை கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

எகிப்து ரஃபா எல்லையை திறந்தது!

Egypt to reopen the Rafah border crossing with Gaza
கெய்ரோ:ஒரு மாத காலமாக மூடிக்கிடக்கும் கஸ்ஸாவின் ரஃபா எல்லையை எகிப்து திறந்துள்ளது. ஃபலஸ்தீன் எல்லைப் பகுதியில் உள்ள ஸினா பிரதேசத்தில் இம்மாதம் 5-ஆம் தேதி துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் 16 எகிப்திய ராணுவ வீரர்களை படுகொலைச் செய்தனர். இதனைத் தொடர்ந்து ரஃபா எல்லையை எகிப்து மூடியது.
இஸ்ரேலின் அநீதிமான தடையால் துயருறும் காஸ்ஸா மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதற்கான ஒரே வழி ரஃபா எல்லையாகும். எல்லையை திறக்க எகிப்திய அரசும், ஃபலஸ்தீன் காஸ்ஸாவில் ஆளும் ஹமாஸும் ஒப்பந்தம் செய்துகொண்டன. எல்லையை அனைத்து தினங்களிலும் திறக்க முடிவுச் செய்துள்ளதாக எகிப்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று காஸ்ஸா அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகிறார்.
முன்னர் வாரத்திற்கு 3 தினங்கள் மட்டுமே ரஃபா எல்லை திறக்கப்படும் என்று எகிப்து அறிவித்திருந்தது.

பதருத்தீன் ஹக்கானி கொல்லப்படவில்லை – தாலிபான்!

Badruddin Haqqani
இஸ்லாமாபாத்:மூத்த தலைவர் பதருத்தீன் ஹக்கானி கொலைச் செய்யப்பட்டார் என்ற செய்தியை தாலிபான் மறுத்துள்ளது.
நேற்று முன்தினம் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வடக்கு வஸீரிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவம் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் தாலிபான்(ஹக்கானி பிரிவு) தாக்குதல் பிரிவைச் சார்ந்த பதருத்தீன் ஹக்கானி கொல்லப்பட்டார் என்று மூத்த அமெரிக்க அதிகாரியை மேற்கோள்காட்டி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
ஆனால், பதருத்தீன் ஹக்கானிஉடல்நலத்துடன் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக, தாலிபான் செய்தி தொடர்பாளர் ஊடகங்களுக்கு அளித்துள்ள இ-மெயில் செய்தியில் கூறியுள்ளார்.
ஜலாலுத்தீன் ஹக்கானி என்பவரால் உருவாக்கப்பட்ட தாலிபான்(ஹக்கானி) அமைப்பில் 2-வது பெரிய தலைவராக பதருத்தீன் ஹக்கானி கருதப்படுகிறார். வஸீரிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா நடத்திய அடாவடி ஆளில்லா விமானத் தாக்குதலில் பலியான 18 பேரில் பதருத்தீன்  ஹக்கானியும் அவரது மெய்க்காவலர்களும் அடங்குவர் என செய்தி வெளியானது.

துன்புறுத்தப்படுகிறோம் என நம்புவதற்கு முஸ்லிம்களுக்கு காரணங்கள் உள்ளன! – சி.ஆர்.பி.எஃப் கோப்ரா ஐ.ஜி!


NC Asthana, Inspector General, CRPF COBRA, and wife Anjali Nirmal
புதுடெல்லி:இந்தியாவில் துன்புறுத்தப்படுகிறோம் என நம்புவதற்கு முஸ்லிம்களுக்கு காரணங்கள் உள்ளன என்று சி.ஆர்.பி.எஃப் கோப்ரா ஐ.ஜியான என்.சி.அஸ்தானா கூறியுள்ளார். டெஹல்கா இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், 2007 மக்கா மஸ்ஜிதில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் போலீஸார் கைது செய்யத 21 பேரை நீதிமன்றம் விடுதலைச் செய்தது, 2008-ஆம் ஆண்டில் ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட 14 பேரை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது, மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் நடந்தது ஆகியவற்றைக் குறித்து தனது பேட்டியில் கூறுகிறார்.
சிமிக்கு எதிராக தொடரப்பட்ட 194 வழக்குகளில் வெறும் 6-இல் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் சில ஊடகங்கள் லஷ்கர் மற்றும் ஹூஜியின் தலையில் கட்டிவைக்க முயலுகின்றன என கூறும் அஸ்தானா, குற்றம் சாட்டப்பட்ட எத்தனை பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட என கேள்வி எழுப்புகிறார்.
ஊடகங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்கனவே திட்டமிட்டபடி செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.
இந்தியாவுக்கு வகுப்பு கலவரங்களின் வரலாறு இருந்தாலும், முன்பு ஒருபோதும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கவில்லை. இத்தகைய சித்தரிப்பை இந்தியா மேற்கத்திய நாடுகளிடமிருந்து சொந்தமாக்கியுள்ளது.
அமெரிக்காவை அறிவின் மையமாக பார்க்கும் இந்தியா, இஸ்லாத்தைக் குறித்த அவர்களின் ஊனமான பார்வையை காப்பியடிக்கிறது என்று அஸ்தானா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக அஸ்தானாவும், அவரது மனைவி அஞ்சலி நிர்மலும் இணைந்து எழுதிய நூல் இம்மாதம் இறுதியில் வெளியாகிறது.

அஸ்ஸாம் வன்முறை நீடிக்கிறது: அகதிகளுக்கு உதவிய 3 பேரை கொலைச் செய்த போடோ பயங்கரவாதிகள்!

Assam flares up again - 3 killed bodo's attack
புதுடெல்லி:சற்று இடைவேளைக்குப் பிறகு போடோ பயங்கரவாதிகளின் தொடர்ச்சியான தாக்குதல் அரங்கேறும் அஸ்ஸாமில் ஞாயிற்றுக்கிழமை(நேற்று) மேலும் நான்குபேர் பலியானார்கள். ஏற்கனவே சனிக்கிழமை(நேற்று முன்தினம்) 5 பேர் கொல்லப்பட்டனர். சொந்த கிராமங்களில் இருந்து உயிரை காப்பாற்ற ஓடிய முஸ்லிம்கள் வீடுகளுக்கு திரும்புவதை தடுக்க போடோக்கள் வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
ஒரு அகதி உள்பட அகதிகளுக்கு உதவிய சகோதரர்களான 2 பீகார் முஸ்லிம்களையும் போடோ பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை கொலைச்செய்தனர்.மேலும் சனிக்கிழமை தாக்குதலில் காயமடைந்த ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார்.
துப்ரி மாவட்டம் சுகன்ஜோரா கிராமத்தில் பலத்த காயங்களுடன் ஒரு சடலம் ஞாயிற்றுக்கிழமை காலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தகவல் பரவியதும் ஆத்திரமடைந்த சுகன்ஜோரா கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலை 31-ல் உள்ள மத்ரிஜோரா பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸாரின் சமாதான முயற்சியைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
அகதிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கிக்கொண்டிருந்த பிஜ்னிக்கு அருகே ஜுனோய் பகுதியைச் சார்ந்த அன்ஸாரி(வயது-50) மற்றும் அவரது சகோதரர் அன்வர்(வயது-45) ஆகியோர் போடோ பயங்கரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இதுதவிர, கொக்ரஜார் மாவட்டம் சலகதி ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியதில் ஒரு பெண் உள்பட 2 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பொங்கைகாவ்ன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிராங் மாவட்டத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்தனர். இவர்களின் சடலங்கள் அம்குரி பஜார் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ராஜ்பரா முகாமில் தங்கியிருந்தவர்கள் என தெரியவந்தது.
போடோலாண்டில் இருந்து உயிரைக் காப்பாற்ற வெளியேறியவர்கள் மீண்டும் சொந்த கிராமங்களுக்கு இனி ஒருபோதும் திரும்பி வரக்கூடாது என்ற மிரட்டலை இத்தாக்குதல்கள் மூலம் போடோ பயங்கரவாதிகள் விடுத்துள்ளனர்.

சனி, 25 ஆகஸ்ட், 2012

ரோஹிங்கியா முஸ்லிம்களை ராக்கேன் மக்கள் மியான்மர் குடிமக்களாக அங்கீகரிக்க மாட்டார்கள்: தைன் ஸைன்!

Locals do not accept Rohingya Muslims Says Sein thein
யங்கூன்:மியான்மரின் மேற்கு மாநிலமான ராக்கேனில் வாழும் மக்களால் ரோஹிங்கியா முஸ்லிம்களை சொந்த நாட்டு குடிமக்களாக அங்கீகரிக்க இயலவில்லை என்று மியான்மர் ராணுவ அரசின் அதிபர் தைன் ஸைன் கூறியுள்ளார்.
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய தைன் ஸைன் கூறியது: ‘அரசியல் கட்சிகளும், சில தனிநபர்களும், புத்த சாமியார்களும் இன துவேசத்தை பரப்பி வருகின்றனர். நாட்டின் உள்ளேயும், வெளியேயும் வசிக்கும் ராக்கேன் சமூகத்தைச் சார்ந்தவர்களை சந்தித்து அவர்கள் ஆதரவு தேடி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் சமூகத்தை ராகேன் பிரிவினர் தீவிரவாதிகளாக மாற்றுவது குறித்து சிந்திக்கின்றார்கள்’ என்று தைன் ஸைன் கூறியுள்ளார்.
கடந்த மாதம் ராக்கேன் மாநிலத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் இனப் படுகொலைச் செய்யப்பட்டனர்.
ரோஹிங்கியா முஸ்லிம்களை வெளிநாட்டினர் போல் கருதும் மியான்மர் அரசு, அவர்களுக்கு குடியுரிமை வழங்க தொடர்ந்து மறுத்து வருகிறது.

அஸ்ஸாமில் வன்முறைக்கு ஓய்வில்லை: 5 பேர் குத்திக்கொலை!

5 killed in fresh violence in Assam
குவஹாத்தி:மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனக்கலவரத்திற்கு தலைமை தாங்கிய போடோலாண்ட் மக்கள் முன்னணி(பி.பி.எஃப்) எம்.எல்.ஏ பிரதீப் பிரம்மா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அஸ்ஸாமில் மீண்டும் வன்முறை நிகழ்ந்துள்ளது. கலவரத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட கொக்ராஜரின் அருகில் உள்ள மாவட்டமான சிராங்கில் 5 பேர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர்.
பிஜினியில் சவுதரிபுராவில் சனிக்கிழமை மாலை 5 பேர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலைச் செய்யப்பட்டதாக அஸ்ஸாம் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எல்.ஆர்.பிஷ்னோய் பி.டி.ஏ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
வன்முறைச் சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக கொக்ராஜரிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போடோலாண்ட் மக்கள் முன்னணி எம்.எல்.ஏவை கைது செய்தவுடன் அவரது ஆதரவாளர்கள் இச்சம்பவத்திற்கு பின்விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். பி.பி.எஃப் காலவரையற்ற முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தைத் தொடர்ந்து கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வாழ்க்கை துயரமாகிப் போனது. இந்நிலையில் உடல் நலக்குறைவு எனக்கூறிய பிரதீப் பிரம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுபான்மை கல்வி உதவிதொகைக்கு கூடுதல் தொகை ஒதுக்கீடு: அமைச்சர் தகவல்!

Minister of State for Minority Affairs, Shri Vincent H. Pala
புதுடெல்லி:2008-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை 95 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் மாணவர்களுக்கு ப்ரீமெட்ரிக் ஸ்காலர்ஷிப் (1 முதல் 10 வரையிலான வகுப்புகளில் பயிலும்) வழங்கப்பட்டதாக மத்திய சிறுபான்மை விவகாரத்துறை இணை அமைச்சர் வின்செண்ட் ஹெச்.பால் தெரிவித்துள்ளார்.
கூடுதல் மாணவர்களுக்கு பலன் கிடைப்பதற்கு ஸ்காலர்ஷிப்புக்கான தொகை இவ்வாண்டு 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
2011-ஆம் ஆண்டு 600 கோடி ரூபாய் ஒதுக்கீடுச் செய்யப்பட்டது. இவ்வாண்டு முதல் 900 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கும்(11-ஆம் வகுப்பு முதல் பி.ஹெச்.டி வரை) கூடுதல் தொகை ஒதுக்கீடுச் செய்யப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2012-ஆம் ஆண்டு 500 கோடி ரூபாயும், மெட்ரிக் கம் மீன்ஸ் பெய்டு ஸ்காலர்ஷிப் திட்டத்திற்கு (தொழில்நுட்ப பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு) 220 கோடி  ரூபாயும் ஒதுக்கீடுச் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம்.


பெரும்பாலான மக்களைப்போல, எனக்கும் ‘முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தாஅணிகின்றனர்?’ என்ற ஐயம் எழவே செய்தது. நான் பருவம் எய்திய பின்பு, எனது முதல் எண்ணம், எனது முதல் அச்சம், எனது தலைமுடியை மறைக்கும் பர்தாவை நானும் அணிய வேண்டுமே என்பதேயாகும். பர்தா அணிவதன் உண்மைப் பொருள் என்னவென்பதைப் பிறகு விளங்கியதும் பர்தா அணிய வேண்டும் என்ற திடமான முடிவை மேற்கொண்டேன். ஆனால் அதனை மெல்ல மெல்லத் துவங்கினேன்.
தென் கலிஃபோர்னியா இஸ்லாமிய மையத்திலுள்ள மஸ்ஜிதுக்குச் செல்லும்போது மட்டும் பர்தா அணிவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அத்துடன் கைகளையும், கால்களையும் மறைக்கும் நீண்ட உடைகளையும் அணிந்து வந்தேன். பிறகு படிப்படியாக தோழிகளின் வீடுகளுக்குச் செல்லும்போது பர்தாவுடன் சென்றேன். கடைசியாக, வசந்தகால விடுமுறைக்குப் பிறகு கல்விக்கூடத்திநற்குச் செல்லும்போது பர்தாவைத் துணிந்து அணிந்து சென்றேன். பள்ளிக்கூடத்திற்கு பர்தாவுடன் செல்வதைப் பற்றித்தான் மிகவும் அச்சம் கொண்டிருந்தேன். ஆனால், இப்புதிய அனுபவம் மிகவும் உற்சாகம் மிகுந்த அனுபவமாக அமைந்துவிட்டது.
எல்லோரும் என்னை வியப்புடன் பார்ப்பது எனக்குள் மிகுந்த பரபரப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
வகுப்பு இடைவேளையின் போது சக மாணவிகள் பர்தாவைப் பற்றி பல கேள்விகளை எழுப்பினர். நான் பர்தா அணிந்திருப்பதைப் பார்த்த எனது ஆசிரியையும் அதன் காரணங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினார். ஆகவே, வரலாறு பாட வகுப்பின் போது அது பற்றி உரையாடலாம் எனக் குறிப்பிட்டார். இது நடந்தது பல ஆண்டுகளுக்கு முன்பு. திருமறை வலியுறுத்தும் பர்தாவின் பல நன்மைகளை எனது அனுபவத்தில் கண்டு கொண்டேன். முதலாவதாக, நான் பெண் என்று மரியாதை காட்டப்படுகிறது. ஒரு பால் பொருள் (Sex Object) என்று நோக்கப்படுவதில்லை. இரண்டாவதாக, நான் ஒரு இஸ்லாமியப் பெண் என்று மக்களால் அறியப்படுகிறது. பர்தா அணிவதன் மூலம் நான் மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும், மற்றவர்கள் என்னைத் தெரிந்து கொள்ளவும் முடிகிறது. நான் பர்தா அணியவில்லை என்றால், அதைப்பற்றி கேள்விகள் யாரும் கேட்கப்போவதில்லை.
ஆகவே, எனது நெறியான இஸ்லாம் பற்றிய செய்திகளை விளக்குவதற்கு கடைசியில் வழிவகுக்கும். பர்தாவைப் பற்றிய ஐயங்கள் எழுவதற்கு வாய்ப்பில்லாமல் போய் விடக்கூடும். பர்தா அணிதல் என்பது ஒருவரின் நெறியை பகிரங்கமாகப் பறைசாற்றுவதாகும். அதன் மூலம், ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ளக் கூடும். ஏனையவற்றைவிட மதத்தைப் பின் பற்றுதல் மிகவும் எளிதானது என்பதை உணர்த்துவதாக பர்தா அமைந்துள்ளது.
வீண் பேச்சுக்களில் ஈடுபடுவதில்லை என்பதை நான் நிச்சயமாக அறிந்து விடுவதைக் காட்டிலும், எனது தலைமுடிகள் பர்தாவினால் மறைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து விடுவது மிகவும் எளிதாகும். பர்தா அணிவதன் மூலம் ‘எனது குணநலன்களில் சிறந்த மாற்றங்கள்’ ஏற்பட்டுள்ளன. பர்தாவைப் பற்றி தவறான கருத்துக்களே மக்களிடம் இன்னும் நிலவி வருகிறது. ஏனெனில் மற்றவர்களை மதிப்பிடுவது என்பது மிகவும் எளிதாகும். பர்தா அணிந்த பெண்மணி ஒருவர் தனக்கு எதிரில் வரும் ஒருவரைப் பார்க்க நேரிடின், அவர் ‘நல்லவரா?’ அல்லது ‘கெட்டவரா?’ என்பதை எளிதில் மதிப்பிட்டு விடலாம்.
(இக்கட்டுரையாசிரியர் லைலா அஸ்கர், வெஸ்டர்ன் பிரிட்ஜ் (Western Bridge) பள்ளி மாணவி. இது அமெரிக்காவின் ‘லாஸ் ஏன்ஜல்ஸ் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையாகும் .

பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம்.


பெரும்பாலான மக்களைப்போல, எனக்கும் ‘முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தாஅணிகின்றனர்?’ என்ற ஐயம் எழவே செய்தது. நான் பருவம் எய்திய பின்பு, எனது முதல் எண்ணம், எனது முதல் அச்சம், எனது தலைமுடியை மறைக்கும் பர்தாவை நானும் அணிய வேண்டுமே என்பதேயாகும். பர்தா அணிவதன் உண்மைப் பொருள் என்னவென்பதைப் பிறகு விளங்கியதும் பர்தா அணிய வேண்டும் என்ற திடமான முடிவை மேற்கொண்டேன். ஆனால் அதனை மெல்ல மெல்லத் துவங்கினேன்.
தென் கலிஃபோர்னியா இஸ்லாமிய மையத்திலுள்ள மஸ்ஜிதுக்குச் செல்லும்போது மட்டும் பர்தா அணிவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அத்துடன் கைகளையும், கால்களையும் மறைக்கும் நீண்ட உடைகளையும் அணிந்து வந்தேன். பிறகு படிப்படியாக தோழிகளின் வீடுகளுக்குச் செல்லும்போது பர்தாவுடன் சென்றேன். கடைசியாக, வசந்தகால விடுமுறைக்குப் பிறகு கல்விக்கூடத்திநற்குச் செல்லும்போது பர்தாவைத் துணிந்து அணிந்து சென்றேன். பள்ளிக்கூடத்திற்கு பர்தாவுடன் செல்வதைப் பற்றித்தான் மிகவும் அச்சம் கொண்டிருந்தேன். ஆனால், இப்புதிய அனுபவம் மிகவும் உற்சாகம் மிகுந்த அனுபவமாக அமைந்துவிட்டது.
எல்லோரும் என்னை வியப்புடன் பார்ப்பது எனக்குள் மிகுந்த பரபரப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
வகுப்பு இடைவேளையின் போது சக மாணவிகள் பர்தாவைப் பற்றி பல கேள்விகளை எழுப்பினர். நான் பர்தா அணிந்திருப்பதைப் பார்த்த எனது ஆசிரியையும் அதன் காரணங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினார். ஆகவே, வரலாறு பாட வகுப்பின் போது அது பற்றி உரையாடலாம் எனக் குறிப்பிட்டார். இது நடந்தது பல ஆண்டுகளுக்கு முன்பு. திருமறை வலியுறுத்தும் பர்தாவின் பல நன்மைகளை எனது அனுபவத்தில் கண்டு கொண்டேன். முதலாவதாக, நான் பெண் என்று மரியாதை காட்டப்படுகிறது. ஒரு பால் பொருள் (Sex Object) என்று நோக்கப்படுவதில்லை. இரண்டாவதாக, நான் ஒரு இஸ்லாமியப் பெண் என்று மக்களால் அறியப்படுகிறது. பர்தா அணிவதன் மூலம் நான் மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும், மற்றவர்கள் என்னைத் தெரிந்து கொள்ளவும் முடிகிறது. நான் பர்தா அணியவில்லை என்றால், அதைப்பற்றி கேள்விகள் யாரும் கேட்கப்போவதில்லை.
ஆகவே, எனது நெறியான இஸ்லாம் பற்றிய செய்திகளை விளக்குவதற்கு கடைசியில் வழிவகுக்கும். பர்தாவைப் பற்றிய ஐயங்கள் எழுவதற்கு வாய்ப்பில்லாமல் போய் விடக்கூடும். பர்தா அணிதல் என்பது ஒருவரின் நெறியை பகிரங்கமாகப் பறைசாற்றுவதாகும். அதன் மூலம், ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ளக் கூடும். ஏனையவற்றைவிட மதத்தைப் பின் பற்றுதல் மிகவும் எளிதானது என்பதை உணர்த்துவதாக பர்தா அமைந்துள்ளது.
வீண் பேச்சுக்களில் ஈடுபடுவதில்லை என்பதை நான் நிச்சயமாக அறிந்து விடுவதைக் காட்டிலும், எனது தலைமுடிகள் பர்தாவினால் மறைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து விடுவது மிகவும் எளிதாகும். பர்தா அணிவதன் மூலம் ‘எனது குணநலன்களில் சிறந்த மாற்றங்கள்’ ஏற்பட்டுள்ளன. பர்தாவைப் பற்றி தவறான கருத்துக்களே மக்களிடம் இன்னும் நிலவி வருகிறது. ஏனெனில் மற்றவர்களை மதிப்பிடுவது என்பது மிகவும் எளிதாகும். பர்தா அணிந்த பெண்மணி ஒருவர் தனக்கு எதிரில் வரும் ஒருவரைப் பார்க்க நேரிடின், அவர் ‘நல்லவரா?’ அல்லது ‘கெட்டவரா?’ என்பதை எளிதில் மதிப்பிட்டு விடலாம்.
(இக்கட்டுரையாசிரியர் லைலா அஸ்கர், வெஸ்டர்ன் பிரிட்ஜ் (Western Bridge) பள்ளி மாணவி. இது அமெரிக்காவின் ‘லாஸ் ஏன்ஜல்ஸ் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையாகும் .

