திங்கள், 28 ஜனவரி, 2013

ஷாருக்கானுக்கு பாதுகாப்பு கொடுங்கள்: இந்தியாவிற்கு பாக். அமைச்சர் கோரிக்கை


இஸ்லாமாபாத்: பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என பாக்.உள்துறை அமைச்சர் , இந்தியாவிற்கு ‌வேண்டுகோள் விடுத்துள்ளார். பாலிவுட் சினிமா உலகின் முன்னணி நடிகர், ஷாருக் கான் (47) இவர் கவுரி என்ற பெண்ணை மணந்து, மும்பையில் வாழ்ந்து வருகிறார்.சமீபத்தில், பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் , நான் முஸ்லிம் என்பதால், அரசியல்வாதிகளால் அவ்வப்போது மிரட்டப்படுகிறேன். அண்டை நாடான பாகிஸ்தானுடன் அடிக்கடி தொடர்பு படுத்தப்படுகிறேன்.நான் இந்தியனாக இருந்த போதிலும், வேறுபடுத்தப்படுகிறேன். என்னை மும்பையை விட்டு வெளியேற்றவும், பாகிஸ்தானுக்கு செல்லும் படியும், நான் மிரட்டப்படுகிறேன் என கூறியிருந்தார். பாக். வாருங்கள்: ஹபீஸ் சயீத் இதை அறிந்த, பாக்.,முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்
, ஹபீஸ் முகமது சயீத், ஷாருக்கானுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். அதில், இந்தியாவில் உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என நீங்கள் உணர்ந்தால், பாகிஸ்தான் வரலாம்; உங்களை வரவேற்க காத்திருக்கிறோம். பாகிஸ்தானில் நிரந்தரமாக தங்க ஏற்பாடு செய்கிறோம். உங்களுக்கு போதிய மரியாதை அளிக்கப்படும். ஷாருக்கிற்கு, பாகிஸ்தான் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கிறது,'' என்றார். பாதுகாப்பு கொடுங்கள்: ரஹ்மான் மாலிக் இந்நிலையில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளி்த்தார். அவர் கூறியதாவது: ஷாருக்கானை முஸ்லிம் என பார்க்க வேண்டாம். ஷாருக்கான், இந்திய ரசிகர்களால் மட்டுமல்ல பாகிஸ்தான் ரசிகர்களும் விரும்பும் ஒரு நடிகர். அவரை வேறுபடுத்தி பார்க்க‌ வேண்டாம். அவருக்கு பிரச்னை என்றால், இந்தியா உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல, அவர் பாகிஸ்தான் ரசிகர்களால் நேசிக்கப்படும் நடிகர். இதுநாள் வரை அவரை மிரட்டியவர்கள், எதிராக செயல்படுபவர்கள் , அதனை விலக்கிக்கொள்ளுங்கள், ஷாருக்க‌ானை ஒற்றுமையின் சின்னமாக , இந்திய சகோதர, சகோதரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை. இவ்வாறு ரஹ்மான்மாலிக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக