வியாழன், 23 ஆகஸ்ட், 2012

பாகிஸ்தானில் கனமழைக்கு 26 பேர் பலி

பெஷாவர்: பாகிஸ்தான் வடக்கு பகுதியில் கணமழைக்கு 26 பேர் பலியானதாகவும் ‌கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மாநில பேரழிவு மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து ‌‌மாநில பேரழிவு மேலாண்மை ஆணைய அதிகாரி கவஜா ஷியா தெரிவித்ததாவது: கடந்த இரு தினங்களுக்கு முன் துவங்கிய கன மழையால் 500 வீடுகள் மற்றும் 17 பேர் பலியானதாக தெரிவித்தார். இது தவிர கடந்த புதனன்று கைபர் பக்துங்க்வா பகுதியில் 9 பேரும் மான்சேரா மாவட்டத்தில் 6 பேரும் நைள‌ஷேரா மாவட்டத்தில் 3 பேரும் பலியானதாக தெரியவந்துள்ளது. பாகிஸ்தானின் 65 ஆண்டுகால வரலாற்றில் இது மோசமான வெள்ளப்பாதிப்பு என மாநில பேரழிவு மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக