செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

அசாமில் நடப்பதென்ன; அந்நியர் படையெடுப்பா?: வி.சண்முகநாதநின் கட்டுரைக்கு நமது கமெண்ட்ஸ் :

சகோ. சண்முகநாதனின் மத துவேச கருத்துகள் ஜீரணிக்க முடியாத ஓன்று . முதலில் இந்த கட்டுரையை நான் பத்திரிகையில் தான் பார்த்தேன். என்னை போன்ற ஏராளமான வாசகர்களை கொண்டுள்ள தினமலர் இதுபோன்ற ஒரு மத வெறுப்பு கருத்துகளை வெளிப்படுத்தியிருக்க கூடாது என்றே நான் நினைக்கிறேன். பொதுவாகவே இந்திய பத்திரிகையாளர்கள் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கிறார்கள். அஸ்ஸாமில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் வங்கதேசத்தினர் என்று சொல்வதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் ? இந்த தேசத்தினரை , இந்த மண்ணிற்கு சொந்தக்காரர்களை அன்னியர் என்று சொல்லி அவர்களை அகதிகள் ஆக்க வேண்டும் என்பது தான் உங்களுடைய ஆசையா ? மத்தபடி வேறு நாடுகளுடன் ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் நான் இந்தியன். என்னுடைய நாட்டிற்கு வரும் ஒரு பாகிஸ்தான் இந்துவுக்கு இங்கு தங்குவதற்கு உரிமை உள்ளது,  என்னுடைய நாட்டிற்கு வரும் ஒரு இலங்கை இந்துவுக்கு இங்கு தங்குவதற்கு உரிமை உள்ளது , இன்னும் எத்தனையோ நாடுகளில் இருந்து வரும் புத்த மதத்தினருக்கு இங்கு தங்குவதற்கு உரிமை உள்ளது, இவர்கள் எல்லாம் இங்கு தங்கலாம் அவர்களை வரவேற்பது இந்தியர்களின் தாராள மனப்பான்மை, மனிதாபிமான நடவடிக்கை என்று சொன்னால் அந்த எண்ணம் ஏன் முஸ்லிம்கள் விசயத்தில் வருவது இல்லை. மற்ற நாட்டு முஸ்லிமகள் முன் எங்கள் இந்திய தேசம் வந்தாரை வாழ வைக்கும் முன் மாதிரி தேசம் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியாமல் போய் விட்டதே என்பது தான் நம் வருத்தம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக