சனி, 2 பிப்ரவரி, 2013

சூர்யா நடித்த 'சிங்கம்-2' படம் மீது தணிக்கைகுழுவில் புகார்


சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடித்துள்ள சிங்கம் 2 படம் ரிலீசுக்கு தயாராகிறது. ஹரி இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னிஅரசு சென்னை தணிக்கை குழு அதிகாரிக்கு அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:- சூர்யா நடித்து ஹரி இயக்கத்தில் வெளிவர இருக்கும் சிங்கம் 2 படத்தில் வில்லன்கள் கடற்கொள்ளையர்களாக சித்தரிக்கப்பட்டு உள்ளனர். இப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் உள்ளன. இம்மாதிரியான காட்சிகளை முன் கூட்டி சுட்டிக் காட்டுவது சமூக பொறுப்புள்ளவர்களின் கடமை என்பதால் தணிக்கை குழு கவனத்துக்கு கொண்டு வருகிறோம். இந்த படத்தில் இத்தகு காட்சிகள் இடம் பெறாமல் தணிக்கை செய்து அனுமதி வழங்க வேண்டும். விஸ்வரூபம் படம் திரையிடப்படாமல் நிறுத்தப்பட்டதற்கு இஸ்லாமிய அமைப்புகள் மட்டும்மின்றி தணிக்கை குழுவும் காரணமாகும். சமூக பொறுப்பை தணிக்கை குழுவினர் சரியாக செய்யாததால் தான் தமிழகத்தில் அசாதாரண சூழல்கள் நிலவுகிறது. இதனை ஓரு படிப்பினையாக கொண்டு இனிவரும் திரைப்படங்களை கவனமாக தணிக்கை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக