வெள்ளி, 18 ஜனவரி, 2013

இந்தியாவுக்கு போர் வெறி – ஹினா ரப்பானி கர் குற்றச்சாட்டு!


நியூயார்க்:ஜம்மு கஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்கு அருகே இரண்டு ராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்தியாவின் பதில்களில் முழங்குவது போர்வெறி என்று பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் கூறியுள்ளார்.
மோதலை தீவிரப்படுத்தும் இந்தியாவின் பதில்களில் நிராசையடைந்துள்ளதாக அவர் கூறுகிறார். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும், தெற்காசியா பிராந்தியத்திற்கும் இரு நாடுகள் இடையேயான ஒரு மோதலை தாங்கமுடியாது. பேச்சுவார்த்தையின் வாசலை திறக்கவேண்டும் என்பதையே தனது அரசு விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு இரு நாடுகள் இடையே உறவு பழையது போல அல்ல என்று பிரதமர் மன்மோகன்சிங்கின் அறிக்கைக்கு பின்னால் ஹினா ரப்பானியின் அறிக்கை வெளியாகியுள்ளது. அமைதி முயற்சிகளூக்கு பங்கம் ஏற்படும் என்பதால் எந்தவொரு இந்திய ராணுவ வீரனை கொலைச் செய்வதையோ, தலையை வெட்டுவதற்கோ பாகிஸ்தான் அங்கீகாரம் அளிக்கும் பிரச்சனையே உதிக்கவில்லை என்று ஹினா ரப்பானி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக