சனி, 5 ஜனவரி, 2013

மற்றுமொரு சுதந்திர போராட்டத்தை நோக்கி முஸ்லிம்கள்! டிஎன்டிஜே பிரகடனம்!!


டிசம்பர் 21ஆம் தேதியன்று உலகம் அழியப்போகின்றது என்று கிளப்பப்பட்ட பீதியை மக்கள் மத்தியில் போக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தென்சென்னை மாவட்டம், ஜாம்பஜார் கிளையினர் விநியோகித்த விழிப்புணர்வு துண்டுப்பிரசுரத்தை காரணம் காட்டி கடந்த டிசம்பர் 22ஆம் தேதி நள்ளிரவு 2.30மணிக்கு ஜாம்பஜார் கிளைத்தலைவர் யாகூப் அவர்களை காவிச்சிந்தனையோடு செயல்பட்ட காவல்துறை அவரது வீடு புகுந்து நள்ளிரவில் அடாவடியாக கைது செய்தது.
அப்பாவிகளை கைது செய்ததோடு மட்டுமல்லாமல் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து, முஸ்லிம் பெண்களை இழிவாகப்பேசி, அவர்களிடத்திலிருந்த இரண்டு செல்பேசிகளை பிடுங்கிச் சென்ற காவல்துறையின் காட்டுமிராண்டித் தர்பாரைக் கண்டித்து அன்றைய தினமே மாலை 4மணிக்கு டி-1 காவல் நிலைய முற்றுகையை டிஎன்டிஜேயின் தென்சென்னை மாவட்டம் அறிவித்தது. முற்றுகையிட வருபவர்களை இரத்தக்களறியாக்கி அனுப்ப வேண்டும்; அதன் மூலம் முஸ்லிம்களை கருவறுக்க வேண்டும் என முன்கூட்டியே திட்டம் தீட்டிய காவித்துறையினர், போராட்டம் துவங்குவதற்கு முன்பே நமது சகோதரர்கள் மத்தியில் பலப்பிரயோகம் செய்து தடியடி நடத்தி மிருக வெறியாட்டம் ஆடினர்.
இந்த மிருகவெறியாட்டம் ஆடிய திருவல்லிக்கேணி ஏ.சி.செந்தில் குமரன், திருவல்லிக்கேணி சரக டி.சி.கிரி, அயனாவரம் ஏ.சி.கிருஷ்ணசாமி ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இந்த அநியாயத்தைக் கண்டித்து முஸ்லிம்களின் அடுத்த கட்ட போராட்டம் என்ன என்பதை அறிவிப்பு செய்வதற்காகவும் கடந்த 29.12.12 – சனிக்கிழமை அன்று மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. மாநிலத்தலைவர் பி.ஜே அவர்கள், “காவல்துறையின் அராஜகம்” என்ற தலைப்பில் கண்டன உரையாற்றினார். அவர் தனது கண்டன உரையில் காவல்துறையினர் முஸ்லிம்களுக்கு எதிராக துவங்கியுள்ள யுத்தத்திற்கு தக்க பதிலடி கொடுக்காவிட்டால் மறுபடியும் நாம் 20ஆண்டுகளுக்கு பின்னால் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விடும் என்றும், அதற்கு தக்க பதிலடியாக வரக்கூடிய ஜனவரி 3ஆம் தேதி வியாழக்கிழமை அன்று எந்த திருவல்லிக்கேணியில் வைத்து முஸ்லிம்கள் மீது காட்டுமிராண்டித்தாக்குதல் நடத்தி தடியடி நடத்தினார்களோ அதே இடத்தில் ஒரு லட்சம் முஸ்லிம்கள் திரண்டு மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த உள்ளோம். (பின்னர் இது 10 ஆம் தேதிதக்கு தள்ளி வைக்கப்பட்டது) காவல்துறையின் கருப்பாடுகளாக உள்ள திருவல்லிக்கேணி ஏ.சி.செந்தில் குமரன், திருவல்லிக்கேணி சரக டி.சி.கிரி, அயனாவரம் ஏ.சி.கிருஷ்ணசாமி ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அடுத்த கட்ட போராட்டமாக முதல்வர் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்படும் என்று எச்சரித்து முடித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக