வியாழன், 2 ஆகஸ்ட், 2012

ரோஹிங்கியா முஸ்லிம் இனப்படுகொலை: அரசின் முழு ஒத்துழைப்புடன் நிகழ்த்தப்பட்டது – ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் நேரடி ரிப்போர்ட்!


human rights group said Myanmar government forces opened fire on crowds of ethnic Rohingya
யங்கூன்:ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையை தடுக்க மியான்மர் அரசு எதுவும் செய்யவில்லை என்றும், அதற்கு பதிலாக வன்முறையாளர்களுடன் இணைந்து ராணுவம் கொலை மற்றும் கூட்டு பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபட்டதாகவும் சர்வதேச மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் நேரடி ரிப்போர்ட் கூறுகிறது.
இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுடன் நடத்திய நேர்முகத்தின் அடிப்படையில் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் தயாரித்துள்ள அறிக்கையில் மியான்மர் அரசை குற்றவாளி கூண்டில் நிறுத்தும் அளவுக்கு குற்றச்சாட்டுகள் அடங்கியுள்ளன. இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மேற்கு மியான்மரில் ராக்கேன் மாநிலத்திற்கு நேரடியாக சென்று இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது பெரும்பான்மை பெளத்தர்களின் தலைமையில் நடத்தப்பட்ட தாக்குதல்களை தடுப்பதாக அரசு கூறிய போதிலும் அதற்கு மாற்றமான சம்பவங்கள் நிகழ்ந்ததாக ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் ஆசியா இயக்குநர் ப்ராட் ஆடம்ஸ் கூறுகிறார்.
ராக்கேனில் சட்டம்-ஒழுங்கை சீரமைக்க அரசு முடிந்தவரை முயற்சி செய்வதாக மியான்மர் வெளியுறவுத்துறை அமைச்சர் உன்னா மோங்கின் அறிக்கையை மறுக்கும் விதமாக ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் அறிக்கை அமைந்துள்ளது.
மியான்மர் அரசின் ஜனநாயக சீர்திருத்த நடவடிக்கைகளில் மயங்கி ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இன அழித்தொழிப்பை அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் மறந்துவிட்டன என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
ராக்கேனில் ஐ.நா மனித உரிமை ஆர்வலர்கள் பார்வையிட சென்ற பிறகு ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் அறிக்கை வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக