திங்கள், 27 ஆகஸ்ட், 2012

துன்புறுத்தப்படுகிறோம் என நம்புவதற்கு முஸ்லிம்களுக்கு காரணங்கள் உள்ளன! – சி.ஆர்.பி.எஃப் கோப்ரா ஐ.ஜி!


NC Asthana, Inspector General, CRPF COBRA, and wife Anjali Nirmal
புதுடெல்லி:இந்தியாவில் துன்புறுத்தப்படுகிறோம் என நம்புவதற்கு முஸ்லிம்களுக்கு காரணங்கள் உள்ளன என்று சி.ஆர்.பி.எஃப் கோப்ரா ஐ.ஜியான என்.சி.அஸ்தானா கூறியுள்ளார். டெஹல்கா இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், 2007 மக்கா மஸ்ஜிதில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் போலீஸார் கைது செய்யத 21 பேரை நீதிமன்றம் விடுதலைச் செய்தது, 2008-ஆம் ஆண்டில் ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட 14 பேரை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது, மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் நடந்தது ஆகியவற்றைக் குறித்து தனது பேட்டியில் கூறுகிறார்.
சிமிக்கு எதிராக தொடரப்பட்ட 194 வழக்குகளில் வெறும் 6-இல் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் சில ஊடகங்கள் லஷ்கர் மற்றும் ஹூஜியின் தலையில் கட்டிவைக்க முயலுகின்றன என கூறும் அஸ்தானா, குற்றம் சாட்டப்பட்ட எத்தனை பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட என கேள்வி எழுப்புகிறார்.
ஊடகங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்கனவே திட்டமிட்டபடி செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.
இந்தியாவுக்கு வகுப்பு கலவரங்களின் வரலாறு இருந்தாலும், முன்பு ஒருபோதும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கவில்லை. இத்தகைய சித்தரிப்பை இந்தியா மேற்கத்திய நாடுகளிடமிருந்து சொந்தமாக்கியுள்ளது.
அமெரிக்காவை அறிவின் மையமாக பார்க்கும் இந்தியா, இஸ்லாத்தைக் குறித்த அவர்களின் ஊனமான பார்வையை காப்பியடிக்கிறது என்று அஸ்தானா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக அஸ்தானாவும், அவரது மனைவி அஞ்சலி நிர்மலும் இணைந்து எழுதிய நூல் இம்மாதம் இறுதியில் வெளியாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக