செவ்வாய், 29 ஜனவரி, 2013

விஸ்வரூபம் மீதான தடை நீக்க உத்தரவு மீது தலைமை நீதிபதி புது உத்தரவு!


சென்னை:விஸ்வரூபம் மீதான நீதிபதி வெங்கட்ராமனின் தடை நீக்க உத்தரவை தலைமை நீதிபதி(பொறுப்பு) தர்மராவ் இன்று காலை 10:30 மணி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

விஸ்வரூபம் எதிர்ப்பு - முடங்கியது பிரதமரின் மின்னஞ்சல்! Read more about விஸ்வரூபம் எதிர்ப்பு - முடங்கியது பிரதமரின் மின்னஞ்சல்! [8544] | இந்திய செய்திகள் | செய்திகள் at www.inneram.com


நடிகர் கமலஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருப்பதால் அதனை திரையிட அனுமதிக்ககூடாது என்று தடை செய்யக்கோரி போராடி வருகின்றனர். தமிழகம்,ஆந்திரம், கர்நாடகம் மட்டுமின்றி இலங்கை,மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளிலும் திரையிட எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கடந்த 25 ஆம் தேதி பிரிமியர் காட்சிக்காக அமெரிக்காவிலிருந்த நடிகர் கமலஹாசன், நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். தமது படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இல்லை என்று திரும்பத் திரும்ப சொன்னபோதும்,விஸ்வரூப எதிர்ப்பு இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் அவற்றை ஏற்கவில்லை. இந்நிலையில், விச்வரூபம் மீதான தடையை நீக்கவேண்டும் என்று கமலஹாசன் சார்பில் தொடுக்கப்பட்டுள்ள முறையீட்டு வழக்கை நேற்று ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்,நீதிமன்றத்துக்கு வெளியே அரசு அதிகாரிகளுடன்பேசி சுமூக தீர்வுகாணும்படி பரிந்துரைத்தது. விஸ்வரூபம் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதற்கு கமலாஹசன் முன்வந்துள்ளார். எனினும், இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் முழுபடத்தையும் தடைசெய்யும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் விஸ்வரூபம் படத்திற்கான சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில், விஸ்வரூபம் படத்தை தடைசெய்யக்கோரி இணைய தளங்களில் பல்வேறு பதிவுகள் வெளியாகியுள்ளதோடு, இந்திய பிரதமர் மன்மோகன்சிங், குடியரசு தலைவர் மற்றும் தேசிய தலைவர்களுக்கு மின்மடல் மூலமாகவும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் அலுவலக கணினியில் அளவுக்கு அதிகமான மின்மடல்கள் குவிந்துள்ளதால், பிரதமரின் மின்னஞ்சல் வசதி முடங்கியுள்ளது என்று தெரிகிறது.

முஸ்லிம்களின் உணர்வுகள் குறித்து கவலையில்லை! விஸ்வரூபத்திற்கு தடை நீக்கம் – சென்னை உயர்நீதிமன்றத்தின் பாரபட்சமான தீர்ப்பு!


சென்னை:திருக்குர்ஆனையும், தொழுகை உள்ளிட்ட முஸ்லிம்களின் வழிபாட்டையும் இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கான தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. தமிழ் இன உணர்வுக்காக டேம் 999 என்ற திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதி மறுத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் முஸ்லிம்களின் உணர்வுகள் குறித்து கவலைப்படாமல் சென்னை உயர்நீதிமன்றம் விஸ்வரூபம் படத்திற்கான தடையை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. முற்போக்கு பிராமணனான கமலஹாசன் இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் விஸ்வரூபம். இத்திரைப்படம் அமெரிக்கா தீவிரவாதத்திற்கு எதிரான போர் என நடத்தி வரும் ஆக்கிரமிப்பு போரை ஆதரிக்கும் வகையிலும், உலக மக்களுக்கு நல்லுபதேசமாக அருளப்பட்ட புனித திருக்குர்ஆனையும், தொழுகை உள்ளிட்ட வணக்க வழிபாடுகளையும் இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு இரண்டு வார கால தடையை விதித்தது. பல்வேறு நாடுகளிலும் இந்தியாவின் சில பகுதிகளிலும் இத்திரைப்படம் திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் தடை உத்தரவை எதிர்த்து கமலஹாசன் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தது. நீதிபதி கே வெங்கட்ராமன் பலமணிநேர விசாரணைக்குப் பிறகு செவ்வாய் இரவு 10 மணி அளவில் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில், தமிழக அரசு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி குற்றவியல் சட்டம் பிரிவு 144ன் கீழ் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு விதித்திருந்த இருவாரத் தடையாணையை நிறுத்திவைத்து உத்திரவிட்டார். ஆயினும் வழக்கு விசாரணை தொடருமென்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு சென்னை உயர்நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்யவுள்ளது.

திங்கள், 28 ஜனவரி, 2013

விஸ்வரூபம் - ஒரு மணி நேர காட்சிகளை வெட்ட கமலுக்கு அரசாங்க அதிகாரிகள் அறிவுரை......!


அரசுடன் பேசி சுமூகமாக பிரச்சனைகளை முடிக்குமாறு இன்றுஉயர்நீதிமன்றம் கமலுக்கு அறிவுறுத்தியுள் ள நிலையில், சுமார் ஒரு மணி நேர காட்சிகளை வெட்ட வேண்டுமென்று அரசாங்க...அதிகாரிகள் கமலிடம் கூறியுள்ளதாக NDTV ஊடகம் சற்று முன்பாக தெரிவித்துள்ளது . இதனை கமல் ஏற்க மறுத்துள்ளதாகவு ம் அது மேலும் தெரிவித்துள்ளது . ஏற்கனவே கடுமையான நஷ்டத்தை படம் சந்தித்துள்ள நிலையில், அப்படியே படம் வெளிவந்தாலும் எத்தனை திரையரங்குகள் படத்தை வெளியிட முன்வரும் என்பதும் கேள்விக்குறியாக இருப்பதாக NDTV கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ுள்ளது. நன்றி:NDTV

ஈரானில் கை துண்டிக்கும் படம்ஈரான் அரசு வெளியீடு


டெஹ்ரான்:ஈரானில், முஸ்லிம் மத சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. போதை கடத்தல், கொலை போன்ற குற்றங்களுக்கு, பொது மக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றன. கள்ள உறவு போன்ற குற்றங்களுக்கு கல்லால் அடித்தல், பிரம்படி தண்டனை போன்றவை வழங்கப்படுகின்றன.கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்களுக்கு கை மற்றும் விரல்கள் துண்டிக்கப்படுகின்றன. விரல் மற்றும் கையை துண்டிக்கும் இயந்திரத்தின் படத்தை அந்நாட்டு அரசு, பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.ஈரானின், ஷிராஸ் என்ற மாவட்டத்தில், திருடன் ஒருவனின் கையை, நான்கு பேர் சேர்ந்து துண்டிக்கும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

ஷாருக்கானுக்கு பாதுகாப்பு கொடுங்கள்: இந்தியாவிற்கு பாக். அமைச்சர் கோரிக்கை


இஸ்லாமாபாத்: பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என பாக்.உள்துறை அமைச்சர் , இந்தியாவிற்கு ‌வேண்டுகோள் விடுத்துள்ளார். பாலிவுட் சினிமா உலகின் முன்னணி நடிகர், ஷாருக் கான் (47) இவர் கவுரி என்ற பெண்ணை மணந்து, மும்பையில் வாழ்ந்து வருகிறார்.சமீபத்தில், பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் , நான் முஸ்லிம் என்பதால், அரசியல்வாதிகளால் அவ்வப்போது மிரட்டப்படுகிறேன். அண்டை நாடான பாகிஸ்தானுடன் அடிக்கடி தொடர்பு படுத்தப்படுகிறேன்.நான் இந்தியனாக இருந்த போதிலும், வேறுபடுத்தப்படுகிறேன். என்னை மும்பையை விட்டு வெளியேற்றவும், பாகிஸ்தானுக்கு செல்லும் படியும், நான் மிரட்டப்படுகிறேன் என கூறியிருந்தார். பாக். வாருங்கள்: ஹபீஸ் சயீத் இதை அறிந்த, பாக்.,முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்
, ஹபீஸ் முகமது சயீத், ஷாருக்கானுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். அதில், இந்தியாவில் உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என நீங்கள் உணர்ந்தால், பாகிஸ்தான் வரலாம்; உங்களை வரவேற்க காத்திருக்கிறோம். பாகிஸ்தானில் நிரந்தரமாக தங்க ஏற்பாடு செய்கிறோம். உங்களுக்கு போதிய மரியாதை அளிக்கப்படும். ஷாருக்கிற்கு, பாகிஸ்தான் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கிறது,'' என்றார். பாதுகாப்பு கொடுங்கள்: ரஹ்மான் மாலிக் இந்நிலையில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளி்த்தார். அவர் கூறியதாவது: ஷாருக்கானை முஸ்லிம் என பார்க்க வேண்டாம். ஷாருக்கான், இந்திய ரசிகர்களால் மட்டுமல்ல பாகிஸ்தான் ரசிகர்களும் விரும்பும் ஒரு நடிகர். அவரை வேறுபடுத்தி பார்க்க‌ வேண்டாம். அவருக்கு பிரச்னை என்றால், இந்தியா உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல, அவர் பாகிஸ்தான் ரசிகர்களால் நேசிக்கப்படும் நடிகர். இதுநாள் வரை அவரை மிரட்டியவர்கள், எதிராக செயல்படுபவர்கள் , அதனை விலக்கிக்கொள்ளுங்கள், ஷாருக்க‌ானை ஒற்றுமையின் சின்னமாக , இந்திய சகோதர, சகோதரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை. இவ்வாறு ரஹ்மான்மாலிக் கூறினார்.

சவுதியில் கள்ளச்சாராயம் விற்றஇந்தியர்களுக்கு ஓராண்டு சிறை


துபாய்:சவுதி அரேபியாவில், சாராயம் விற்ற இந்தியர்கள் இருவருக்கு, ஓராண்டு சிறையும், 50 பிரம்படி தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன.அரேபியாவின் ஜெட்டா நகரில், சிலர் கள்ளத்தனமாக ஒரு இடத்திற்கு சென்று மது அருந்தி வந்தனர். மது அருந்திவிட்டு சென்ற ஒரு நபரை, போலீசார் பிடித்து விசாரித்த போது, அவர் மது விற்ற இடத்தை போலீசாருக்கு காட்டி கொடுத்தார். சவுதி அரேபியாவில், மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மது விற்பனை செய்த, இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கை விசாரித்த ஜெட்டா கோர்ட், இந்தியர்கள் இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனையும், 50 பிரம்படி தண்டனையும் வழங்கி தீர்ப்பு கூறியது.பிரம்படி தண்டனையை, ஒரு வாரத்தில் ஆறு முறை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த தண்டனை முடிந்த பின் இருவரும், இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.குற்றவாளிகளை இந்தியாவிடம்ஒப்படைக்கும் ஒப்பந்தம்:வங்கதேச அமைச்சரவை ஒப்புதல்தாகா:குற்றவாளிகளை, இந்தியாவிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்துக்கு, வங்கதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம், வடகிழக்கு மாநில பயங்கரவாதிகள் பலருக்கு புகலிடமாக உள்ளது. இதே போல், வங்தேச ராணுவப் புரட்சியில் சம்பந்தப்பட்ட பலர், இந்தியாவில் தலைமறைவாக உள்ளனர். இவர்களை பரஸ்பரம் ஒப்படைக்க, இருநாட்டு அரசுகளும் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளன.இந்த ஒப்பந்தத்துக்கு, வங்கதேச அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளதாக, அந்நாட்டின் காபினட் செயலர் முகமது முஷ்ரப் ஹுசைன் தெரிவித்துள்ளார்.அரசியல் கைதிகள், ஓராண்டுக்கும் குறைவான சிறைத் தண்டனைக்குரிய கைதிகள், இந்த ஒப்பந்தத்தின்படி ஒப்படைக்கப்பட மாட்டார்கள். கொலை உள்ளிட்ட பயங்கர குற்றங்களில் ஈடுபட்டவர்களை, பரஸ்பர நாடுகளிடம் ஒப்படைக்க இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது.

குவைத் தில் விஸ்வருபம் படத்தை கண்டித்தும் ,இந்த படத்தை தடை செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும் கூ ட்டம்


முஸ்லிம்களை பற்றியும் ,இஸ்லாமியர்களை பற்றியும் மிகவும் மோசமான முறையில் படம் எடுத்த விஸ்வருபம் என்ற படத்தை எடுத்த நடிகர் கமல்ஹாசனை கண்டித்தும் முஸ்லிம்களின் உணர்வை புரிந்து கொண்டு விஸ்வருபம் படத்தை தடை செய்த தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், விஸ்வருபம் படத்தை நிரந்தரமாக தடை செய்யக் கோரியும் ,இந்த படத்தை துணிந்து வெளியிடு செய்ய அனுமதித்த சென்சார் போர்ட்டை கண்டித்தும் இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரியும், குவைத் தில் தமிழக இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக கடந்த வெள்ளிக் கிழமை (25.01.2013) இரவு இஷா தொழுகைக்குப் பிறகு மிர்காப் சிட்டியில் உள்ள தஞ்சை ஹோட்டலில் வைத்து குவைத் மண்டல தமுமுக செயலாளர் முஜிபுர்ரகுமான்(TMMK) அவர்கள் தலைமையில் நடந்தது .தமுமுக மீடியா செயலாளர் நெல்லை பீர் மரைக்காயர் தொகுத்து வழங்கினார் இந்திய தவுகித் ஜமாத் மண்டல தலைவர் சகோ ; ஜாவித் பிர்தவுசி இறைவசனம் ஓதி துவங்கி வைத்தார் .கண்டன உரையாக கூ னி மேடு முஸ்லிம் ஜமாஅத் துணை தலைவர் ஜனாப்;லியாக்கத் அலி அவர்கள் ,(misk) மஜ்லிஸ் இக்யாவுல் சுன்னா - குவைத் அமைப்பை சேர்ந்த பொறுப்பாளர் மொவ்லவி ;பகுருதீன் பாகவி அவர்கள் ,தமிழ்நேசன் பத்திரிக்கையாளர் அமானுல்லாஹ் தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை( tisa) சகோ ;ரஹமத்துல்லாஹ் , குவைத் தமிழ் இஸ்லாமிய பிரச்சார மையம் சார்பாகவும் குவைத் வசந்தம் ஆசிரியருமான சகோ ;அப்துல்முஸ்சவீர்,காயேதே மில்லத் பொறுப்பாளரும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்(IUML) மற்றும் தமிழக முஸ்லிம் கலா சாரப் பேரவையின் காப்பாளரும் சகோ ;முகமது பாருக் மற்றும் குவைத இந்திய பிரடணநிடி பாரம் (KIFF)அமைப்பினரும் ,இந்திய தவுகித் ஜமாத மண்டல பொது செயலாளர் முகவை அப்பாஸ்(INTJ) அவர்களும் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை வலிமையாக பதிவு செய்தனர் குவைத் தில் விஸ்வருபம் வரவிடாமல் அதன் அரசாங்கத்திடம் வலிமையாக முறையிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்ட முடிவில் தஞ்சை பாதுஷா அவர்களின் நன்றி உரையுடன் தூ ஆ ஓதி முடிவு பெற்றது குவைத் தில் கடும் குளிரிலும் மக்கள் திரளாக கலந்து கொண்டு வலிமை சேர்த்தனர்

எகிப்திய புரட்சிக்கு 2 ஆண்டுகள்: தஹ்ரீர் சதுக்கத்தில் போராட்டம், மோதல்!


கெய்ரோ:எகிப்திய சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கை ஆட்சியில் இருந்து அகற்றிய மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றன. புரட்சியின் மையமாக விளங்கிய தஹ்ரீர் சதுக்கத்தில் 2-ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். நேற்று எதிர்கட்சிகள் அதிபர் முர்ஸி மற்றும் ஆளுங்கட்சியான இஃவானுக்கு எதிராக போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தன. கெய்ரோவில் அதிபரின் அதிகாரப்பூர்வ வீட்டிற்கு முன்பாகவும் போராட்டங்கள் நடந்தன. 2011 ஆம் ஆண்டு ஜனவரி துவக்கத்தில் கிளர்ந்தெழுந்த புரட்சி போராட்டத்தில் எழுப்பிய “உணவு, சுதந்திரம், சமூக நீதி” ஆகிய முழக்கங்களே நேற்றும் எழுப்பப்பட்டன. வெள்ளிக்கிழமை தான் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது என்றாலும் வியாழக்கிழமையே தஹ்ரீர் சதுக்கத்தில் எதிர்ப்பாளர்கள் திரண்டனர். எதிர்கட்சி ஆதரவாளர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். வன்முறையில் ஈடுபட்ட எதிர்ப்பாளர்களை கலைக்க போலீஸ் கண்ணீர் புகையை பிரயோகித்தது. போலீசார் உள்பட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஆனால், தார்மீக-சமூக முன்னேற்ற பிரச்சாரத்தை கடைப்பிடித்து வரும் இஃவான், புரட்சி வருடாந்திர நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கவில்லை. “எகிப்தின் வளர்ச்சிக்கா ஒன்றுபடுவோம்” என்ற முழக்கத்தை முன்வைத்து இஃவான் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. புதிய எகிப்தின் பிறந்த தினத்தை அமைதியாக கடைப்பிடிப்போம் என்று அதிபர் முஹம்மது முர்ஸி அழைப்பு விடுத்திருந்தார். “நாம் அனைவரும் ஒரு கப்பலில் பயணிக்கிறோம். கப்பல் பாதுகாப்பானதா? என்பதை உறுதிச் செய்யவேண்டியது பயணிகளின் கடமையாகும். வாக்குச்சீட்டின் மூலமாக முடிவான மக்கள் தீர்ப்பை அனைவரும் மதிக்கவேண்டும்”- என்று நபி(ஸல்) அவர்களின் பிறந்த தினத்தையொட்டி நடத்திய உரையில் முஹம்மது முர்ஸி அழைப்பு விடுத்தார்.

துலே கலவரம்: போலீசாரின் பங்கினை வெட்ட வெளிச்சமாக்கும் வீடியோ காட்சிகள்!


புதுடெல்லி:மஹராஷ்ட்ரா மாநிலம் துலேயில் இம்மாதம் நடந்த வகுப்புக் கலவரத்தில் போலீஸின் பங்கினை நிரூபிக்கும் மேலும் பல புதிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகளை கொள்ளையடிக்கும் நபர்களுடன் இணைந்து போலீசும் ஈடுபடுவது தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. போலீசின் தலையீடே கலவரம் உருவாக காரணம் என்று சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மியின் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு கண்டறிந்தது.
முஸ்லிம்களின் கடைகளை கொள்ளையடிக்கும் போலீஸ் கடைகளில் உள்ள பொருட்களை கடத்திச் செல்வது வீடியோ காட்சிகளில் இடம்பெற்றுள்ளன. ஒரு பெட்டிக் கடையை உடைக்க முடியாத போலீஸ் மீன் மார்க்கெட் அருகில் வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள், வீடுகளில் குடிநீரை சேமிக்க வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் ஆகியவற்றை உடைக்கும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளன. உள்ளூர் தொலைக்காட்சி சானலின் கேமராமேனும் கலவரத்தில் பங்கேற்றதாக உடைக்கப்பட்ட கடையின் உரிமையாளர் கூறுகிறார். வீடியோ காட்சிகள் வெளியானதை தொடர்ந்து போலீஸில் வகுப்புவாதிகள் உள்ளனர் என்று மஹராஷ்ட்ரா மாநில முதல்வர் பிரதிவிராஜ் சவுகான் கூறினார். வீடியோ காட்சிகள் கண்டதாகவும், இப்பிரச்சனையை தீவிரமாக எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். உணவுக் கடை நடத்துவோருக்கும் இரண்டு இளைஞர்களுக்கு இடையே உருவான மோதலில் போலீஸ் சமயோஜிதமாக தலையிடாததே பிரச்சனைக்கு காரணமாகும். நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், உண்மை வெளியாகும் என்றும் சவுகான் கூறினார். வீடியோ காட்சிகள் கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடைபெறும் என்றும் டி.ஜி.பி சஞ்சய் தயாள் தெரிவித்தார். வன்முறைகள் தொடர்பாக போலீஸ் கான்ஸ்டபிள்களான சுமித் நாம்தொயோ தாக்கூர், பிரமோத் சிவன் இஷி ஆகியோரை இம்மாதம் 18-ஆம் தேதி வரை போலீஸ் சஸ்பெண்ட் செய்துள்ளது. வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அரசுக்கு அறிக்கை அளித்துள்ளதாக கூடுதல் டி.ஜி.பி அஹ்மத் ஜாவேத் தெரிவித்தார். கலவரத்தில் போலீசாரின் பங்கு வெளியானதை தொடர்ந்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சிவில் உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மஹராஷ்ட்ரா போலீஸில் 1992-93 காலக்கட்டத்தில் நடந்த கலவரம் குறித்து விசாரணை நடத்திய ஸ்ரீகிருஷ்ணா கமிஷனிடம் கூடுதல் கமிஷனர் வி.என்.தேஷ்முக் கூறியது என்னவெனில், அக்கலவரம் நடந்த காலக்கட்டத்தில் போலீஸில் 80 சதவீத கான்ஸ்டபிள்களும் சிவசேனாக்காரர்கள் ஆவர் என்பதாகும். துலே கலவரம் தொடர்பான வீடியோ காட்சிகள் போலீஸ் வகுப்புவாத மயமாக்கத்திற்கு அடித்தளமிட்டுள்ளதாகவும், இவ்விவகாரத்தில் அரசு தீவிரமாக தலையிடவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசியல் சாசன ரீதியான கடமையை நிறைவேற்றுவதில் சட்டமியற்றுவோரும், போலீஸும் தோல்வி அடைந்ததற்கான ஆதாரம் தான் வீடியோ காட்சிகள் என்று பிரபல இயக்குநரும், சமூக ஆர்வலருமான மகேஷ் பட் கூறியுள்ளார். அரசியல் சாசன தத்துவங்களை அமல்படுத்த வேண்டியவர்கள் அசுத்தமடைந்துள்ளனர். கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றம் சுமத்தும் வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். ஆறு முஸ்லிம்கள் கொல்லப்பட்ட பிறகும், போலீஸின் தன்னம்பிக்கை கெட்டுவிடும் என கருதி போலீசை விமர்சிக்க அரசு தயாராகவில்லை. போலீஸ் மனநிலையை சரிப்படுத்த அரசு தலையிடவேண்டிய நேரம் இது என்று மகேஷ் பட் கூறியுள்ளார். வீடியோ காட்சிகள் அதிர்ச்சி ஏற்படுத்துவதாகவும், அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தில் இவ்விவகாரத்தை கிளப்புவோம் என்றும் அப்பகுதி எம்.எல்.ஏ அனில் கோட்டே கூறினார். வீடியோ காட்சிகளில் கண்ட அனைத்து போலீஸ் காரர்களையும் சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்று சிறுபான்மை கமிஷன் தலைவர் முனாஃப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

தர்மபுரி கலவரத்தை படமெடுத்தால் ராமதாஸ் ஏற்பாரா?: தமுமுக கேள்வி


சென்னை: விஸ்வரூபம் பட விவகாரத்தில் நடிகர் கமலஹாசனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாமக நிறுவனர் ராமதாஸுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. .
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி கலவரத்தை மையப்படுத்தி பாமகவின் கொடி,சின்னங்களின் பின்னணியுடன் திரைப்படம் எடுக்கப்பட்டால் ராமதாஸ் அதனை ஏற்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் கமல்ஹாசனுக்கு ஆதரவுக் குரல் கொடுக்கும் பாரதிராஜா, பார்த்திபன், அஜித்குமார் போன்ற திரையுலகினர், இஸ்லாமியர்களின் உணர்வுகளை உணர்ந்து, கமலஹாசனுக்கு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது

இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் காட்சிகளை திரையுலகம் தவிர்க்க வேண்டும் : திருமாவளவன்


சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘’விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியரை அவமதிக்கும் காட்சி இருந்தால் நீக்கி திரையிட வேண்டும். இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் காட்சிகளை திரையுலகம் தவிர்க்க வேண்டும். சாதிப்பிரச்சனைகளை தூண்டும் காட்சிகள் மீது கடுமையான நடவடிக்கை தேவை’’ என்று வலியுறுத்தினார்.

சனி, 26 ஜனவரி, 2013

விஸ்வரூபம் தடை நீங்கினாலும் தியேட்டரில் ஓட்ட முடியாது - பிஜே எச்சரிக்கை


விஸ்வரூபம் தடை நீங்கினாலும் தியேட்டரில் ஓட்ட முடியாது - நாட்டிலுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் விஸ்வரூபம் எடுப்பார்கள் தவ்ஹீத் ஜமாஅத் எச்சரிக்கை...........!! இது குறித்து தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மாநில தலைவர் சகோதரர் பிஜே அவர்கள் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டி. விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை நீக்கம் செய்யப்பட்டாலும் அதை திரையரங்குகளில் ஓடவிடமாட்டோம் ஒருவேலை விஸ்வரூபம் தடையை மீறி படம் வெளியானால் அதை தடுக்கும் பணியில் ஈடுபடுவோம் எனவும், இஸ்லாமியர்களை மிக மோசமாக விமர்சனம் செய்துள்ள இந்த படத்தை பார்த்து உறுதி செய்த பிறகு தான் இந்த முடிவு எடுக்கப் பட்டதாகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

காவி தீவிரவாதம்: சுஷில்குமார் ஷிண்டே மன்னிப்புக் கோர வேண்டிய அவசியம் இல்லை - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை


காவி தீவிரவாதம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறிய கருத்துக்கு அடுக்கடுக்கான நிகழ்வுகள் உண்டே. அப்படிக் கூறியதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பி.ஜே.பி. கூறுவது பொருட்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு: ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அமைப்புகள் இந்து பயங்கரவாதத்தினை முன்னிறுத்தி நடத்துவதாகவும், அதற்காக பயிற்சிகள் அளிப்பதாகவும் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அவர்கள் கூறியிருப்பதை எதிர்த்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்; அதற்கு அவர் மன்னிப்புக் கோர வேண்டும்; இல்லையேல் 24ஆம் தேதி கிளர்ச்சி, கண்டன ஆர்ப்பாட்டம் செய்வோம்; ஷிண்டே பதவி விலக வேண்டும் என்றும் உடனே ஆர்ப்பரித்துள்ளனர்! அவர் ஏதோ ஆதாரமில்லாமல் பேசியதைப் போல ஊடகங்கள் உயர்ஜாதி, பார்ப்பன, ஹிந்துத்வாவாதிகளின் ஆயுதங்களாக இருப்பதால், இதற்காக ஓங்காரக் கூச்சல் இடுகின்றனர்! இதோ ஆதாரங்கள் - பதில் கூறட்டும் பார்க்கலாம்! தங்களை சுத்த சுயம் பிரகாசிகளாகக் காட்டிக் கொள்ளும் இந்த வீராதி வீரர்கள், நமது சில கேள்விகளுக்கு விடை கூறட்டும்! 1. மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் எல்லாம் லேபிளை மாற்றிக் கொண்ட ஹிந்துத்துவா வாதிகள் அல்லாமல் வேறு யார்? இந்திய இராணுவத்தில் ஊடுருவி, அங்குள்ள RDX என்ற சக்தி வாய்ந்த வெடி மருந்து, பொருள்களைக் கடத்தி, பயிற்சி தந்து பிறகு சிக்கிக் கொண்டு, சிறைவாசம் அனுபவிப்பதோடு, காவி அணிந்த சந்நியாசி வேடம் தரித்து தாங்கள் செய்த வன்முறைகளை - இஸ்லாமியர்கள் மீது பழி போட்டவர்கள் இவர்களைத் தவிர வேறு யார்? 2. அண்மையில் வெளியான செய்தியில் இவர்களின் முக்கிய புள்ளியான ஒருவர்தான் (உயர்ஜாதி பார்ப்பனர் அவர்) குஜராத் சம்ஜுத்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ வைத்து கொளுத்தியது (கோத்ரா ரயில் எரிப்பு) அய்தராபாத் குண்டு வெடிப்பு ஆகிய எல்லாவற்றுக்கும் சூத்திரதாரிகளாக இருந்தனர் என்ற செய்தி சென்ற வாரம் வரவேயில்லையா? (டைம்ஸ் ஆஃப் இந்தியா 13.1.2013). புலன் விசாரணை செய்த ஆய்வு நிறுவனம் இச்செய்தியை வெளியிட்டு ஏடுகளில் வெளி வந்துள்ளதே! 3.பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளின் பட்டியலில் இவர்கள் அமைப்பினர் சம்பந்தப்பட்டுள்ளார்களா - இல்லையா? உ.பி. முதல்வர் கல்யாண்சிங் என்ன கூறினார்? 4. அந்நாள் உ.பி. முதல் அமைச்சர் கல்யாண் சிங் தந்த ஒரு பேட்டியில், இவர்களை நம்பித்தான் நான் உத்தரவாதம் அளித்தேன்; ஆனால் இவர்கள் இடித்து தரைமட்டமாக்கி என்னை குற்றம் புரிந்தவர்கள் பட்டியலில் இடம் பெற வைத்தனர் என்று மனம் நொந்து கூறவில்லையா? அந்த இடிப்பின் எதிர்வினையாகத் தானே நாட்டில் 3000, 4000 பேர்கள் கொல்லப்பட்டதும், ரத்த ஆறு ஓடியதுமான கோரத் தாண்டவம்! இது நடைபெற்றதற்கு மூல காரணம் யார்? தென்காசியில் சொந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு - இந்து முன்னணியினர் ஒருவரைக் கொன்று, அதை முஸ்லீம்கள்மேல் பழி போட்டு, மதக் கலவரம் ஏற்பட்டு மோதல்களுக்குப்பிறகு, இவர்களே நடத்திய நாடகம் என்ற உண்மை ஒப்புதல் வாக்குமூலம் வரவில்லையா? காந்தியாரைக் கொன்றவன் யார்? 5. தேசப்பிதா காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு பயிற்சிக்கூடம் ஆர்.எஸ்.எஸ். என்பதும், அவர் சம்பவத்திற்குமுன் விலகியிருந்தார் என்பது புறத்தோற்றம் அல்லவா! அதனை மறுத்த நிலையில், அவரது தம்பி கோபால் கோட்சே - பூனாவில் தனது அண்ணன் நாதுராம் விநாயக் கோட்சே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்தவர் என்பதை ஏன் இவர்கள் மறைக்கிறார்கள் என்று பிரண்ட் லைன் ஆங்கில ஏட்டிற்குப் பேட்டி அளித்த போது சொல்லவில்லையா? 6. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் போல இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு வேறு உண்டா? 7. டெல்லியில் பச்சைத் தமிழர், அ.இ.காங்கிரஸ் தலைவர் காமராஜரை பட்டப் பகலில் அவர் வீட்டிற்குத் தீ வைத்து உயிருடன் கொளுத்த முயன்றவர்கள் ஹிந்துத்துவா தீவிரவாதிகளும், நிர்வாண சாமியார்களும், ஆன (பசுவதைத் தடுப்புப் போராட்டம் என்ற பெயரில்) இந்துத்துவா தீவிரவாதிகள் அல்லாமல் வேறு யார்? 8. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அன்றைய முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களை நேரில் சந்தித்து, விவாதித்துக் கொண்டு இருக்கையில் கையை முறுக்கி வன்முறையில், ஈடுபட்டு பிறகு விரட்டப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அல்லவா? ஆதாரம் இல்லாமலா பேசுகிறார்- உள்துறை அமைச்சர் ஷிண்டே? உண்மையை ஊடகங்களின் ஓங்காரச் கூச்சல் மூலமாக, மறைத்துவிட முடியாது. திரு. ஷிண்டே அவர்கள் உள்துறை அமைச்சர்; ஆதாரங்கள் இல்லாமலா அவர் பேசுவார்? நடைபெற்ற நிகழ்வுகள் எதைக் காட்டுகின்றன? ஹிந்துத்துவா பேசுவோர்தானே! வழக்கு நீதிமன்றத்தில் மாலேகான் குண்டுவெடிப்பு சம்பந்தமாக நடக்கும் நிலையில் இதுபற்றி உள்துறை அமைச்சர் பேசலாமா? என்ற அருள் உபதேசம் செய்கிறது ஆர்.எஸ்.எஸ்.காரரை - உணர்வாளரை ஆசிரியராகக் கொண்டுள்ள தினமணி நாளேடு? என்னே திடீர் ஞானோதயம்! ஏன் இதே வாதம் 2ஜி வழக்கு உச்சநீதிமன்றத்திலும், டில்லி தனி நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிற நிலையில் இவர்கள் எவ்வளவு எழுதினார்கள் - பேசினார்கள் - விமர்சித்தார்கள்? பேசு நா இரண்டுடையாய் போற்றி போற்றி என்ற அண்ணாவின் ஆரிய மாயை வரிகள்தான் இவர்களைப்பற்றி நம் நினைக்கு வருகிறது. தாழ்த்தப்பட்டவர் என்பதாலா? மாண்புமிகு ஷிண்டே அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர் உள்துறை அமைச்சராக இருப்பது என்பது பார்ப்பன உயர் ஜாதி வர்க்கத்திற்கு உறுத்தலாகத் தானே இருக்கும்; அதற்காகத்தான் இந்தப் பதவி விலகல் கூச்சல் போலும்! ஷிண்டேவின் கருத்துகண்டு இப்படிக் கூறுவது எதைக் காட்டுகிறது? நடுநிலையாளர்கள் ஆழ்ந்து சிந்திக்கட்டும்! கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்

விசா மோசடி:இந்து சாமியாருக்கு அமெரிக்காவில் சிறை!


சிகாகோ:விசா மோசடி வழக்கில் குற்றவாளி என கண்டுபிடிக்கப்பட்ட இந்தியாவைச் சார்ந்த இந்து சாமியாருக்கு அமெரிக்கா நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. கவுடியா வைஷ்ணவ சொஸைட்டி(ஜி.வி.எஸ்) தலைவரும், மில்வாகி ஹரே கிருஷ்ணா கோயிலில் முக்கிய சன்னியாசியுமான கோபால் ஹரிதாஸ் என்ற ஸகர்ஸென் ஹல்தார்(வயது-32) என்பவர் தாம் விசா மோசடிக்காக சிறைத் தண்டனை பெற்றவர் ஆவார். சிறைத் தண்டனை முடிந்த பிறகு ஹரிதாஸ்,இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார். மத நிகழ்ச்சிகளில் பங்கேற்க வழங்கப்படும் ஆர்-1 விசாவை சட்டவிரோதமாக பெற்று ஏராளமானோரை இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு அழைத்து வந்ததாக நீதிமன்றம் கண்டறிந்தது. 12க்கும் மேற்பட்ட நபர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு வந்ததாக போலீஸ் கூறுகிறது. ஒவ்வொரு நபரிடமும் 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்பட்டுள்ளது. ஜி.வி.எஸ்ஸின் பெயரில் ஏராளமான விசா மனுக்கள் அளிக்கப்படுவதை கண்காணித்த போலீஸ் நடத்திய விசாரணையில் ஹரிதாஸ் சிக்கினார். விசா மோசடி வெளியானதை தொடர்ந்து கடந்த 2010ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார்.

உலகமெங்கும் ஒலிக்கும் விஸ்வரூபத்துக்கான போராட்டம்.......


தமிழ் பேசும் முஸ்லிம்கள் வாழும் நாடுகள் எங்கும் விஸ்வரூபத்துக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஐக்கிய இராச்சியம், மில்டைன் கீன்ஸ் பகுதியில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் சற்று முன் அமைதியான முறையில் தம் கண்டனைத்தைத் தெரிவித்திருக்கின்றனர். நாம் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கிறோம் ஆனால் இஸ்லாமிய எதிர்ப்பை முற்றாக நிராகரிக்கிறோம் என்று கலந்து கொண்டவர்கள் கருத்து வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. கண்டனப் போராட்டத்தில் பங்கு பற்றியோரில் ஒரு பகுதியினர் முஸ்லிம்களின் திருமறை அல் குர்ஆனையும் சமயப் பழக்கவழக்கங்களையும் தவறாகவும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகவும் சித்தரித்துள்ளதனால் உலக முஸ்லிம்களின் பேரெதிர்ப்பைச் சந்தித்து வரும் விஸ்வரூபம் ஏற்கனவே ஐரோப்பாவில் வெளியாகியுள்ள நிலையில் இக்கண்டனப் போராட்டம் இடம் பெற்றிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அஸ்ஸாமில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்!


குவஹாத்தி:அஸ்ஸாம் மாநிலம் கோல்பரா மற்றும் துப்ரி மாவட்டத்தில் நேற்று அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டு வெடித்தது. உல்பா தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் தகவல்கள் இதுவரைக் கிடைக்கவில்லை. குண்டுவெடிப்பு நடந்த இப்பகுதிகளில் தான் முஸ்லிம்களுக்கெதிராக கலவரம் நடைபெற்றது. கோல்பரா மாவட்டத்தில் உள்ள மொரியகிச்சி சந்தை, போரஹிதா மற்றும் ஜமதார் பகுதிகளிலும், அதேபோல், துப்ரி மாவட்டத்தில் உள்ள ஏர்கிடா, சிராகுத்தி, மெட்டாரேட்டேரி ஆகிய இடங்களிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளன. குடியரசு தினத்தைப் புறக்கணிக்க வேண்டும் என உல்பா மற்றும் சில தீவிரவாதக் குழுக்கள் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தன. இந்நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பத்ம விருதுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட கமல் பெயர்...


கடைசி நேரத்தில் பத்ம விருதுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட கமல் பெயர்... விஸ்வரூபம் சர்ச்சை தான் காரணம்? மத்திய அரசின் உயரிய விருதான பத்பூஷனுக்கு பரிந்துரைக்கப்பட்ட கமல்ஹாஸனின் பெயர் கடைசி நேரத்தில் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகவும், விஸ்வரூபம் சர்ச்சைதான் இதற்குக் காரணம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு நேற்று பத்ம விருதுகளை அறிவித்தது. விருது பெறுவோர் பட்டியலில் தமிழகத்திலிருந்து கமலுக்கு பத்மபூஷன் பரிந்துரைக்கப்பட்டிருந்ததாம். ஆனால் கமல் மீதான தற்போதைய பிரச்சினைகள் மத்திய அரசு அதிகாரிகளை கடைசி நேரத்தில் யோசிக்க வைத்துள்ளன. விஸ்வரூபம் படத்துக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளன. இதையடுத்து தமிழகத்தில் இப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. வேறு சில மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் கமலுக்கு பத்மபூஷன் விருது வழங்குவது பொருத்தமாக இருக்காது என்று கருதி விருது பெறுவோர் பெயர்களை அறிவிப்பதற்கு முந்தைய நாள் பட்டியலில் இருந்து கமல் பெயரை கடைசி நேரத்தில் நீக்கி விட்டதாக தகவல்

பத்மா விருதுகள் அறிவிப்பு! ஹைதர் ராஸாவுக்கு பத்ம விபூஷண், அப்துல் ரஷீத் கானுக்கு பத்மபூஷண்!


கலை, இலக்கிய பிரிவில் டெல்லியைச் சார்ந்த எஸ்.ஹைதர் ராஸா உயரிய விருதான பத்மவிபூஷணை பெற்றுள்ளார். மேற்குவங்காளத்தைச் சார்ந்த பாடகர் அப்துல் ரஷீத் கான் பத்ம பூஷண் விருதுக்கு தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். பத்மஸ்ரீ விருதினை பாட்னா மவ்லானா மஷாருல் ஹக் அரபி மற்றும் பாரசீக பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கேப்டன் பேராசிரியர் டாக்டர்.முஹம்மது ஷரஃப்-இ-ஆலம், பிரபல உருது கவிஞர் நிதா ஃபாசில், கல்வியாளர் பேராசிரியர் அக்தாருல் வாஸ்லி, சூஃபி பாடகர் ஜம்மு கஷ்மீரைச் சார்ந்த குலாம் முஹம்மது ஷஸ்னவாஸ், ராஜஸ்தானைச் சார்ந்த எஸ்.ஷாக்கிர் அலி ஆகியோர் தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவ்வாண்டு ஜனவரி4-ஆம் தேதி தனது 100-வது வயதில் இறந்த சுதந்திர போராட்ட வீரரும், உருது கவிஞருமான ஷவ்கத் ரியாஸ் கபூர் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு மரியாதைச் செய்யப்பட்டுள்ளார்.

விஸ்வரூபம் இறுதி தீர்ப்பு ஜனவரி 28


சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே, வெங்கட்ராமன் தலைமையில் நேற்று விஸ்வரூபம் திரைப்படம் விசார‌‌‌ன‌ைக்காக பிற்பகல் 1:15 மணியளவில் தி‌‌ரையிடப்பட்டது. படத்தினை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி,சந்திர ஹாசன், கமல் மற்றும் வழக்கறிஞர்கள் பார்த்தார்கள், பின்னர் நீதிபதி விஸ்வரூபம் படத்தின் இறுதி தீர்ப்பினை ஜனவரி 28 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தலிபான் மற்றும் இராணுவ வீரர்களுக்கி‌டையே இடையே மோதல் 31 பேர் பலி


பெஷாவர்: பாக்கிஸ்தானில் தாலிபான் மற்றும் இராணுவ வீரர்களுக்கி‌டையே கடும் சண்டை நடந்தது, பல மணி நேரம் நடந்த மோதலில் 31 க்கும் மேற்பட்ட தாலிபான்கள் கொல்லப்பட்டனர். இராணுவ வீரர்கள் 15 பேர் உயிரிழந்தனர் .‌மேலும் ஒரு வயதான பெண், மூன்று கிராமவாசிகள் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதாக ‌செய்தி வெளியாகியுள்ளது.

உலகின் பெரிய விமான நிலையம்:இஸ்தான் புல்லில் அமைக்க முடிவு


அங்காரா:உலகின் மிகப் பெரிய விமான நிலையத்தை, இஸ்தான்புல் நகரில், 49 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க, துருக்கி அரசு திட்டமிட்டுள்ளது.துருக்கி நாட்டின், போக்குவரத்து துறை அமைச்சர் பினாலி எல்திரிம் இதுகுறித்து கூறியதாவது: துருக்கி பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. நாட்டின் மிக முக்கிய வியாபார பங்களிப்பு, மத்திய தரைக்கடல் நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அதிகரித்து வருகிறது. இதை அடுத்து, உலகின் மிகப் பெரிய விமான நிலையத்தை, இஸ்தான் புல்லில் அமைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 49 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும். இதற்காக சர்வதேச "டெண்டர்' விடும் பணிகள் நடக்கிறது. இதற்கான பணிகள், 25 ஆண்டுகளில், நான்கு கட்டங்களாக முடிக்கப்படும். முதல் கட்டப்பணிகள் அடுத்த, மூன்று அல்லது நான்காண்டுகளில் முடிக்கப்படும். முதல் கட்டப் பணிகள் முடிந்ததும், விமான நிலையத்தில், ஆண்டுதோறும், 9 கோடி பயணிகளும், விமான நிலையப் பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு, ஆண்டுக்கு, 15 கோடி பயணிகளும் வந்து செல்ல முடியும்.இவ்வாறு, அமைச்சர் பினாலி எல்திரிம் கூறினார்.

பங்களாதேஷில் ‌தீ விபத்து 6 பேர் பலி


டாக்கா: பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட ‌தீ விபத்தில் 6 பேர் இறந்தனர். 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து குறித்து விசாரனை நடந்து வருகிறது.

தமிழகம்,புதுவை , இலங்கை , துபை போன்ற நாடுகளில் அரவே வெளியாகாத விஸ்வரூபம்


மலேசியா தமிழகம்,புதுவை , இலங்கை , துபை போன்ற நாடுகளில் அரவே வெளியாகாத விஸ்வரூபம் திரைப்படம் நேற்று மலேசியாவில் வெளியானது. வெளியானதும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து மலேசியாவிலும் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளின் புகாரை தொடர்ந்து விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. ஆந்திரா மேலும் இன்று அந்திர மாநில அரசு விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதித்து ஹைதராபாத்தில் உள்ள திரையரங்குகளுக்கு நோட்டிஸ் அனுப்பியது. இருப்பினும் சில திரையரங்குகளில் வெளியாகி எதிர்ப்பு கிளம்பியும் அவைகளும் திரையிடுவதை நிருத்திக் கொண்டன. கர்நாடாக கர்நாடக மாநிலம் பெங்களுரில் விஸ்வரூபம் திரைப்படம் பல்வேறு திரையரங்குளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரளா கேரள மாநிலம் பாலக்காட்டில் விஸ்வரூபம் திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொய்யானது.. தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் தான் எதிர்க்கின்றனர் மற்ற மாநிலம் மற்றும் மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை என்று கூறி வரும் கூத்தாடிகளின் வாதம் பொய்யானது என்பது நிரூபனமாகிவிட்டது…

'விஸ்வரூபம்’ . திரைக்குப் பின்னால் நடந்த கதை,


விஸ்வரூபம்’ . திரைக்குப் பின்னால் நடந்த கதை, படத்தின் திரைக்கதையைவிட பரபரப்பானது. கோலிவுட் முதல் கோட்டை வரை விசாரித்தபோது வந்து விழுந்த தகவல்களை அப்படியே தருகிறோம். கமல் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை! 'துப்பாக்கி’ படம் ரிலீஸ் ஆனபோதே முஸ்லிம்கள் போர்க் கொடி தூக்கினர். அப்போது, 'விஸ்வரூபம்’ படத்திலும் முஸ்லிம்களைத் தவறாக சித்திரித்து இருக்கிறார்கள் என்ற பேச்சும் கூடவே கிளம்பியது. 'முன்கூட்டியே எங்களுக்குத் திரையிட்டுக் காட்டிய பிறகுதான் படத்தை கமல் வெளியிட வேண்டும்’ என குரல் கொடுக்க ஆரம்பித்தன முஸ்லிம் அமைப்புகள். '' 'விஸ்வரூபம்’ முஸ்லிம்களுக்கு எதிரான படம் அல்ல. அப்படிச் சந்தேகப்படும் இஸ்லாமியர்கள் படம் பார்த்துவிட்டு, தேவை இல்லாமல் கமலை சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதுக்குள் வருந்துவர். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்குப் பிராயச்சித்தமாக அண்டா அண்டாவாக முஸ்லிம்கள் பிரியாணி விருந்து போட வேண்டும். அந்த விருந்தில் கலந்துகொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்'' என அறிக்கை விட்டார் கமல். ஜனவரி 11-ம் தேதி படம் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியான நேரத்தில், 24 முஸ் லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் கமலை சந்தித்தனர். வெளிநாடுகளில் விநியோகஸ்தராக இருக்கும் முஸ்லிம் ஒருவர்தான் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அப்போது சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடந்தது. ''முஸ்லிம்களோடு நல்ல நட்புஉணர்வு கொண்டவன் நான். அவர்களைக் கொச்சைப்படுத்தி படம் எடுக்க மாட்டேன்'' என்றார் கமல். ''துப்பாக்கி படக் குழுவினரிடம் எங்களைப்பற்றி கேட்டுப் பாருங்கள். எங்களின் செயல்பாடு பற்றி நீங்கள் வைத்திருக்கும் பிம்பம் உடையும்'' என்று, கமலிடம் சொன்னது முஸ்லிம் கூட்டமைப்பு. இறுதியாகப் பேசிய கமல், '' 'விஸ்வரூபம்’ இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் அல்ல. இந்து முன்னணியினருக்கு எதிரான படம். ராமகோபாலன் படத்தைப் பார்த்து விட்டு எதிர்ப்பார்'' எனச் சொன்னார். பேச்சு வார்த்தையின் இறுதியில், திரைக்கு வருவதற்கு முன் படத்தை போட்டுக்காட்ட ஒப்புக்கொண்டார் கமல். அதன்பிறகு, 'விஸ்வரூபம்’ படம் பற்றி தலைமைச் செயலாளருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றையும் கொடுத்தது முஸ்லிம் கூட்டமைப்பு. அந்தக் கடிதத்தின் அடிப்படையில் முஸ்லிம் கூட்டமைப் பினரை உள்துறைச் செயலாளர் ராஜகோபால் 15 நாட்களுக்கு முன் அழைத்துப் பேசினார். ''படத்தில் இஸ்லாமியர்களைக் கொச்சைபடுத்திக் காட்சிகள் இருந்தால், அதை நீக்க வேண்டும்'' என ராஜகோபாலிடம் கூறினர் முஸ்லிம் பிரதிநிதிகள். ''மதநல்லிணக்கம் எந்த வகையிலும் கெட்டுவிடக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. எந்தச் சமூகத்தையும் இழிவுபடுத்தி, அவர்களைக் காயப்படுத்துவதை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது'' என்று சொன்ன ராஜகோபால், ''ரிலீஸுக்கு முன்பே படத்தை நீங்கள் பார்க்க விரும்பினால், அதற்கான ஏற்பாடுகளை அரசே செய்து தரும்'' என்று உறுதி அளித்தார். ''கமலே படத்தைக் காட்டுவதாகச் சொல்லி இருக்கிறார். அதனால் தேவைஇல்லை'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினர். படம் பார்த்த முஸ்லிம்கள்! படத்தை இரண்டு நாட்களுக்கு முன், போட்டுக்காட்டுவதாகச் சொன்னார் கமல். ஆனால், 'ஐந்து நாட்களுக்கு முன்பே காட்ட வேண்டும்’ என்றது முஸ்லிம் கூட்டமைப்பு. இறுதியில், நான்கு நாட்களுக்கு முன் என முடிவானது. தேதி குறிக்கப்பட்ட தினத்தில் படத்தைப் பார்க்க முடியவில்லை. 'டி.டி.ஹெச் பிரச்னை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது’ என, முஸ்லிம்களை பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார் கமல். அப்போதும்கூட, ''இஸ்லாமியர்களைப் புண்படுத்தும் வகையில் படத்தை எடுக்கவில்லை. படத்தின் ஹீரோவே முஸ்லிம்தான். படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் சந்தோஷப் படுவீர்கள்'' என்று பீடிகை போட்டு இருக்கிறார் கமல். படம் ரிலீஸ் தேதி ஜனவரி 25 என அறிவிக்கப்பட, 21-ம் தேதி படத்தை முஸ்லிம்களுக்குக் காட்ட முடிவு செய்யப்பட்டது. ''தொழுகை பாதிக்கும் என்பதால், காலையில் படத்தைக் காட்ட வேண்டும்'' என்றனர் முஸ்லிம் கூட்டமைப்பினர். 'மாலையில்தான் பார்க்க வாய்ப்பு இருக்கிறது. தொழுகைக்கு என் அலுவலகத்திலேயே ஏற்பாடு செய்து தருகிறேன்'' என்று சொன்னார் கமல். மாலையில், ராஜ்கமல் அலுவலகத்தில் முஸ்லிம் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூடினர். அங்கேயே மாலை நேரத் தொழுகையை முடித்துவிட்டு, படத்தைப் பார்க்க ஆரம்பித்தனர். அலுவலகத்தில் இருந்த ஹோம் தியேட்டரில் 'விஸ்வரூபம்’ திரையிட்டபோது கமலும் அவர்களுடன் அமர்ந்து படத்தை முழுமையாகப் பார்த்தார். படத்தின் முதல்பாதி முடிந்து இடைவேளை விட்டபோது, படம் பார்த்த முஸ்லிம்கள் கொஞ்சம் அப்செட் ஆனார்கள். 'படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் என்னிடம் 300-க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றன’ என்று, இடைவேளையின்போது சொன்னார் கமல். தாலிபான்கள் பிரத்யேகமாகப் பயன்படுத்தும் தொப்பி, ஆர்ட் டைரக்டர், காஸ்ட்யூம் டிசைனர், படத்தில் ஹெலிகாப்டர்களுக்கு அடிக்கப்பட்ட பெயின்ட் பற்றி எல்லாம் பேசி இருக்கிறார்கள். இரண்டாம் பாதிப் படத்தைப் பார்த்த முஸ்லிம் கூட்டமைப்பினர் கோபத்தின் உச்சத்துக்குச் சென்றனர். படம் முடிந்ததும் சொல்லிவைத்ததுபோல கமலிடம் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் அவர் பக்கம் திரும்பிக்கூட பார்க்காமல் கிளம்ப ஆரம்பித்தனர். அப்போது, அவர்களின் கருத்தைக் கேட்பதற்காக வாசலில் நின்று இருந்த கமலுக்கு, அவர்கள் எதுவும் பேசாமல் போனதால் முகம் மாறியது. கடைசியாக வந்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் முனீரிடம், 'படம் பிடித்திருக்கிறதா? எதுவும் கருத்து சொல்லாமல் போகிறீர்களே?’ என்று கமல் கேட்க, 'எதுவும் சொல்வதற்கு இல்லை.’ என்று முனீர் சொன்னார். 'ஏற்கெனவே நிறைய சங்கடங்களைச் சந்தித்து இருக்கிறேன். இன்னும் சங்கடங்களை உண்டாக்கி விடாதீர்கள்’ என்று கமல் சொல்ல, 'அல்லாஹ் உங்களைக் காப்பாற்றுவார்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் முனீர். அப்செட்டான நிலையில், 'விஸ்வரூபம்’ பிரிமியர் ஷோவுக்காக அன்றைய இரவே அமெரிக்கா கிளம் பினார் கமல். கமிஷனர் அலுவலகத்தில் கொந்தளிப்பு! இரவு 10 மணிக்கு படம் முடிந்து கிளம்பிய டீம், அப்போதே ஒரு ஓட்டலில் நள்ளிரவு வரை ஆலோசித்தது. 'முஸ்லிம்களுக்கு எதிராகக் காட்சிகள் இருந்தால், அதை மட்டும் நீக்கிவிட்டு படத்தை வெளியிட சம்மதிக்கலாம்’ என முன்பு முடிவு செய்து இருந்த முஸ்லிம் கூட்டமைப்பினர், 'மொத்தப் படத்தையும் தடை செய்ய வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்தனர். அடுத்த நாள் 22-ம் தேதி, 'படத்தைத் திரையிட அனுமதிக்கக் கூடாது’ என்ற கோரிக்கையுடன் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்தனர். அவர்களோடு மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவும் வந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்த சந்திப்பில், படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ஜார்ஜிடம் விவரித்தனர். 'தொழுகை நடத்தி விட்டு தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதாகப் படத்தில் அப்பட்டமாக நிறைய இடங்களில் காட்டுகிறார்கள். இஸ்லாமியர்களின் புனித நூலான குர்-ஆன், தீவிரவாதிகளின் கையேடாகச் சித்திரிக்கப்பட்டு இருக்கிறது’ என் றனர். 'பைபிள் படித்துவிட்டு சர்ச் சுக்குள் இருந்து வரும் ஒருவர் குண்டு வைப்பதாக காட்சி இருந்தால், நீங்கள் எப்படி உணர்வீர்கள்?’ என்று கிறிஸ்தவரான ஜார்ஜிடம் ஒருவர் கேள்வி எழுப்பினார். சந்திப்புக்குப் பிறகு, வெளியே வந்த முஸ்லிம் கூட்ட மைப்பினர் படத்தைப்பற்றி முதல் முறையாக மீடியாவிடம் பேசினர். ' 'விஸ்வரூபம்’ வெளியிடப்பட்டால் தேவை இல்லாத பிரச்னைகள் ஏற்படும். மாமன் மச்சானாக வாழ்ந்து வருபவர்களிடையே தேவை இல்லாத சங்கடங்களை உண்டாக்கி, சட்டம்- ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படலாம். இந்தப் படத்தை அரசு தடை செய்ய வேண்டும். இல்லையெனில் உயிரைக் கொடுத்தாவது முஸ்லிம்கள் தடை செய் வார்கள்’ எனக் கொந்தளித்தனர். படத்துக்கு 15 நாட்கள் தடை! இந்த விஷயங்களை எல்லாம் அமெரிக்காவில் இருந்தே விசாரித்துக் கொண்டு இருந்தார் கமல். அதற்கு அடுத்த நாள் 23-ம் தேதி உள்துறைச் செய லாளர் ராஜகோபாலை கோட்டையில் சந்தித்தனர் முஸ்லிம் கூட்டமைப்பினர். 'உங்கள் பக்கம்தான் அரசு இருக்கிறது என்ற நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை’ என்ற ராஜகோபால், 'பட ரிலீஸ் தேதிக்கு நெருக்கத்தில் வந்து இப்படி முறையிடுகிறீர்களே...’ என்றும் கேட்டு இருக்கிறார். 'கமல் சினி மாவில் நல்ல நடிகர். நிஜ வாழ்க்கையிலும் அவர் நடிகர் என்பது இப்போதுதான் புரிந்தது. ரிலீஸ் தேதிக்கு நெருக்கத்தில் படத்தைக் காட்டி அவர்தான் எங்களை இக்கட்டில் தள்ளிவிட்டார்’ என்று பதில் சொன்னார்கள். 'வழிபாட்டு முறைகள் தீவிரவாதத்தைத் தூண்டுவதுபோல இருக்கிறது’ என்று காட்சிகளையும் ராஜகோபாலிடம் விவரித்தனர். 'கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தால், நிச்சயம் அரசு பரிசீலிக்கும்’ என்று வாக்குறுதி கொடுத்தார் ராஜகோபால். காலையில் இந்தச் சந்திப்பு நடந்து முடிந்த பிறகு, கொடநாட்டில் இருந்து ஜெயலலிதா கோட்டைக்கு வந்தார். 'விஸ்வரூபம்’ பட விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், அரசு ஆலோசகர் தேபேந்திரநாத் சாரங்கி, உள்துறைச் செயலாளர் ராஜகோபால், டி.ஜி.பி. ராமா னுஜம், உளவுப்பிரிவு ஐ.ஜி. அம்ரிஷ் பூஜாரி, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் எனப் பெரிய டீமோடு ஆலோசனை நடத்தி இருக்கிறார் ஜெயலலிதா. அதன்பிறகு, படத்துக்குத் தடை என்ற பேச்சுகள் கிளம்ப ஆரம்பித்தன. 'விஸ்வரூபம்’ படத்துக்கு 15 நாட்கள் தடை என்பது இரவில் உறுதியானது. ''படத்தை தடை செய்யாவிட்டால் படம் ரிலீஸ் ஆகும் வெள்ளிக் கிழமை அன்று கமல் வீட்டை முற்றுகையிடுவோம். தியேட்டர்களில் படத்தை வெளியிடாமல் தடை செய்வோம். சென்சார் போர்டு அலுவலகம் முற்றுகை என அடுத்து போராட்டக் களம் சூடு பிடிக்கும்'' என முஸ்லிம் அமைப்புகள் அறிவித்ததால், சட்டம்- ஒழுங்கு பாதிக்கும் என்பதால் தடை விதிக்கப் பட்டது என்கிறார்கள். 'இன்னொசன்ஸ் ஆஃப் முஸ்லிம்’ படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை அமெரிக்கத் தூதரக அலுவலகம் தாக்கப்பட்டது. அடுத்தடுத்து முஸ்லிம்கள் நடத் தியப் போராட்டத்தால் தூதரகத்துக்கு விடுமுறை விடும் சூழல் உருவானது. மொத்த முஸ்லிம் அமைப்புகளும் அண்ணா சாலையில் நடத்திய போராட்டம் தலைநகரை கிடுகிடுக்கவைத்தது. இதை யெல்லாம் கருத்தில்கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாம். முஸ்லிம்களின் மனநிலை என்ன? ''இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தி ஒரு படம் வெளியாகவே இல்லை. குர்-ஆன், தீவிரவாதத்தை போதிக்கும் நூலாகவும் தொழுகை வழிபாடுகள் தீவிரவாதத்துக்கு ஊக்கம் அளிப்பதாகவும் காட்சிகள் சித்திரிக்கப்பட்டுள்ளன. கோவை, மதுரை போன்ற நகரங்கள் எல்லாம் சர்வதேசத் தீவிரவாதிகளின் புகலிடங்கள்போல் காட்டப்பட்டுள்ளன. தமி ழகத்தில் மாமா, மச்சான் உறவுமுறை பேசி சமூக நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சூழலை சிதைக்க வல்லது 'விஸ்வரூபம்’ திரைப்படம். 'முற்போக்கு பேசும் வைதீகன் ஆபத்தானவன்’ என்று சொன்ன பெரியாரின் கருத்தை கமல் மூலம் உண்மை என அறிய முடிகிறது'' என்கின்றனர் முஸ்லிம் கூட்ட மைப்பினர். 'விஸ்வரூபம்’ என்ன விஸ்வரூபம் எடுக்கப் போகிறது என்பதைக் காத்திருந்து கவனிப்போம்! நன்றி ஜூனியர் விகடன் 31-1-2013

மதசார்பற்ற சகோதரர் பார்வையில் விஸ்வரூபம்


நேற்றுதான் ‘விஸ்வரூபம்’ பார்த்துவிட்டு வந்தேன். கொஞ்சம் மண்டைக் குடைச்சல். ஆப்கான் தீவிரவாதம் குறித்து ஹாலிவுட்டில் நிறையப் படங்களை எடுத்துவிட்டார்கள். அவை ஒரு சார்பானவை. உலக போலிஸாகத் தன்னை நம்பும் அமெரிக்கா தன்னைத்தானே பரிசுத்த பூமியாக காட்டிக்கொண்டு , உலகத் தீவிரவாதிகளாக இஸ்லாமியர்களைக் காட்டுவதும் அவர்களை ஒடுக்க போரிடுவதுமாக குவிந்துள்ள காட்சிகள் அநேகம். அமெரிக்கா ஒரு சார்பாக காட்சிகளை அமைப்பதில் ஒன்றும் ஆச்சரியமல்ல. தாலிபான்கள் உருவானதில் அமெரிக்காவில் அரசியல் லாபம் குறித்தோ , அமெரிக்காவின் தீவிரமான பெட்ரோல் திருட்டு குறித்தோ எவ்வித விமர்சனமும் இல்லாமல், இஸ்லாமியன் என்பவன் தீவிரவாதி என்ற பிம்பத்தை உலகம் முழுக்கவும் மக்கள் மனதில் ஏற்றி வைக்க அமெரிக்க இயக்குனர்கள் படாத பாடு பட்டுக்கொண்டிருப்பதில் ஒரு அரசியல் லாபம் இருக்கலாம். ஆனால், இந்தியாவில் உட்கார்ந்துகொண்டு இட்டிலி தோசை திண்ணும் உனக்கு ஏன் அத்தகைய ஒருதலை பட்ச பார்வை என்பதைத்தான் கமலை நோக்கி நாம் கேட்க வேண்டியுள்ளது. அவர் ஊரில் தலித் மக்களுக்கு நடக்கும் கொடுமை குறித்து கேள்வி எழுப்ப அவருக்கு வக்கில்லை. அவர் மொழி பேசும் தமிழீல மக்களுக்கு இராணுவமும் புலிகளும் மாறி மாறி செய்த கொடுமைகளை விமர்சிக்கத் துப்பில்லை. அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கார் விருதை பெற இப்படியா அவன் மூத்திரத்தைக் கமல் குடிக்க வேண்டும். கடைசியாக ஒரு ஆங்கிலப் படம் இயக்கவும் வாய்ப்பும் கிடைத்துவிட்டது. எப்படியோ எதிரிக்கு எதிரி நண்பர்களாகிவிட்டீர்கள். அடிமைகள் எப்போதுமே நல்லப் பெயர் எடுக்க கூடுதலாக ஏதாவது செய்ய நினைப்பார்கள். கூடுதல் விசுவாசம் காட்ட நினைப்பார்கள். அவ்வகையில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகக் காட்டும் அதே வேலையில் அமெரிக்கர்களுக்கு அவர் கொடுக்கும் நற்சான்றிதழ்தான் அடிமை குணத்தின் உச்சம். ஒரு காட்சியில் அமெரிக்க இராணுவம் ஹெலிகப்டரில் இருந்தபடி தாலிபான் படையினரைச் சுடும். அதில் ஒரு குண்டு ஒரு பெண்ணின் மீது பட்டுவிட அமெரிக்க இராணுவ வீரன் மனம் நொந்து வருந்துவான். தாலிபான் படைக்கு பயிற்சியாளராக வரும் கமல், வீட்டில் இருக்கும் படை தலைவனின் மனைவியையும் குழந்தையையும் காப்பாற்ற வேண்டும் என்பான். அதற்கு தாலிபான் தலைவன் சொல்வானே ஒரு பதில்… “அமெரிக்கர்கள் குழந்தைகளையும் பெண்களையும் கொல்ல மாட்டார்கள். எனவே அவர்கள் வீட்டிலேயே இருக்கட்டும்.” அதே சமயத்தில் இஸ்லாமியர்கள் எவ்வளவு கொடூர மனம் படைத்தவர்கள் எனக்காட்ட வேண்டாமா? நேட்டோ (NATO) படையினர் இருப்பதாகச் சொல்லப்பட்ட இடங்களை தாலிபானியர்கள் தாக்குகின்றனர். அதில் அவர்கள் மக்களே முற்றாக அழிகின்றனர். “இந்தப் பாவமெல்லாம் அமெரிக்கர்களுக்குதான்” என்கிறான் தலைவன். நாகரீக, மனித மாண்பின் உச்சத்தில் அமெரிக்கனும் அநாகரீக, பிற்போக்கின் அடிபாதாளத்தில் ஆப்கான் மக்களும் இருக்கின்றனர் என உளர கமல் 100 கோடி செலவு செய்திருக்க வேண்டாம். தங்க கூடம் என்றால் மலம் என்ன மணக்கவா செய்யும். ஆக்கம் நன்றி சகோதரர் நவீன்

தாக்குதலுக்கு பயந்து தாய்லாந்துக்கு புலன்பெயரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்!


பாங்காக்:அரசு ஆதரவுப் பெற்ற தீவிரவாத புத்தர்களின் தாக்குதலுக்கு அஞ்சி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து தாய்லாந்திற்கு புலன் பெயர்ந்துள்ளனர்.காலநிலையையும் புறக்கணித்து நேற்று படகு மூலம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தாய்லாந்துக்கு புலன்பெயர்ந்தனர்.போதிய உணவோ, குடிநீரோ இன்றி அவர்கள் தாய்லாந்திற்கு பயணித்தனர். “நாங்கள் மியான்மரில் வசிக்க அஞ்சுகிறோம். ராக்கேன் மாநிலத்தில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் கடுமையான வறுமையில் உழலுகின்றனர். இனியும் அங்கே இருந்தால் கொல்லப்படுவோம்.ஆகையால் வேறொரு நாட்டிற்கு செல்கிறோம்” என்று தாய்லாந்துக்கு வருகை தந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் கூறுகின்றனர். மலேசியாவுக்கு புலன்பெயரும் ரோஹிங்கியா முஸ்லிம்களை தாய்லாந்து கடற்படையினர் பிடித்து கடத்தல் காரர்களுக்கு விற்பனைச் செய்வதாக நேற்று முன் தினம் பி.பி.சி கூறியிருந்தது. ரோஹிங்கியா முஸ்லிம்களை பாதுகாக்கவேண்டும் என்று ஆம்னஸ்டி இண்டர்நேசனலும், ஹியூமன் ரைட்ஸ் வாட்சும் கோரிக்கை விடுத்துள்ளன.

புதுச்சேரியிலும் விஸ்வரூபம் படத்திற்கு தடை!


இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டு விஸ்வரூபம் திரைப்படத்தை புதுச்சேரியில் தடை விதிக்கக் கோரி நேற்று தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் புதுச்சேரி மாநில முதல்வரை நேரில் சந்தித்து புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று புதுச்சேரியில் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலி்ல்லாஹ்! புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தீபக் குமார் இந்த உத்தரவை பிரப்பித்துள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் எதிர்ப்பை தொடர்ந்து கொல்லம், பாலக்காட்டில் விசுவரூபம் காட்சி நிறுத்தம்! 14 தியேட்டர்களில் திரையிட தடை!


கொல்லம்:பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து கொல்லம் மாவட்டத்தில் கமல் ஹாசனின் விசுவரூபம் திரைப்படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை கொல்லம் மாவட்டத்தில் விசுவரூபம் திரையிடும் தியேட்டருக்கு முன்பாக நூற்றுக் கணக்கான பாப்புல ஃப்ரண்டின் உறுப்பினர்கள் திரண்டு கண்டனப் போராட்டம் நடத்தினர். எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து திரைப்படத்தின் காட்சியை நிறுத்துவதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்தது. பாலக்காட்டில் நேற்று காலை 11 மணியளவில் விசுவரூபம் திரையிட்ட தியேட்டருக்கு முன்பாக பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். தியேட்டருக்குள் நுழைய முயன்றதை தொடர்ந்து போலீஸ் தலையிட்டது. இதனைத் தொடர்ந்து திரைப்படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. இதனிடையே கேரள மாநிலத்தின் கோழிக்கோடு, எர்ணாகுளம், இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம் அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து விசுவரூபம் திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 25 ஜனவரி, 2013

கமல்ஹாசன் கருத்துக்கு தமுமுக கண்டனம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் கண்டன அறிக்கை: விஸ்வரூபம் படம் தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து கமல்ஹாசன் ஏதேதோ கூறுகிறார். முதலில் கலாச்சார பயங்கரவாத்தை எதிர்கொள்வேன் என்றார். இப்போது முதுகில் குத்திவிட்டார்கள் என்கிறார், தேசப்பக்தி உள்ள முஸ்லிம்கள் எதிர்க்கமாட்டார்கள் என்கிறார். முஸ்லிம்களை கொச்சைப்படுத்த கமல் எடுத்திருக்கும் விஸ்வரூபம் படப் பிரச்சனை கருத்து தீவிரவாதமாகவே பார்கிறோம். படத்தை பார்க்க காலத்தை நீட்டித்தார். படத்தை இறுதிவரை பார்த்தப் பின் அதிர்ச்சி அடைந்ததால் அவருடன் மேலும் ஏதும் பேசாமல் கிளம்பினோம். அவர் மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கையை படம் தகர்த்து விட்டது. இந்தப் படத்தில் எந்த மாச்சரியங்களும் இடம்பெறாது என்றும், கமலுடன் நடந்த முதல் இரண்டு சந்திப்புகளின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்காது என்ற நம்பிக்கையும் எங்களுக்கு ஏற்பட்டது. ஆனால் அவருடைய அலுவலகத்தில்இந்த படத்தை நாங்கள் பார்த்த போது அங்குலம் அங்குலமாக படம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு விரோதமாகவும் அனைத்துகாட்சிகளும், கதாபாத்திரங்களும் ஒரு வெறுப்பு பிரச்சாரமாகவே அமைந்திருந்தது இதன் காரணமாகதான் இப்படத்தை தடை செய்ய தமிழக அரசிடம் கோரினோம். படத்தை பார்த்த பின்னர் நாங்கள் படத்திற்கு கமலிடம் நற்சான்றிதழ் எதுவும்தரவில்லை தேசப்பற்று இருக்கின்ற காரணத்தால் தான், நாட்டில் ஏதும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்ற அக்கறையில் தான் களத்தில் இறங்கினோம். எனவே கமல்ஹாசன் அவர்களின் கருத்தை தமுமுக வன்மையாக கண்டிக்கிறது.