வடகிழக்கு மாநிலத்தவர்களை பீதியில் ஆழ்த்திய பிரச்சாரம்: ஹிந்துத்துவா தீவிரவாத இணையதளங்களுக்கு தடை!

CAG raps atomic authority for sleeping over nuclear safety
புதுடெல்லி:வடகிழக்கு மாநிலத்து மக்களை பீதியில் ஆழ்த்தி அவர்கள் கூட்டமாக வெளியேறக் காரணமான வதந்தி செய்திகளின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாத இணையதளங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு தடைச்செய்த 20 சதவீத இணையதளங்களும் ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்களுக்கு சொந்தமானவை என்று டைம்ஸ் ஆஃப் நாளிதழ் கூறுகிறது.
துவக்கத்தில் சோஷியல் நெட்வர்கிங் இணையதளங்கள் மூலமாக பாகிஸ்தான் இந்தியாவில் பீதியை கிளப்பி கலவரத்தை தூண்டுவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. ஆனால், அஸ்ஸாமில் நடந்த கலவரத்தின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்கள் கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அஸ்ஸாமில் சிறுபான்மை முஸ்லிம்கள் பழங்குடி போடோ இனத்தவர்களுக்கு எதிராக கலவரம் நடத்துவதாக அவதூறான செய்தியை கொந்தளிப்பை ஏற்படுத்தும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஹிந்துத்துவா தீவிரவாத இணையதளங்கள் வெளியிட்டுள்ளன.
சீன ஆக்கிரமிப்பை கண்டித்து திபெத்து மக்கள் தற்கொலைச் செய்த புகைப்படங்களையும், வீடியோக்களையும், ஏராளமான போஸ்டர்களையும் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய முஸ்லிம்கள் அஸ்ஸாமில் ஹிந்துக்கள் மீது நடத்துவதாக கீழே குறிப்பிட்டு ஹிந்துத்துவா தீவிரவாத இணையதளங்களில் வெளியிடப்பட்டிருந்தன.
சுதந்திர தினத்தில் பாகிஸ்தான் சிந்துமாகாணத்தில் உள்ள ஹைதராபாத்தில் அந்நாட்டு சுதந்திர தினத்தன்று குடியேற்றிய காட்சியை, இந்தியாவில் உள்ள ஹைதராபாத் நகரத்தில் முஸ்லிம்கள் பாக். கொடியை ஏற்றியதாக அவதூறான செய்தி பரப்பப்பட்டது.
கலவரத்தின் திரைமறைவில் வடகிழக்கு மாநிலத்து மக்களிடம் செல்வாக்கை பயன்படுத்தி அவர்களை கவர ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் தீவிரமாக முயன்றன. இதில் சில அமைப்புகள் போடோ வன்முறையாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும் பகிரங்கமாக அறிவித்தனர். பிற மாநிலங்களில் இருந்து கூட்டமாக வெளியேறிய வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் உணவும் மற்றும் சேவைகளை வழங்க ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் களமிறங்கின.
ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்தின் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்(ஏ.பி.வி.பி) இந்தியாவின் 20 நகரங்களில் 24 மணிநேர ஹெல்ப் லைன்களை ஏற்பாடுச் செய்தது. மேலும் அஸ்ஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான பஜ்ரங்தள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தது.