புதன், 30 மே, 2012


குமரியில் இஸ்லாத்தை நோக்கி மக்கள் அலைஅலையாய் ...............

குமரி மாவட்டத்தில் நம் ஜமாஅத்  செய்துவரும் தாவா பணிகள் பலதர பட்ட மக்களையும் இஸ்லாம் குறித்து அறிய ஆவல் ஊட்டுவதையும், இஸ்லாம் குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்து நம்மை  அணுகுகின்ற வர்களுக்கு நாம் அதற்கான விளக்கத்தை கொடுப்பதன் மூலம் பல்வேறு குடும்பங்கள் இறையருளால் சத்திய இஸ்லாத்தை தன் வாழ்வியல் வசந்தமாக ஏற்றுக்கொண்டு நம் ஜமாத்திலே இணைத்து மிகப்பெரிய பிரச்சரர்களாக அவர்கள் வாழ்ந்தும்  வருகின்றனர்.அதில் தக்கலையை சார்ந்த துரை என்ற சகோதரர் அப்துல்லாவாக மாறி தன்னுடைய மனைவியையும் இஸ்லாத்தில் இணைத்து கொண்டது,பழனியை சார்ந்த அன்பு என்ற  சகோதரர்  இந்துமத  பூசாரியாக  இருந்தும்  இஸ்லாம்  குறித்த  கடவுள்  கொள்கையால்  ஈர்க்கப்பட்டு இன்று சத்திய இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்று ஈசா என்று தனது பெயரை மாற்றி குரான் சுன்னா தான்  என்  வாழ்கை என்று பிரசார களத்தில் செயல்பட்டுகொண்டிருகிறார்.
அதே போன்று  நாகர்கோயில்லை சார்ந்த ஜேம்ஸ் என்ற சகோதரர் ஜாசிர் என்று தன்னுடைய பெயரை மாற்றி தன்னுடைய கும்பத்தையும் இஸ்லாத்தில் இனைதுகொண்டது, கோட்டாரில் சீலன் என்பவர் தன்னுடைய வாழ்க்கையை இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டு வாழ்வதோடு தன்னுடைய மிகப்பெரிய போரட்டத்திற்கு பிறகு தன் குழந்தைகளையும் தன் மனைவியையும் சத்திய இஸ்லாத்தில்  இணைத்து கொண்டதோடு இன்று அவருடைய  மனைவி பெண்கள் மதரசாவில் முறையாக மார்க்கத்தை கற்றுவருவதும்   குறிப்பிடத்தக்கது,அதே போன்று அனீஸ் என்ற சகோதரர் இஸ்லாத்தை எற்றுகொண்டதொடு தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை இஸ்லாத்தில் இனையவைத்து முழுமையான முஸ்லிம் குடும்பமாக வாழ்ந்துவருகின்றனர். இன்னும்  சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்று கொண்ட குடும்பம் செண்பகம் ராமன் புதூரை சார்ந்த அப்துர் ரஹ்மான் அவர்களின் கும்பம்மும் குறிப்பிடத்தக்கது.
இப்படி குமரியில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம்  மக்களை குடும்பம் குடும்பமாக இஸ்லாத்தை நோக்கி அணிவகுக்க செய்துள்ளது.அது மட்டும் இல்லாமல் தனி நபர்கள் இஸ்லாத்தை நேசிப்பதும் அதன் பட்டியலும்  நீண்டு கொண்டே செல்லுகின்றது அல்ஹம்துல்லிலாஹ்.இது போன்று இன்னும் அதிகமான மக்களுக்கு சத்திய பாதை இஸ்லாத்தை ஏற்று கொள்ள ஆசை இருந்தும் அதற்கான வழிமுறைகள் தெரியாமல் இருகின்றவர்கள் அதிகம், எனவே இன்னும் வீரியமாக நம் மக்கள் தங்களின் பிரசார களத்தை இது போன்ற மக்களுக்காக நம்முடைய தொடர்புகளை ஏற்படுத்தகூடிய வகையில் அமைத்துக்கொண்டால் இன்ஷா அல்லாஹ் இன்னும் அதிகமாக இஸ்லாத்தை நோக்கி மக்கள் வருகை தருவார்கள். இனி நம் பயணம் இதனை நோக்கி வீரியமாகட்டும்.

ஞாயிறு, 27 மே, 2012

+2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் இடம் பிடித்த முஸ்லிம் மாணவி


22-5-2012 அன்று வெளியான +2 பொதுத்தேர்வு முடிவில் தேர்வில் இராமநாதபுரம் வெளிப்பட்டிணம், கொல்லம்பட்டறை தெருவைச்சேர்ந்த E.N.S ஜாஹீர் ஹுஸைன் அவர்களின் புதல்வி பைஃசூன் நிஷா அவர்கள் 1169/1200 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தையும், முஸ்லிம் மாணவ, மாணவிகளில் மாவட்டத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். மேலும் மேற்படிப்பாக மருத்தவ துறையில் தன்னை இணைத்துக் கொண்டு பொதுச் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
இவரை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 23:05:2012) மாவட்ட மற்றும் TNTJ வெளிப்பட்டிணம் கிளை நிர்வாகிகள் நேரில் சந்தித்து திருக்குர்ஆன் தமிழாக்கம், இஸ்லாம் பெண்களின் உரிமையை பரிக்கின்றதா? மற்றும் பெண்கள் குறித்த மார்க்க சம்பந்தமான புத்தகங்கி பாராட்டினர். அல்ஹம்துலில்லாஹ்.

வாழ்வில் விரக்தியா ? என்ன செய்ய ?


நம் வாழ்வில் ஏற்படுகின்ற இழப்புகள்,ஏமாற்றங்கள்,  துன்பங்களை நம்மால் தாங்க முடியாமல் விரக்தியின் விளிம்பிற்கே சென்று விடுகிறோம். அதற்கும் மேலாக மரணத்தை ஆசைப்படும் நிலைக்கு சென்றுவிடுகிறோம். இந்த மாதிரியான நேரங்களில் நாம் என்ன செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் நம்க்கு வழி காட்டியுள்ளார்கள்.

" தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரண்மாக உங்களில் யாரும் மரணிக்க ஆசைபடக் கூடாது. யாராவது அந்த நிலைக்கு தள்ளப் பட்டால் " இறைவா நான் வாழ்வது எனக்கு சிரந்தாக இருந்தால் என்னை வாழ வை. நான் மரணிப்பது எனக்கு நல்ல்தாக இருந்தால் என்னை மரணிக்கச் செய். என்று கூறட்டும் " . என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                                                                                      அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
                                                                                                 புகாரி 5671

செவ்வாய், 22 மே, 2012

இஸ்லாத்தில் நடுநிலை – தக்கலை கிளை பயான்

குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 18.05.12 அன்று சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ச்கோதரர்:அபூ ஹசன் அவர்கள் ‘இஸ்லாத்தில் நடுநிலை’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

திங்கள், 21 மே, 2012

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

துபாய் : உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் கத்தார் முதலிடத்தை பிடித்துள்ளது.இது குறித்து சர்வே ஒன்றை அமெரிக்காவின் போர்பஸ் பத்திரிகை கருத்து கணிப்பு நடத்தியது. இதில் கத்தார்,துபாய், குவைத் உட்பட 15 நாடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. இதில் 1.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கத்தார் நாடு தனி நபரின் ஆண்டு வருமானம் சுமார் 88 ஆயிரம் அமெரிக்கக டாலராக உள்ளது என தெரிவித்துள்ளது. அதற்குஅடுத்த படியாக ஐக்கிய அரபு குடியரசு 47 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர்ஆகவும் உள்ளது. இந்த நாடுகளின் வரிசையி்ல குவைத் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மேலும் வரும் 2022-ம் ஆண்டில் கால்பந்திற்கான உலககோப்பை போட்டியை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இடத்தில் உள்ள லக்சம்பர்க்கின் ஆண்டு வருமானம் சுமார் 81 ஆயிரம் டாலராகும். மூன்றாம் இடத்தில் உள்ள சிங்கப்பூர் வருமானம் 56 ஆயிரத்து700 டாலராகும். நார்வே, புருனே, யை தொடர்ந்து ஐக்கிய அரபு குடியரசு, அமெரிக்கா, ஹாங்காங், சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் முதல் ஐந்து இடங்களுக்குள் மாறி மாறி வந்து கொண்டுள்ளது. அதேசமயம்புருண்டி, லிபேரியா, ரீபப்ளி்க் ஆப் காங்கோ போன்ற நாடுகளின் தனிநபர் வருமானம் சுமார் 300 முதல் 400 அமெரிக்க டாலர் என்ற அளவில் மட்டுமே உள்ளது. 

எய்ட்ஸ் ஒழிப்புக்காக "சுன்னத்' செய்து கொள்ள ஜிம்பாப்வே நாட்டு எம்.பி.,க்கள் முடிவு


லண்டன்: எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு முன்னோடியாக, ஜிம்பாப்வே நாட்டு எம்.பி.,க்கள், 170 பேர் "சுன்னத்' செய்து கொள்ள முன்வந்துள்ளனர்.

ஒழுக்கக் குறைபாட்டின் காரணமாக, ஆப்ரிக்க நாடுகளில், எய்ட்ஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க, கடந்த 2010ம் ஆண்டு முதல், தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுன்னத் செய்து கொள்வதால், எய்ட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு குறைவு என்பதால், ஆப்ரிக்க தலைவர்கள் பலர், சுன்னத் செய்து கொண்டுள்ளனர். ஜிம்பாப்வே நாட்டில், முஸ்லிம் அல்லாத இளைஞர்களும், "சுன்னத்' செய்து கொள்கின்றனர். ஜிம்பாப்வே நாட்டு பார்லிமென்டில், கடந்த வாரம், எய்ட்ஸ் தடுப்பு குறித்த பிரசார கருத்தரங்கு நடந்தது. இதில் பேசிய எம்.பி., ஒருவர், பெண்கள் அழகாக இருப்பதால், அவர்கள் மீது ஆண்களுக்கு ஆசை வருகிறது. எனவே, பெண்களுக்கு மொட்டை அடிக்க வேண்டும். இதன் மூலம், எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்கலாம்' என்றார். இதற்கு, பல தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
எய்ட்ஸ் நோய் தடுப்பு விஷயத்தில், எம்.பி.,க்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும் என, தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, 170 எம்.பி.,க்கள், "சுன்னத்' செய்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளனர். பெண் எம்.பி.,க்கள், தங்கள் கணவருக்கு சுன்னத் செய்ய வற்புறுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்றுள்ளனர். முஸ்லிம் மத பெரியவர்களை கொண்டு, செய்வதற்கு பதில், மருத்துவர்களை கொண்டு, "சுன்னத்' செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளி, 18 மே, 2012

விதியை நம்புதல்

விதியை நம்பவில்லை என்று வைத்துக் கொள்வோம் அப்போது வேறு விதமான கேள்விகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒவ்வொரு மனிதனும் அவனவன் முடிவின்படி தான் செயல்படுகிறான் இதில் இறைவனின் தலையீடு ஏதுமில்லை என்று நம்பினால் நீங்கள் கேட்டுள்ள கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் கடவுள் என்பவன் பலவீனனாக கையாளலாகாதவனாகக் கருதப்படும் நிலை இதனால் ஏற்படும்.

நடந்தது நடந்து கொண்டிருப்பது இனி நடக்கவிருப்பது அனைத்தையும் அறிந்தவன் என்பது கடவுளின் பண்பாகும். அந்தப்பண்பு இல்லாதவன் கடவுளாக இருக்க முடியாது. நாளைய தினம் நீங்கள் சென்னை வரவிருக்கிறீர்கள். இது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியுமா என்று கேட்டால் தெரியாது என்று நீங்கள் கூறினால் அப்படி ஒருவனை இறைவனாக ஏற்கத் தேவையில்லை. எனக்கு எப்படி நாளை நடப்பது தெரியாதோ அது போல இறைவனுக்கும் நாளை நடப்பது தெரியாது என்று ஆகிறது. நாளை நான் சென்னை செல்வது இறைவனுக்குத் தெரியும் என்பது உங்கள் விடையாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்திருக்கிறானோ அது நடந்து தீரவேண்டும் என்ற முடிவு அதனுள் அடங்குகிறது. நாளை எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்துள்ளானோ அதைத் தான் உங்களால் செய்ய முடியுமே தவிர அதை மீற முடியாது என்பதும் இந்த விடைக்குள் அடங்கியுள்ளது.

அதாவது நாளை என்ன நடக்கும் என்பது இறைவனுக்குத் தெரியும் என்று நீங்கள் நம்பினால் விதியின் நம்பிக்கையும் அதனுள் அடங்குகிறது. அவனுக்குத் தெரியாது என்று நம்பினால் அப்படி ஒரு இறைவன் தேவையில்லை என்று ஆகிறது. இரண்டு நம்பிக்கைளிலுமே சில சங்கடங்கள் உள்ளன. இதனால்தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் விதியைப் பற்றி மட்டும் சர்ச்சை செய்யாதீர்கள்! உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் அழிந்தது விதியில் சர்ச்சை செய்த காரணத்தினாலேயே என்று கூறியுள்ளார்கள் இஸ்லாத்தின் எந்தக் கொள்கை, கோட்பாடு, சட்டத் திட்டம் பற்றி என்ன கேள்வி கேட்கப்பட்டாலும் அதற்கு அறிவுப் பூர்வமான விடை இஸ்லாத்தில் உண்டு. விதியைப் பற்றி மட்டும் விவாதிக்க நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தடை விதித்து விட்டதால் அதற்கு மேல் எவரும் விளக்கம் கூற முடியாது. அப்படிக் கூற ஆரம்பித்தால் மேலே நாம் சுட்டிக் காட்டிய இரண்டு சங்கடங்களில் ஒன்றை எதிர் கொள்ளாமல் இருக்க முடியாது.

அறிவுப் பூர்வமான பல்லாயிரக்கணக்கான கொள்கை கோட்பாடுகளைத் தந்த இறைவன் நம்மைச் சோதிப்பதற்காகக் கூட அந்த நிலையை ஏற்படுத்தியிருக்கலாம். விதியையும் நம்பவேண்டும் மனிதர்கள் நல்லறங்களில் ஈடுபடவேண்டும் அவரவர் செயலுக்கு அவரவர் பொறுப்பு என்பதையும் நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. அதே நேரத்தில் விதியை நம்புவதால் மனிதகுலத்துக்குக்; கிடைக்கும் நன்மைகளை நினைத்துப் பார்த்தால் அதற்காகவாவது விதியை நம்புவது தான் மனித குலத்துக்கு உகந்ததாகும். ஒரு மனிதன் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி ஒரு காரியத்தில் ஈடுபடுகிறான். அந்தக் காரியம் கைகூடவில்லை என்று வைத்துக் கொள்வோம். விதியை நம்புகின்றவன் நாம் என்ன தான் முயன்றாலும் இறைவனின் நாட்டமும் இருக்க வேண்டுமல்லவா? எனக் கூறி மறுநாளே சகஜநிலைக்கு வந்து விடுவான்.

அவன் விதியை நம்பாதவன் என்று வைத்துக் கொள்வோம் இவ்வளவு பாடுபட்டும் கைகூடவில்லையே என்று புலம்பியே மனநோயாளியாவான் அந்த அளவுக்குப் போகாவிட்டாலும் சகஜ நிலைக்கு வருவது அதிகம் தாமதமாகும். மனிதன் துன்பங்களைச் சந்திக்கும்போது ஆடிப்போய் விடாமல் தடுக்கும் கேடயமே விதி என்னும் நம்பிக்கை. விதியை நம்பி முடங்கிக்கிட என்று மற்ற சில சமயங்கள் கூறுவது போல் இஸ்லாம் கூறவில்லை மனிதனின் நடவடிக்கைக்கு எந்தத் தடங்கலும் ஏற்படுத்தாத வகையில் தான் இஸ்லாம் விதியை நம்பச் சொல்கிறது. அந்த நிமிடம் வரை என்ன நடந்து விட்டதோ அது தான் நமது விதி என்பது நமக்குத் தெரியும் அடுத்தநிமிடம் நடப்பது நமக்குத் தெரியாததால் எதிர்கால விதி நமக்குத் தெரியாது.

எது நடந்து முடிந்து விட்டதோ விதி இன்னதென்று தெரிந்து விட்டதோ விதியை நம்பி ஆறுதல் படு! எது நடக்கவில்லையோ அதில் நீயாக திட்டமிட்டுச் செயல்படு என்று இஸ்லாம் கூறுகிறது. இதனால் மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு எந்தத் தடையும் ஏற்படாது. தொழுவது, நோன்பு நோற்பது போன்ற வணக்கங்களை விதியின் அடிப்படையில் நாம் செய்கிறோம் என்று காரணம் கூறி தங்கள் செயலை நியாயப்படுத்துவோர் உளப்பூர்வமாக அவ்வாறு நியாயப்படுத்த முடியாது. ஒருவருக்கு எவ்வளவு செல்வம் கிடைக்கவேண்டும் என்ற விதி இருக்கிறதோ அதன்படி செல்வம் வந்து சேர்ந்து விடும் என்று நம்பி ஒருவர் எந்தத் தொழிலும் செய்யாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கமாட்டார். மாறாக செல்வத்தைத் தேடி அலைவார் இந்த அக்கறையை வணக்க வழிபாட்டுகளுக்கும் வழங்க வேண்டும் என்று அவர் நினைக்காதது முரண்பாடாகவும் உள்ளது.

எனவே விதியைப் பற்றி சர்ச்சைகளைத் தவிர்த்து விட்டு மனிதர்களுக்கு அறிந்து கொள்ளமுடியாத ஒன்றிரண்டு விஷயங்களை அல்லாஹ் வைத்திருக்கிறான் என்று முடிவு செய்து விதியை நம்புவதால் கிடைக்கும் பயன்களை மனதில் நிறுத்தி விதியை நம்புவது தான் நல்லது

புதன், 16 மே, 2012

தினத்த்ந்தியை புறக்கணிப்பீர் .


தினத்த்ந்தியை புறக்கணிப்பீர் .
      முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்கும் தினத்த்ந்தியின் விற்பனையை குறைப்போம்.