விஸ்வரூபம் படம்: மலேசியாவிலும் தடை


இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆனையும், முஸ்லிம்களின் மதவழிபாடுகளையும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்ட விஸ்வரூபம் திரைப்படம் உலகம் முழுக்க எதிர்ப்பை சந்தித்து வருகிறது. தமுமுக சார்பில், உலகெங்கிலும் வாழும் இந்தியர்களைத் தொடர்பு கொண்டு, இப்படத்திற்கு தடை விதிக்குமாறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள், சிங்கப்பூரைத் தொடர்ந்து மலேசியாவிலும் இன்று காலை இப்படம் தடை செய்யப்பட்டது. மேலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் இப்படத்தை தடை செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி : தௌஹீத் ஜமாஅத்


கமல் ஹாசன் இயக்கி தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்தினை இலங்கையில் திரையிட தடை விதிக்கக்கோரி தௌஹீத் ஜமாஅத் அமைப்பினர் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளதாக தௌஹீத் ஜமாஅத்தின் துணைச் செயலாளர் ரஸ்மின் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். நேற்று இரவு தமிழக அரசினால் விஸ்வரூபம் திரைப்படத்தினை 15 நாட்களுக்கு தமிழகத்தில் வெளியிட தடை விதித்திருந்தது. இந்நிலையில் இலங்கையிலும் தற்போது விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இலங்கை அரசினாலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

விஸ்வரூபத்திற்கு இடைக்காலத் தடை: சமுதாய ஒற்றுமைக்கு முதல் வெற்றி!


இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கவல்ல விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டுமென தமுமுக உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் அடங்கிய முஸ்லிம் கூட்டமைப்பு தலைவர்கள் தமுமுக மூத்த தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. தலைமையில் தமிழக உள்துறைச் செயலாளரை நேற்று (23.01.2013) காலை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மேலும் இப்படம் திரைப்படம் வெளியானால் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்றும் கூறினர். முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு தமிழக அரசு மதிப்பளித்து விஸ்வரூபம் படத்தினைத் திரையிட 15 நாட்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காமல் படத்தைத் திரையிட அனுமதிக்க முடியாது என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சமுதாய ஒற்றுமைக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். தமிழகத்தைப் போலவே புதுவை மாநிலத்திலும் இத்திரைப்படத்தை தடை செய்வதற்கான முயற்சிகளில் தமுமுக உள்ளிட்ட அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

சனி, 19 ஜனவரி, 2013

பாக்.,பிரதமர் மீதான ஊழல் வழக்கை விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி தற்கொலை


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் பெர்வேஸ் அஷ்ரப், மீதான ஊழல் வழக்கை விசாரித்த, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி, தற்கொலை செய்து கொண்டார்.பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர், பெர்வேஸ் அஷ்ரப், மின் துறை அமைச்சராக இருந்த போது, மின் நிலையங்களை வாடகை விட்டதில், ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, இந்த ஒப்பந்தங்களை, மார்ச் மாதம் ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இந்த பேரத்தில் சம்பந்தப்பட்ட, அஷ்ரப் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கும் படி, ஊழல் தடுப்பு துறைக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.ஆனால், இதுவரை, இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது, ஊழல் தடுப்பு துறை நடவடிக்கை எடுக்கவில்லை.மின் நிலைய வாடகை விவகாரத்தில், ஊழல் நடந்ததற்கான ஆதாரங்கள் இருந்தும், நடவடிக்கை எடுக்காத ஊழல் தடுப்புத் துறையை கண்டித்த சுப்ரீம் கோர்ட், பிரதமர் அஷ்ரப்பை, கைது செய்யும் படி, உத்தரவிட்டுள்ளது. ஊழல் தடுப்புத் துறை தலைவர், பாஷிஷ் புகாரிக்கும் கண்டன நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இதற்கிடையே, அஷ்ரப் மீதான ஊழல் வழக்கை, பாகிஸ்தான் லஞ்ச ஒழிப்புத் துறையை சேர்ந்த, இரண்டு அதிகாரிகள் விசாரித்தனர். இவர்களில் ஒருவர், லஞ்ச ஒழிப்புத் துறை துணை இயக்குனர், கம்ரான் பைசல். இவர், இஸ்லாமாபாத்தில் உள்ள தன் வீட்டில், நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தற்போது போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வெள்ளி, 18 ஜனவரி, 2013

ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தும் காத்ரியுடன் பேச்சு நடத்த குழு அமைப்பு


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், ஜனநாயகம் கோரி, போராட்டம் நடத்தி வரும், தாகிர் உல்-காத்ரியுடன் பேச்சு வார்த்தை நடத்த, முக்கிய கட்சி தலைவர்களை கொண்ட குழு, அமைக்கப்பட்டுள்ளது. "பாகிஸ்தானில் ஊழல் பெருத்து விட்டதால், பாகிஸ்தான் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்' என, "தேரிக்-மின் ஹஜ்-உல்-குரான்' கட்சியின் நிறுவனர், தாகிர் உல்-காத்ரி, கடந்த, நான்கு நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்.சூபி அமைப்பின் தலைவரான காத்ரி, ""பாகிஸ்தானில் உண்மையான ஜனநாயகம் அமைய, தேர்தல் சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும். தற்போதைய ஊழல் அரசு, உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால், எகிப்து, துனிசியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளை போல, பாகிஸ்தானிலும், தொடர் கிளர்ச்சியில் ஈடுபடுவோம்,'' என, எச்சரித்துள்ளார்.லாகூரில் இவர் தொடங்கிய கண்டன ஊர்வலம், தற்போது, இஸ்லாமாபாத்தில், பார்லிமென்ட்டை முற்றுகையிட்டுள்ளது.ஊழல் வழக்கில், பிரதமர் அஷ்ரப்பை கைது செய்ய சொல்லி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த பிரச்னைக்கிடையே, காத்ரியின் தொடர் போராட்டம், பாகிஸ்தான் அரசுக்கு, சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இவரை கைது செய்ய, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காத்ரியை கைது செய்தால், நிலைமை மோசமாகும், என்பதால், அவரை கைது செய்வதற்கு பதில், பேச்சு வார்த்தை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, மத விவகாரத்துறை அமைச்சர் குர்ஷித் ஷா தலைமையில், முக்கிய கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், காத்ரியுடன்,இன்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.""எழுத்து பூர்வமாக உறுதி அளிக்கும் வரை, பார்லிமென்ட் பகுதியிலிருந்து நகர மாட்டோம்; பேச்சு வார்த்தையில், உள்துறை அமைச்சர் பங்கேற்பதை ஏற்க முடியாது,'' என, காத்ரி தெரிவித்துள்ளார்.

கென்ய நாட்டு தேர்தலில் ஒபாமா சகோதரர் போட்டி


கோஜிலோ: கென்யா நாட்டின் மாகாண தேர்தலில், ஒபாமாவின் சகோதரர் போட்டியிட உள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின், தந்தைக்கு, நான்கு மனைவிகள். ஆன் துன்ஹாம் என்பவருக்கு பிறந்தவர் தான், பரக் ஒபாமா.ஒபாமா தந்தையின், மற்றொரு மனைவிக்கு பிறந்தவர், மாலிக் ஒபாமா. கென்யா நாட்டை சேர்ந்த, மாலிக் ஒபாமா, 54, ஒரு அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். சகோதரரை போல, தானும், அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளார்.கென்யாவில், வரும் மார்ச் மாதம், மாகாண தேர்தல் நடக்க உள்ளது. சியாயா மாகாண தேர்தலில், இவர், சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளார். இவரை எதிர்த்து, தற்போதைய கென்ய பிரதமர், ரெய்லா ஒடிங்காவின் சகோதரர், போட்டியிடுகிறார்.அதிபர் ஒபாமாவின் சகோதரர் என்ற அங்கீகாரம் உள்ளதால், இந்த தேர்தலில், தனக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என, மாலிக் நம்புகிறார்.

அல்ஜீரியாவில் அதிரடி நடவடிக்கை பிணைய கைதிகள் உட்பட, 50 பேர் பலி


அல்ஜியர்ஸ்: ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில், ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதில், 35 பிணைய கைதிகளும், 15 கடத்தல்காரர்களும் கொல்லப்பட்டனர்.ஆப்ரிக்க நாடான மாலியில், அல்-குவைதா ஆதரவுடன் செயல்படும், பயங்கரவாதிகள், கயோ உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றினர். இந்த பயங்கரவாதிகளை சமாளிக்க, மாலி அரசு, பிரான்ஸ் நாட்டின் உதவியை நாடியது.இதையடுத்து, கடந்த வாரம், மாலிக்கு விரைந்த பிரான்ஸ் படைகள், விமானம் மூலம் குண்டு வீசி, பயங்கரவாதிகள் கைப்பற்றிய பகுதிகளை மீட்டன. இந்த தாக்குதலில், 100க்கும் அதிகமான, பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மாலியில், நிலைமை சீராகும் வரை தங்கியிருக்க, பிரான்ஸ் படைகள் முடிவு செய்துள்ளன.பிரான்ஸ் நாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மாலியின் அண்டை நாடான அல்ஜீரியாவில் உள்ள, எண்ணெய் நிறுவனத்தின் மீது, பயங்கரவாதிகள் நேற்று முன்தினம், தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் கொல்லப்பட்டார்; ஏழு பேர் படுகாயமடைந்தனர்.பிரிட்டன் நிறுவனத்துக்கு சொந்தமான, "பிபி' நிறுவனத்தில் பணிபுரிந்த, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் ஊழியர் உட்பட, 50க்கும் அதிகமானவர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.கடத்தல்காரர்கள் பதுங்கியிருந்த பகுதியில், அல்ஜீரிய ராணுவம், நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், பிணை கைதிகள், 35 பேரும், கடத்தல்காரர்கள், 15 பேரும் கொல்லப்பட்டனர். 26 பிணைய கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

இந்தியாவுக்கு போர் வெறி – ஹினா ரப்பானி கர் குற்றச்சாட்டு!


நியூயார்க்:ஜம்மு கஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்கு அருகே இரண்டு ராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்தியாவின் பதில்களில் முழங்குவது போர்வெறி என்று பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் கூறியுள்ளார்.
மோதலை தீவிரப்படுத்தும் இந்தியாவின் பதில்களில் நிராசையடைந்துள்ளதாக அவர் கூறுகிறார். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும், தெற்காசியா பிராந்தியத்திற்கும் இரு நாடுகள் இடையேயான ஒரு மோதலை தாங்கமுடியாது. பேச்சுவார்த்தையின் வாசலை திறக்கவேண்டும் என்பதையே தனது அரசு விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு இரு நாடுகள் இடையே உறவு பழையது போல அல்ல என்று பிரதமர் மன்மோகன்சிங்கின் அறிக்கைக்கு பின்னால் ஹினா ரப்பானியின் அறிக்கை வெளியாகியுள்ளது. அமைதி முயற்சிகளூக்கு பங்கம் ஏற்படும் என்பதால் எந்தவொரு இந்திய ராணுவ வீரனை கொலைச் செய்வதையோ, தலையை வெட்டுவதற்கோ பாகிஸ்தான் அங்கீகாரம் அளிக்கும் பிரச்சனையே உதிக்கவில்லை என்று ஹினா ரப்பானி தெரிவித்தார்.

”இரவில் தனியாக ஒரு இளம் பெண்ணுடன் சுற்றிய பாய் பிரண்டை தான் முதலில் தூக்கிலட வேண்டும்” சுப்ரீம் கோர்ட் வக்கீல் மனோஹர்


டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாட வந்துள்ள 56 வயதுள்ள சுப்ரீம் கோர்ட் வக்கீல் மனோஹர் என்பவர் ”மாணவியை இரவு நேரத்தில் தனியாக அழைத்து சென்ற பாய் பிரண்டை தான் முதலில் துக்கிலிட வேண்டும் என பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்ததுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வக்கீல் மனோர் கூறுகையில் ”கண்ணியத்துடன் நடந்து கொள்ளும் எந்த பெண்ணும் நமது நாட்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக நான் கேள்வி பட்டதில்லை, கொள்ளை கூட்ட தலைவன் கூட கண்ணியத்துடன் இருக்கும் பெண்ணை தொடமாட்டான்” எனத் தெரிவித்துள்ளார். டெல்லி மாணவியின் பாய் பிரண்டின் காம உணர்ச்சியினால் தான் இந்த சம்பவமே நடந்துள்ளது. அவன் தான் அனைத்திற்கும் காரணம் அவனை தான் முதலில் தண்டிக்க வேண்டும் என வக்கீல் மனோஹர் கூறியுள்ளார்.

சனி, 5 ஜனவரி, 2013

டெல்லி வன்புணர்வு - பாகிஸ்தானிலும் பெண்கள் போராட்டம்...........!!


டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி வன்புணரப்பட்ட சம்பவம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ள நிலையில் அண்டை நாடான பாகிஸ்தானிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இத்துயரச் சம்பவத்தைக் கண்டித்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர், போராட்டம் நடத்தி வரும் இந்திய சமூக அமைப்பினருக்கு ஆதரவாக இந்த போராட்டம் நடத்தப்படுவதாக கூறிய பாகிஸ்தான் பெண்கள் அமைப்பினர், இந்தியப் பெண்களுக்கு ஆதரவாக நிற்பதோடு மட்டுமில்லாமல் உலகப் பெண்களுக்காவும் போராட்டம் நடத்துவோம். பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளை களைய இந்திய, பாகிஸ்தான் ஊடகங்கள் உதவிட வேண்டும். பெண்கள் வணிகப் பொருட்கள் அல்லர், அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை ஆண்கள் மற்றும் சிறுவர்களிடையே புரியவைக்க கல்வி அவசியம் தேவை என்று கருத்தளித்துள்ளனர்.. பாகிஸ்தான் மக்கள் மதத்தை பார்க்கவில்லை, தேசத்தை பார்க்கவில்லை.. மனிதனை பார்க்கிறார்கள்.. நாம்தான் திருந்தாமல் இருக்கிறோமோ?!! தேசம் கடந்த நேசம்...........! நன்றி - தோழர் மார்க்ஸ்

2013-ஃபலஸ்தீன் சுதந்திரத்திற்கான ஆண்டு – மஹ்மூத் அப்பாஸ்!


ராமல்லா:2013-ஆம் ஆண்டு ஃபலஸ்தீன் சுதந்திரத்திற்கான வருடம் என்று ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கூறினார். ஃபத்ஹ் இயக்கத்தின் 48-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார் அவர். மேலும் அவர் கூறியது: சுதந்திரம் ஃபலஸ்தீன் மக்களுக்கு அருகில் வரும் ஆண்டு இது. சிறைக்கைதிகள் விடுதலை அடைவார்கள். புலன்பெயர்ந்தோர் தாயகம் திரும்புவார்கள். ஃபலஸ்தீன் நாட்டிற்கான பிறப்புச் சான்றிதழ்தாம் கடந்த மாதம் ஐ.நாவில் கிடைத்த பார்வையாளர் நாட்டு அந்தஸ்து. இனி பூரண விடுதலைக்கான போராட்டமாகும். ஃபலஸ்தீன் மக்களிடையே ஒற்றுமை ஏற்படவேண்டும். தேச அந்தஸ்தை பெற தேசிய ஐக்கியம் முக்கியம். இவ்வாறு மஹ்மூத் அப்பாஸ் கூறினார். ஃபத்ஹின் ராணுவ பிரிவாக இருந்த அல் ஆஸிஃபா இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்திய 1965-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியை நினைவுக்கூறுவதை அவர்கள் ஃபத்ஹின் ஆண்டு விழாவாக கடைப்பிடிக்கின்றனர். இதனிடையே, காஸ்ஸாவிற்கு கட்டிடம் கட்ட தேவையான பொருட்களை கொண்டுவருவதற்கான தடையை பாதி அளவில் இஸ்ரேல் நீக்கியுள்ளது.

விஸ்வரூபம் திரைப்படத்தை எங்களிடம் காட்டிய பிறகே திரையிட வேண்டும் – இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு!


சென்னை:முஸ்லிம் தலைவர்களிடம் படத்தை திரையிட்டு காட்டிய பிறகே விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட வேண்டும் என்று தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே .முஹம்மது ஹனீபா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; கேளிக்கை, பொழுதுபோக்கு, சுய சம்பாத்தியம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களில் கோடிக்கணக்கான மக்கள் தங்களின் கொள்கை நெறியாக ஏற்றுச் செயல்படும் இஸ்லாத்தையும், அதை வாழ்வியல் நெறியாகக் கொண்ட முஸ்லிம்களையும் தவறாகச் சித்தரிப்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது . கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ திரைப்பட முன்னோட்டக் காட்சிகள் அடிமட்டத்திலிருக்கும் முஸ்லிம் சகோதரனுக்கும் கூட பெரும் ஐயத்தை ஏற்படுத்துகிறது . இந்த அச்சத்தையும் ஐயத்தையும் போக்க ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதிகளான 24 முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்புகளின் தலைவர்களுக்குத் திரையிட்டுக் காட்டுவதற்கு கமல்ஹாசன் கடமைப்பட்டிருக்கிறார். நங்கள் எடுத்து வரும் இந்த முயற்சிகளுக்கு எந்த பலனும் கிடைக்காத பட்சத்தில் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் தங்கள் எதிர்ப்பு மற்றும் உணர்வுகளை ஜனநாயக ரீதியான போராட்டங்கள் மூலம் தெரிவிக்க வேண்டியது தவிர்க்கவியலாத ஒன்றாகி விடும். அத்தகைய சூழல் எழாத வண்ணம் சமூகப் பொறுப்புடன் செயல்படவேண்டியது ஒவ்வொருவரின் மீதும் கடமையாகின்றது என்பதை இக்கூட்டமைப்பு தெரிவித்துக்கொள்கின்றது.

மற்றுமொரு சுதந்திர போராட்டத்தை நோக்கி முஸ்லிம்கள்! டிஎன்டிஜே பிரகடனம்!!


டிசம்பர் 21ஆம் தேதியன்று உலகம் அழியப்போகின்றது என்று கிளப்பப்பட்ட பீதியை மக்கள் மத்தியில் போக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தென்சென்னை மாவட்டம், ஜாம்பஜார் கிளையினர் விநியோகித்த விழிப்புணர்வு துண்டுப்பிரசுரத்தை காரணம் காட்டி கடந்த டிசம்பர் 22ஆம் தேதி நள்ளிரவு 2.30மணிக்கு ஜாம்பஜார் கிளைத்தலைவர் யாகூப் அவர்களை காவிச்சிந்தனையோடு செயல்பட்ட காவல்துறை அவரது வீடு புகுந்து நள்ளிரவில் அடாவடியாக கைது செய்தது.
அப்பாவிகளை கைது செய்ததோடு மட்டுமல்லாமல் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து, முஸ்லிம் பெண்களை இழிவாகப்பேசி, அவர்களிடத்திலிருந்த இரண்டு செல்பேசிகளை பிடுங்கிச் சென்ற காவல்துறையின் காட்டுமிராண்டித் தர்பாரைக் கண்டித்து அன்றைய தினமே மாலை 4மணிக்கு டி-1 காவல் நிலைய முற்றுகையை டிஎன்டிஜேயின் தென்சென்னை மாவட்டம் அறிவித்தது. முற்றுகையிட வருபவர்களை இரத்தக்களறியாக்கி அனுப்ப வேண்டும்; அதன் மூலம் முஸ்லிம்களை கருவறுக்க வேண்டும் என முன்கூட்டியே திட்டம் தீட்டிய காவித்துறையினர், போராட்டம் துவங்குவதற்கு முன்பே நமது சகோதரர்கள் மத்தியில் பலப்பிரயோகம் செய்து தடியடி நடத்தி மிருக வெறியாட்டம் ஆடினர்.
இந்த மிருகவெறியாட்டம் ஆடிய திருவல்லிக்கேணி ஏ.சி.செந்தில் குமரன், திருவல்லிக்கேணி சரக டி.சி.கிரி, அயனாவரம் ஏ.சி.கிருஷ்ணசாமி ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இந்த அநியாயத்தைக் கண்டித்து முஸ்லிம்களின் அடுத்த கட்ட போராட்டம் என்ன என்பதை அறிவிப்பு செய்வதற்காகவும் கடந்த 29.12.12 – சனிக்கிழமை அன்று மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. மாநிலத்தலைவர் பி.ஜே அவர்கள், “காவல்துறையின் அராஜகம்” என்ற தலைப்பில் கண்டன உரையாற்றினார். அவர் தனது கண்டன உரையில் காவல்துறையினர் முஸ்லிம்களுக்கு எதிராக துவங்கியுள்ள யுத்தத்திற்கு தக்க பதிலடி கொடுக்காவிட்டால் மறுபடியும் நாம் 20ஆண்டுகளுக்கு பின்னால் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விடும் என்றும், அதற்கு தக்க பதிலடியாக வரக்கூடிய ஜனவரி 3ஆம் தேதி வியாழக்கிழமை அன்று எந்த திருவல்லிக்கேணியில் வைத்து முஸ்லிம்கள் மீது காட்டுமிராண்டித்தாக்குதல் நடத்தி தடியடி நடத்தினார்களோ அதே இடத்தில் ஒரு லட்சம் முஸ்லிம்கள் திரண்டு மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த உள்ளோம். (பின்னர் இது 10 ஆம் தேதிதக்கு தள்ளி வைக்கப்பட்டது) காவல்துறையின் கருப்பாடுகளாக உள்ள திருவல்லிக்கேணி ஏ.சி.செந்தில் குமரன், திருவல்லிக்கேணி சரக டி.சி.கிரி, அயனாவரம் ஏ.சி.கிருஷ்ணசாமி ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அடுத்த கட்ட போராட்டமாக முதல்வர் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்படும் என்று எச்சரித்து முடித்தார்.