செவ்வாய், 31 ஜூலை, 2012

அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலை: மத்திய மாநில அரசுகளுக்கு TNTJ கண்டனம்!


நாகர்கோவில்:வீடுகள் மீது கல்வீச்சு! – நள்ளிரவில் முஸ்லிம்கள் சாலை மறியல்!

குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நடந்த மறியல் போராட்டம்2
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள இடலாக்குடி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர் ஆகும். இடலாக்குடியில் ஆஸாத் கார்டன் மற்றும் ரஹ்மத் நகர் பகுதிகளில் நேற்று சில மர்ம நபர்கள் முஸ்லிம் ஆண்கள் ரமலான் இரவு சிறப்புத் தொழுகைக்கு(தராவீஹ்) சென்ற வேளையில் வீடுகள் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் ஷேக் மன்சூர், அஹ்மத் கான், நூர்ஜஹான் ஆகியோரது வீடுகள் சேதமடைந்தன. இதனால் அப்பகுதி முஸ்லிம்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவத்தை கண்டித்து அப்பகுதியில் வாழும்  ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் நள்ளிரவு 11 மணி அளவில் திரண்டு வந்து நாகர்கோவில்-கன்னியாகுமரி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கல்வீச்சில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நடந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், டி.எஸ்.பி.பாஸ்கரன் ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். டி.எஸ்.பி. பாஸ்கரன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கல்வீச்சு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படும், கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையேற்று பொதுமக்கள் 1 மணிக்கு சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் 3 மணி நேரம் பரபரப்பு நிலவியது.
அண்மையில் நாகர்கோவில் பறக்கை ரோட்டைசேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் கொலையை தொடர்ந்து நடந்த கல்வீச்சு சம்பவத்தால் அந்த பகுதியில் 10 நாட்களாக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டனர். நிலைமை கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பறக்கை ரோட்டில் உள்ள பிஸ்மி நகரில் காஜா நஜ்முதீன், ஜாகிர் உசேன் ஆகியோரது வீடுகள் முன்பு நிறுத்தியிருந்த கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது. மேலும் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் அந்த பகுதியில் மீண்டும் பதட்டம் நிலவியது.
இதையடுத்து பிஸ்மிநகர், வெள்ளாடிச்சிவிளை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் ரோந்து வாகனத்திலும் சுற்றி வந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் வீடுகள் மீது கல்வீசப்பட்ட சம்பவம் பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் இடலாக்குடி, பறக்கை ரோடு, பிஸ்மிநகர், இளங்கடை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே கல்வீச்சு தொடர்பாக ஷேக்மன்சூர், அகமதுகான், நூர்ஜஹான் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் மெத்தனப்போக்கா குற்றவாளிகளுக்கு தூண்டுகோலாக அமைகிறது? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்தாம் இத்தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

ஞாயிறு, 29 ஜூலை, 2012

ரோஹிங்கியா முஸ்லிம் கூட்டுப் படுகொலை குறித்து விசாரணை தேவை: ஐ.நா!

un-urges-inquiry-over-rohingya-killings
ஐ.நா:மேற்கு மியான்மரில் கடலோர மாநிலமான ராக்கேனில் அரசு ஆதரவுடன் ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் அத்துமீறல்கள் குறித்து விசாரணை தேவை என ஐ.நா மனிதஉரிமை கமிஷன் தெரிவித்துள்ளது.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பான்மை புத்த சமூகத்தினர் நடத்தி வரும் தாக்குதல்களை தடுப்பதற்காக அப்பகுதிக்கு அனுப்பப்பட்ட ராணுவமே முஸ்லிம்களை குறிவைப்பதாகவும், இது துக்ககரமானது எனவும் ஐ.நா மனித உரிமை கமிஷனின் தலைவர் நவி பிள்ளை தெரிவித்துள்ளார்.
ஐ.நா அகதிகள் விவகார ஏஜன்சியின் அறிக்கையின் படி 80 ஆயிரம் முஸ்லிம்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களில் இருந்து புலன் பெயர்ந்துள்ளார்கள் என கூறுகிறது.
முஸ்லிம்களுக்கு எதிராக ராணுவத்தின் ஆதரவுடன் நடக்கும் வகுப்புவாத தாக்குதல்கள் குறித்து சுதந்திர ஏஜன்சிகளிடமிருந்து ஏராளமான செய்திகள் மனித உரிமை கமிஷனுக்கு கிடைப்பதாக நவி பிள்ளை தெரிவித்தார்.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்து மோசமான வார்த்தைகளை பிரயோகிக்கும் ஊடகங்களையும், அரசையும் கண்டித்த நவி பிள்ளை, வன்முறைகளை தடுக்க அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மியான்மரில் நிலைமைகளை குறித்து நேரடியாக சென்று ஆராய ஐ.நா பிரதிநிதியை ராக்கேனுக்கு செல்ல அனுமதி அளித்த மியான்மர் அரசின் தீர்மானம் வரவேற்கத்தக்கது எனினும், இதனால் சுதந்திரமான விசாரணை நடக்காமல் இருக்காது என்று குறிப்பிட்டார்.
இதனிடையே, ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு அபயம் அளிக்க இயலாது என்று பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் தற்பொழுது 3.5 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதி முகாம்களில் வசிக்கின்றார்கள். இவர்கள் அனைவரையும் பாதுகாக்கும் சக்தி பங்களாதேஷ் அரசுக்கு இல்லை என ஷேக் ஹஸீனா அல்ஜஸீராவுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பேய் பிசாசுகளைத் துரத்தியடித்த தவ்ஹீத் ‎ஜமாஅத்


“பேய் நடமாட்டத்தால் மக்கள் பீதி!”, “பிசாசு நடமாட்டத்தால் மக்கள் கலக்கம்” என்று ‎அடிக்கடி பரபரப்பு செய்தி வெளியிட்டு, தங்களது விற்பனையை சூடுபிடிக்க வைத்து ‎பத்திரிக்கைகள் காசு பார்க்கின்றன. அந்த வகையில் கடந்த 12.07.2012 அன்று தினமலர் ‎பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ‎உள்ள ஆத்தங்கரை பகுதியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் பெண் பேய் ஒன்று சுற்றிக் ‎கொண்டிருப்பதாகவும், அது மொபைல் போனில் படம் எடுக்கப்பட்டதாகவும் ஒரு ‎பரபரப்பு செய்தியை வெளியிட்டிருந்தது தினமலர். இதே செய்தியை சன் டிவியும் ‎ஒளிபரப்பியது
‎ ‎ 
தவ்ஹீத் ‎ஜமாஅத்தின் மாநிலத்தலைமையகத்தின் வழிகாட்டுதலின் பேரில் ‎திருவள்ளூர் மாவட்டம்,  ஆவடி கிளையின் மூலமாக மக்கள் மத்தியில் ‎விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்து அனறைய தினமே பேய் நடமாட்டம் இருப்பதாக சொல்லப்பட்ட ‎அந்த மின் கம்பத்திற்கு தவ்ஹீத் ‎ஜமாஅத்தின் நிர்வாகிகள் சென்றனர். அந்த மின் கம்பத்தில் ‎ஜமாஅத்தின் கொடிகளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்ட ‎ஆரம்பித்தவுடன் அந்தப்பகுதியில் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.‎
‎ 
ஊரில் உள்ளவர்களெல்லாம் பேய், பேய் என்று பயந்து பீதியடைந்து தலைதெறிக்க ‎ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் இவர்கள் தைரியமாக, எந்த மின் கம்பத்தில் பேய் ‎உள்ளதாக சொல்லப்படுகின்றதோ அந்த மின் கம்பத்திலேயே போய் கொடிகளைக் ‎கட்டுகின்றனரே! என்று அந்தப் பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.‎
பேய் பயத்தை விரட்ட சிறப்புப் பிரச்சாரம் :‎
‎ 
உடனே அங்கு பிரச்சாரக் கூட்டம் துவங்கியது. திருவள்ளூர் மாவட்டத் துணைச் ‎செயலாளர் சகோ.ஹுசைன் அலி அவர்கள், “பேய் பிசாசு உண்டா?” என்ற தலைப்பில் ‎உரை நிகழ்த்தினார்.‎
‎ 
அவர் தனது உரையில் மூன்று விஷயங்களுக்காக பேய் நடமாட்டம் இருப்பதாக ‎மக்களுக்கு மத்தியில் பீதியை ஏற்படுத்துவார்கள்.‎
‎ 
• சிலர் சமூக விரோத செயல்களைச் செய்யும் பொழுது அதை மக்கள் பார்க்கக் ‎கூடாது என்பதற்காக இப்படி ஒரு பீதியை ஏற்படுத்தி தங்களின் சட்ட விரோத ‎செயல்களை எந்த பிரச்சனையும் இல்லாமல் செய்து கொள்வார்கள்.‎

• இடங்களை விற்பனை செய்வதில் புரோக்கர்களாக செயல்படும் சில ‎இடைத்தரகர்கள் அந்தப் பகுதியில் உள்ள இடத்தின் மதிப்பை குறைக்க வேண்டும் ‎எனத் தீர்மானித்து விட்டால், அந்தப் பகுதியில் இப்படி ஒரு பீதியை ஏற்படுத்துவார்கள். ‎அதனால் இடத்தின் விலை கடுமையாக சரிந்துவிடும். இப்படி வியாபாரத்துக்காக ‎செய்பவர்களும் உண்டு.‎

• பேய் பிசாசுகளை விரட்டுகிறோம்; தாயத்துகளைக் கட்டுகிறோம்; மந்திரங்களைச் ‎சொல்கிறோம் என்று சொல்லி தொழில் நடத்தக் கூடியவர்கள் இப்படி ஒரு புரளியைக் ‎கிளப்பி விட்டு தங்களுடைய தொழிலைப் பெருக்கிக் கொள்வார்கள்.‎

இப்படி மூன்று சாராரில் யாரோ ஒருசாரார்தான் இதைச் செய்து இருக்கிறார்கள் ‎என்று மக்களுக்கு விளக்கப்பட்டது.‎
‎அதே போன்று அந்தப் பேய் வரத் துவங்கியதிலிருந்து மின் கம்ப விளக்குகளும் ‎எரியவில்லை என மக்கள் கூறியதிலிருந்து இது திட்டமிட்ட சதி வேலை என்பது ‎அம்பலமானது.‎
‎ 
இந்த சதிகாரக் கும்பலை விரைவில் சட்டத்திற்கு முன்னால் நிறுத்துவோம் எனக் ‎கூறி, மேலும் உடனடியாக மின்சார வாரியத்தை அணுகி பழுது போன விளக்குகளைச் ‎சரி செய்து தருவதாக மின்சார வாரியமும் உறுதி அளித்த செய்தியையும் ‎மக்களிடத்தில் கொண்டு சென்ற பிறகு மக்களுக்குப் பிரச்சனை என்ன என்பது விளங்க ‎ஆரம்பித்தது. அடுத்து உண்மையில் அந்தப் பேய்க்கு சக்தி இருக்கும் என்று ‎சொன்னால் எங்களை ஏதாவது செய்யச் சொல்லுங்களேன் பார்ப்போம் என்று ‎அறைகூவல் விடப்பட்டது.‎
‎ 
மேலும் பகலில் வந்தால் பேய் வராது என்று சொல்வார்கள். அதனால்தான் இரவில் ‎வந்து இருக்கிறோம் எனக் கூறிய பொழுது மக்களுக்கு ஓரளவு பயம் தெளிய ‎ஆரம்பித்தது. இறுதியாக இஸ்லாம் உலகத்திற்கு சொல்லக்கூடிய செய்தி எனக் கூறி, ‎‎“உயிர் என்பது அல்லாஹ்வுடைய கட்டுப்பாட்டில் உள்ளது. அல்லாஹ்வின் ‎கட்டுப்பாட்டை மீறி அவன் போட்டுள்ள திரையைத் தாண்டி இறந்துவிட்ட எந்த ‎ஆன்மாவாலும் இந்த உலகத்திற்குத் திரும்பவும் வரமுடியாது” எனச் சொல்லி பேய்கள் ‎என்பது நூறு சதவிகிதம் பொய் என்று அவர் பேசி முடித்தார்.‎
மொபைல் போனில் பேய்ப் படம்(?):‎
‎ 
இவ்வாறு பிரச்சாரம் செய்து முடித்தவுடன், ஒரு சகோதரர் பேய்கள் இருப்பதற்கு ‎ஆதாரம் உள்ளதாகக் கூறி மின் கம்பத்தில் பேய் நின்ற பொழுது எடுக்கப்பட்ட படம் ‎தனது மொபைல் போனில் உள்ளதாகக் கூறி எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை ‎கொண்டு வந்து காட்டினார். அந்தப் புகைப்படத்தை நீங்கள் எப்பொழுது எடுத்தீர்கள் ‎எனக் கேட்ட பொழுது, “எனக்கு என்னுடைய நண்பன் அனுப்பினார்” எனக் கூறினார். ‎அந்தப் புகைப்படம் ஒன்றுதான் ஆதாரம் என மக்களும் நம்மிடம் தெரிவித்தனர். ‎மேலும் அந்தப் புகைப்படம்தான் தங்களை பெரும் பயத்தில் ஆழ்த்தியதாகவும் ‎அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். அந்தப் புகைப்படத்தை அந்த இடத்திலேயே ஆய்வு ‎செய்த பொழுது அந்தப் புகைப்படம் இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் ‎செய்யப்பட்டது தெரியவந்தது. அதாவது அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட அந்த மின் ‎கம்பத்திற்குப் பின்னால் உள்ள வீடு மற்றும் அந்தப் பகுதியில் உள்ள மரம் எதுவும் ‎புகைப்படத்தில் காணவில்லை. இதுவே இந்தப் புகைப்படம் போலியானது என்பதற்குப் ‎போதுமான சான்றாகும் என மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. அங்கு கூடியிருந்த ‎மக்கள் கூட்டத்தைப் பார்த்து பிரச்சனை எனக் கருதி அங்கு வந்த காவல்துறை ‎அதிகாரி ஒருவர் நம்முடன் சேர்ந்து கொண்டு அவரும் மக்களுக்கு தெளிவுபடுத்தினார். ‎பிறகு அந்தப் பகுதியைச் சார்ந்த சகோதரி ஒருவர் எங்கள் தெருவிற்கும் வந்து ‎பிரச்சாரம் செய்யுங்கள் எனக் கேட்டுக் கொண்டதை அடுத்து அந்த இடத்திற்கும் ‎சென்று பிரச்சாரம் செய்யப்பட்டது.‎
‎  
எனவே இத்தகைய மூடநம்பிக்கைகளை ஒழிக்க களம் காணுவதுடன், இதன் ‎மூலம் தூய இஸ்லாத்தையும் மக்கள் மத்தியில் நாம் எத்திவைக்க வேண்டும் ‎என்பதையும் இதன் வாயிலாக  கோரிக்கையாக வைத்துக் ‎கொள்கின்றோம்.‎

சனி, 28 ஜூலை, 2012

மியான்மர் முஸ்லிம்களுக்கான உதவிகளை தடுக்கும் புத்த சாமியார்கள்!

Monks in Myanmar
லண்டன்:பர்மாவில் புத்த சாமியார்கள் கூட்டுக் கொலைச் செய்யப்படும் முஸ்லிம்களுக்கு வரும் உதவிகளை தடுப்பதாக பிரிட்டிஷ் பத்திரிகையான இண்டிபெண்டண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. புத்த சாமியார்கள் நேரடியாகவே முஸ்லிம் இன அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.
மனிதநேயமான எவ்வித முன்னுரிமையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்காமல் அவர்களுக்கு வரும் அனைத்து உதவிகளையும் தடுத்து நிறுத்துகின்றனர். மியான்மரில் சிறுபான்மையினரை வேண்டுமென்றே துடைத்தெறிய புத்த சன்னியாசிகள் திட்டம் தீட்டுகிறார்கள். தற்பொழுது மியான்மரில் நடந்து வரும் அனைத்து கூட்டுப் படுகொலைகள் மற்றும் இன அழித்தொழிப்புகளுக்கும் தலைமை தாங்கி ஊக்கப்படுத்துபவர்கள் புத்த சன்னியாசிகள் தாம் என இண்டிபெண்டண்ட் பத்திரிகை குற்றம் சாட்டுகிறது.
கடந்த தினங்களில் புத்த சாமியார்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அனைத்து வித மனிதநேய உதவிகளையும் தடுத்துள்ளனர். இதனை அவர்கள் அரசின் ஆதரவுடன் நடத்தி வருகின்றனர் என்று அப்பகுதியில் இயங்கும் அர்கான் என்ற மனித உரிமை அமைப்பின் இயக்குநர் கிறிஸ் லியோ கூறுகிறார்.
முஸ்லிம்கள் அபயம் தேடியிருக்கும் முகாம்களை புத்த சாமியார்கள் சுற்றி வளைத்துள்ளனர். அவர்கள் முஸ்லிம்களுக்கு எந்த உதவிகளும் செல்லாமல் தடுத்து வருகின்றனர் என்று கிறிஸ் லியோ கூறுகிறார்.
மியான்மரில் நடந்து வரும் முஸ்லிம் இனப் படுகொலைகள் குறித்து ஜனநாயகத்தின் பாதுகாவலராக இரட்டை வேடம் போடும் ஆங் சான் சூகி மெளனம் சாதித்து வருகிறார். சமாதானத்தின் தூதர்களாக உலகை வலம் வரும் ஆங் சான் சூகியும், தலாய் லாமாவும் இவ்விவகாரத்தில் வேண்டுமென்றே மெளனம் சாதிக்கின்றனர்.

பிரேசிலில் மிக வேகமாக வளரும் இஸ்லாம்!

Muslim performing prayer in Brazil
ரியோடி-ஜெனீரா:பிரேசிலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரேசிலின் ரியோடி ஜெனீரா நகரத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சி அதிகமாக உள்ளது.
பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட பிரேசில் சமூகம் இஸ்லாத்தின் பால் கவரப்படுவதற்கோ, இஸ்லாத்தின் சின்னங்களை அணிவதற்கோ எவ்வித தடைகளையும் விதிப்பதில்லை என இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட இளம்பெண் ஃபாத்திமா கூறுகிறார்.
2000-ஆம் ஆண்டு சூழ்நிலை புள்ளிவிபரப்படி 27,239 முஸ்லிம்கள் பிரேசிலில் வசித்தார்கள். தற்பொழுது பிரேசிலில் இத்திஹாதுல் இஸ்லாமியாவின் புதிய ஆய்வின் படி முஸ்லிம் மக்கள் தொகை பதினைந்து லட்சமாக அதிகரித்துள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் ரியோடி ஜெனீராவில் 500 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களில் 85 சதவீதமும் பிரேசிலை சார்ந்தவர்கள் ஆவர்.
ஃபலஸ்தீன், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளைச் சார்ந்த ஏராளமானோர் பிரேசிலில் வசிக்கின்றனர்.

குஜராத் மாடல் முஸ்லிம் இனப்படுகொலை!

Assam Muslim genocide has same model as Gujarat genocide!
குவஹாத்தி:ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழும் கொக்ராஜர் மாவட்டத்தில் உள்ள படிபாரா கானிப்பாஸா கிராமம் குடிசைகள் பற்றி எரிந்து புகை மேலெழும்புகிறது.
. “ராணுவ உடையில் 30க்கும் மேற்பட்ட போடா வன்முறையாளர்கள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்தனர். எங்களால் அவர்களை தடுக்க முடியவில்லை. எங்கள் கண் முன்னால் ஒருவரை சுட்டுக் கொன்றார்கள். வீடுகளை தீயிட்டு கொழுத்தினார்கள். விவசாயப் பொருட்களை கொள்ளையடித்தார்கள். துப்பாக்கி முனையில் எங்களை நிறுத்தி இங்கிருந்து சென்றுவிடுங்கள்” என மிரட்டினார்கள். கொக்ராஜர் கிராமத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் நயான் அலி(வயது 22) கூறுகிறா
டெஹல்கா பத்திரிகை அஸ்ஸாமில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை வெளிக்கொணர்ந்துள்ளது.நஸீருல்(வயது 4), ராக்கிஃபுல்(வயது 6) சகோதரர்களான இருவரும் போடோ இனவெறியர்களை கண்டதும் ஓடத் துவங்கினர். கொஞ்ச தூரம் சென்ற பிறகு இருவரும் திரும்பி பார்க்கையில் அவர்களது பெற்றோரை காணவில்லை. அவர்கள் திரும்பிச் சென்றபொழுது கிராமம் பற்றி எரிந்து கொண்டிருந்தது. அவர்கள் உதவியற்ற நிலையில் அழுதுகொண்டிருந்தார்கள். அப்பொழுது அக்கிராமத்தின் மூத்த நபரான மும்தாஸ் அலி(வயது55) அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு உயிரை காப்பாற்ற தப்பிச் சென்றார்.
“நான் அச்சிறுவர்களை அடையாளங் கண்டுகொண்டேன். அவர்கள் நவ்ஷாத் அலி என்பவரின் பிள்ளைகள். நவ்ஷாதையோ அவரது மனைவியையோ காணமுடியவில்லை. எனவே அவ்விரு சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு உயிரைக் காப்பாற்ற நான் அங்கிருந்து பயந்து ஓடினேன்” என மும்தாஸ் அலி நடந்த நிகழ்வை நினைவு கூறுகிறார்.
கடந்த நான்கு தினங்களாக அச்சிறுவர்களின் பெற்றோரை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர். இதைப்போல நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் குடும்பத்தினரை காணாமல் அகதி முகாமில் உள்ளதாக அகதிகள் முகாமில் உள்ளோர் கூறுகின்றனர்.
பி.எல்.டி(போடோ லிபரேசன் டைகர்ஸ்) என்.டி.எஃப்.பி(நேசனல் டெமோக்ரேடிக் ஃப்ரண்ட்ஆஃப் போடோ லாண்ட்) ஆகிய கிளர்ச்சி பிரிவினைவாத போடோ குழுக்களை சேர்ந்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் தீவிரமாக பங்கேற்றுள்ளனர். கலவரம் நடத்துவதில் அனுபவம் பெற்றவர்கள் என கிராமவாசிகள் கூறுகின்றனர்.
ஆயுத கலகங்களில் இவர்கள் ஈடுபடுவதால் துப்பாக்கிகள் இவர்களுக்கு சுலபமாக கிடைக்கிறது. சிறுபான்மை சமுதாயங்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை தேடி இவர்கள் ஆவேசத்துடன் பாய்ந்து செல்கின்றார்கள்.
குஜராத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்தியது போன்ற திட்டமிட்ட இனப் படுகொலைகளை போடோ இனவெறிக் குழுக்கள் அஸ்ஸாமில் அரங்கேற்றியிருப்பதாக கூறப்படுகிறது.
மரண எண்ணிக்கை அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களை விட எத்தனையோ மடங்கு அதிகம் என கிராமவாசிகள் கூறுகின்றனர்.
உறவினர்கள் இல்லாத நூற்றுக்கணக்கான குழந்தைகள் அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். கொக்ராஜரில் ஒரு சிறிய பள்ளிக்கூடத்தை அகதிகள் முகாமாக மாற்றியுள்ளனர். 5 அறைகளை மட்டுமே கொண்ட இந்த பள்ளிக்கூடத்தில் 5 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
10 கர்ப்பிணி பெண்கள் தங்கியுள்ள இங்கு கடந்த நான்கு தினங்களாக ஒரு டாக்டர் கூட இல்லை. அரிசி மற்று குடிநீரை ரேசன் போல இங்கு அதிகாரிகள் விநியோகிக்கின்றனர். ஒரேயோரு கழிப்பறையை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்த வேண்டிய நிலை. இதனால் நோய் பரவும் வாய்ப்புள்ளது. தாங்கள் சந்தித்த பயங்கர அனுபவத்தின் காரணமாக மீண்டும் தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் சென்றால் சுட்டுக் கொல்லப்படுவோம் என அஞ்சுகிறார்கள். வீடுகளை இழந்த முஸ்லிம்கள் தாங்கள் உயிரோடு இருப்பது அல்லாஹ்வின் கருணை என கூறுகிறார்கள்.


45 பேரை காவு வாங்கிய அசாமில் பிரதமர் ;


கவுகாத்தி:  இருபிரிவினர் மோதல் சம்பவம் நடந்து இன்றுடன் 9 வது நாளை எட்டும் இந்நாளில் பிரதமரும் , காங்., தலைவர் சோனியாவும் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் அளிக்கின்றனர்.

சிறுபான்மை- பழங்குடி இனத்தவர்கள் இடையே நில ஆக்கிரமிப்பு தொடர்பாக கலவரம் மூண்டது, இதில் 50 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர், துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 200 க்கும் மேற்பட்ட முகாம்களில் லட்சக்கணக்கானவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். முகாம்களில் உள்ளவர்களுக்கு முறையான உணவு, தண்ணீர் வழங்க முடியாமல் அரசு திணறி வருகிறது. இந்நிலையில் முதல்வர் தருண்கோகை மத்திய அரசு மீது குறை கூறியிருந்தார். ராணுவ படையினர் காலம் தாமதிக்காமல் வந்திருந்தால் கலவரம் பரவாமல் தடுத்திருக்க முடியும் என்றார். 

கலவரம் பாதித்த பகுதிகளில் பார்வையிட பிரதமர் மன்மோகன்சிங், காங்., தலைவர் சோனியா ஒரே விமானத்தில் வருகின்றனர். கவுகாத்தியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோக்ராஜ்கர் மாவட்டத்திற்கு வந்தபோது அங்கு வானிலை கோளாறு காரணமாக தரை இறங்க முடியவில்லை. இதனால் ஹெலிகாப்டர் மீண்டும் கவுகாத்தி திரும்பியது,

ரஷ்யாவின் முதல் இஸ்லாமிய டிவி சேனல்! – ஆகஸ்டில் தொடக்கம்


Russia To Launch New Islamic TV Channel

மாஸ்கோ:ரஷ்யாவின் முதல் இஸ்லாமிய டிவி சேனல் ஆகஸ்டில் தொடங்கும் என்று ரஷ்ய அதிகாரிகளால் கடந்த புதன்கிழமை அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேனலுக்கு அல்-ஆர் டிவி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ரஷ்ய முஸ்லிம்களுக்குக்கான இயக்குனர் டாமிர் தெரிவிக்கையில் இந்த அல்-ஆர் டிவி சேனல் ஆகஸ்டில் தனது ஒளிப்பரப்பை துவங்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அல்-ஆர் டிவிக்கான நிதி தனிநபர் அன்பளிப்பின் மூலமும், தொழிலதிபர்களின் நிதியின் மூலமும் மற்றும் அந்நிறுவனத்தின் முதலீட்டாளர்களின் துணையுடன் ஆரம்பிக்கப்படுவதாக அவர் கூறினார். மேலும் இவர்களுக்கு அரசின் உதவியும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த சேனல் ஒளிபரப்பு சேவையை ரஷ்ய நாட்டின் பிரபலமான ட்ரை கலர் டிவி ஆப்பரேடர் நிறுவனம் ஒளிபரப்பும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹஜ் ஒதுக்கீடு:மறுபரிசீலனைச் செய்யக்கோரும் மத்திய அரசின் மனு நிராகரிப்பு!


Supreme Court rejects plea on Haj quota order

புதுடெல்லி:புனித ஹஜ் பயணிகளுக்கான அரசு ஒதுக்கீட்டை குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அடுத்த ஆண்டில் அமல்படுத்த அனுமதி தர வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நேற்று(வெள்ளிக்கிழமை)நிராகரித்தது.
இது தொடர்பாக அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாகனவதி, வழக்குரைஞர் ஹாரிஸ் பெரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், ஒதுக்கீட்டை குறைத்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்த ஆண்டு அமல்படுத்த அனுமதி தர வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அஃப்தாப் ஆலம், ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசின் கோரிக்கையை நிராகரித்தது.
கடந்த 23-ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவில், உயர் பதவியில் உள்ளவர்கள் பரிந்துரை செய்யும் ஹஜ் பயணிகள் ஒதுக்கீட்டை 5,050-லிருந்து 300-ஆக குறைத்துவிட்டது. அதன்படி, குடியரசுத் தலைவருக்கு 100, குடியரசுத் துணைத் தலைவர் – 75, பிரதமர் -75, வெளியுறவுத் துறை அமைச்சர் – 50 என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று இந்திய ஹஜ் கமிட்டிக்கான ஒதுக்கீட்டை 500-க்குப் பதிலாக 200-ஆக குறைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஹஜ் யாத்திரைக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளை எதிர்த்து அந்நிறுவனத்தினர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் விசாரித்தனர்.
2009 மற்றும் 2010-ம் நிதியாண்டுகளில், ஆண்டுக்கு ரூ. ஒரு கோடி வரவு – செலவு மேற்கொள்ளும் நிறுவனங்கள் மட்டுமே ஹஜ் பயணிகளை அழைத்துச் செல்ல முடியும் என்று மத்திய அரசு புதிய விதிமுறையை கொண்டு வந்தது. இதனால், பல சுற்றுலா நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.
இது குறித்து நீதிபதிகள் தெரிவித்ததாவது: அரசின் புதிய கொள்கை நியாயமற்றது. இந்தக் கொள்கை, ஒரு சில சுற்றுலா நிறுவனங்கள் ஏகபோகமாக செயல்பட வழிவகுத்து விடும். எனினும், இந்த ஆண்டுக்கான அரசின் விதிமுறையில் தலையிட நாங்கள் விரும்பவில்லை.
அதே சமயம், அடுத்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு ஏற்பாடு செய்யும் தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு புதிய கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும். புதிய கொள்கையை வரும் நவம்பர் மாதம் நீதிமன்றம் பரிசீலிக்கும் என்றனர்.