வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

புனே குண்டுவெடிப்பு:ஹிந்துத்துவா தொடர்பு குறித்து தீவிர விசாரணை!

Hindutva terror probe haunts Pune investigation
புனே:புனேயில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பிற்கும் ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கும் தொடர்பு குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
புனே குண்டுவெடிப்பில் தீவிர ஹிந்து அமைப்புகளின் தொடர்பு இருப்பதற்கான சாத்தியங்களை மறுப்பதற்கில்லை என புலனாய்வு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
புனே தொடர் குண்டுவெடிப்பில் சைக்கிள் குண்டு மற்றும் வெடிப்பொருளாக அம்மோனியம் நைட்ரேட் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக, ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்புகள்தாம் இது போன்ற உத்திகளை கையாண்டு வருகின்றன.
மலேகானில் 2006-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பிலும் இதே பாணி கடைப்பிடிக்கப்பட்டது.
குண்டு வெடிப்பில் காயமுற்று இப்போது போலீஸ் காவலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தயானந்த் பாட்டீல், வளைகுடா நாடான ஜோர்டானில் 9 மாதங்கள் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைப்பையில் வெடிப்பொருள்: பாலகந்தர்வா திரையரங்கு அருகே காயமுற்ற தயானந்த் பாட்டீல் கைப்பையில் வெடிப்பொருள் இருந்தது தெரிய வந்துள்ளது. காயமுற்றவரின் பெயர் தயானந்த் பாட்டீல். அவர் ஒரு தையல்காரர். பாலகந்தர்வா திரையரங்குக்கு எதிரே நடந்துவந்த ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பினரின் தர்ணாவை பார்ப்பதற்காக உருலி கஞ்சன் எனும் கிராமத்திலிருந்து வந்ததாகவும்; அப்போது தனது கைப்பையில் ஒரு பெட்டி இருந்ததாகவும், அதில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்காக திறந்தபோது வெடித்ததாகவும் கூறியுள்ளார். இவர் சமீபத்தில் 9 மாதங்கள் ஜோர்டானில் பணியாற்றியுள்ளார். ஒருவேளை ஜோர்டானுக்கு அருகில் உள்ள இஸ்ரேலுடன் இவருக்கு தொடர்பிருக்குமா? என்பது குறித்து புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினால் உண்மைகள் தெரிய வரலாம்.
அவரது கைப்பையில் வெடிப்பொருள் இருந்ததால் அவரிடம் போலீஸôர் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். லேசாக காயமுற்றுள்ள அவர் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வாக்குமூலம் போலீஸாரால் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அவர் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் 307 (கொலை செய்ய முயற்சி), 427 (சேதம் ஏற்படுத்துதல்), 120 பி (குற்றச் சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரது மனைவி சத்யகலாவிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கிய சைக்கிள்கள்: குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 2 சைக்கிள்களை போலீஸார் கைப்பற்றி புலனாய்வு செய்து வருகின்றனர். மாநில பயங்கரவாத தடுப்புப் படை, குற்றப்பிரிவு போலீஸார், தேசிய புலனாய்வு ஏஜென்சியை சேர்ந்தோர் சைக்கிள்களை தீவிர ஆய்வுக்கு உள்படுத்தி பயனுள்ள தடயங்களைத் தேடி வருகின்றனர்.
இந்த சைக்கிள்களில்தான் வெடிப்பொருள்கள் வாளிகளில் கட்டப்பட்டு கொண்டு வரப்பட்டன. மேலும் சைக்கிள்கள் அனைத்தும் புதிதாக வாங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக, கஸ்பா பேட் பகுதியில் உள்ள சைக்கிள் கடை உரிமையாளரும் அந்தக் கடையில் வேலை பார்ப்பவரும் போலீஸாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து திட்டவட்டமான தகவல்கள் கிடைக்கும் எனத் தாங்கள் நம்புவதாக தீவிரவாத எதிர்ப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கஸ்பா பேட் கடையிலிருந்து 2 அல்லது 3 சைக்கிள்கள் வாங்கப்பட்டதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன என்றார் அந்த அதிகாரி. ஆனால், 3வது சைக்கிள் குறித்து கூடுதல் தகவல் எதையும் தர அவர் மறுத்துவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக