திங்கள், 27 ஆகஸ்ட், 2012

அஸ்ஸாம் வன்முறை நீடிக்கிறது: அகதிகளுக்கு உதவிய 3 பேரை கொலைச் செய்த போடோ பயங்கரவாதிகள்!

Assam flares up again - 3 killed bodo's attack
புதுடெல்லி:சற்று இடைவேளைக்குப் பிறகு போடோ பயங்கரவாதிகளின் தொடர்ச்சியான தாக்குதல் அரங்கேறும் அஸ்ஸாமில் ஞாயிற்றுக்கிழமை(நேற்று) மேலும் நான்குபேர் பலியானார்கள். ஏற்கனவே சனிக்கிழமை(நேற்று முன்தினம்) 5 பேர் கொல்லப்பட்டனர். சொந்த கிராமங்களில் இருந்து உயிரை காப்பாற்ற ஓடிய முஸ்லிம்கள் வீடுகளுக்கு திரும்புவதை தடுக்க போடோக்கள் வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
ஒரு அகதி உள்பட அகதிகளுக்கு உதவிய சகோதரர்களான 2 பீகார் முஸ்லிம்களையும் போடோ பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை கொலைச்செய்தனர்.மேலும் சனிக்கிழமை தாக்குதலில் காயமடைந்த ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார்.
துப்ரி மாவட்டம் சுகன்ஜோரா கிராமத்தில் பலத்த காயங்களுடன் ஒரு சடலம் ஞாயிற்றுக்கிழமை காலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தகவல் பரவியதும் ஆத்திரமடைந்த சுகன்ஜோரா கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலை 31-ல் உள்ள மத்ரிஜோரா பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸாரின் சமாதான முயற்சியைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
அகதிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கிக்கொண்டிருந்த பிஜ்னிக்கு அருகே ஜுனோய் பகுதியைச் சார்ந்த அன்ஸாரி(வயது-50) மற்றும் அவரது சகோதரர் அன்வர்(வயது-45) ஆகியோர் போடோ பயங்கரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இதுதவிர, கொக்ரஜார் மாவட்டம் சலகதி ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியதில் ஒரு பெண் உள்பட 2 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பொங்கைகாவ்ன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிராங் மாவட்டத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்தனர். இவர்களின் சடலங்கள் அம்குரி பஜார் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ராஜ்பரா முகாமில் தங்கியிருந்தவர்கள் என தெரியவந்தது.
போடோலாண்டில் இருந்து உயிரைக் காப்பாற்ற வெளியேறியவர்கள் மீண்டும் சொந்த கிராமங்களுக்கு இனி ஒருபோதும் திரும்பி வரக்கூடாது என்ற மிரட்டலை இத்தாக்குதல்கள் மூலம் போடோ பயங்கரவாதிகள் விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக