சனி, 26 ஜனவரி, 2013

தாக்குதலுக்கு பயந்து தாய்லாந்துக்கு புலன்பெயரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்!


பாங்காக்:அரசு ஆதரவுப் பெற்ற தீவிரவாத புத்தர்களின் தாக்குதலுக்கு அஞ்சி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து தாய்லாந்திற்கு புலன் பெயர்ந்துள்ளனர்.காலநிலையையும் புறக்கணித்து நேற்று படகு மூலம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தாய்லாந்துக்கு புலன்பெயர்ந்தனர்.போதிய உணவோ, குடிநீரோ இன்றி அவர்கள் தாய்லாந்திற்கு பயணித்தனர். “நாங்கள் மியான்மரில் வசிக்க அஞ்சுகிறோம். ராக்கேன் மாநிலத்தில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் கடுமையான வறுமையில் உழலுகின்றனர். இனியும் அங்கே இருந்தால் கொல்லப்படுவோம்.ஆகையால் வேறொரு நாட்டிற்கு செல்கிறோம்” என்று தாய்லாந்துக்கு வருகை தந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் கூறுகின்றனர். மலேசியாவுக்கு புலன்பெயரும் ரோஹிங்கியா முஸ்லிம்களை தாய்லாந்து கடற்படையினர் பிடித்து கடத்தல் காரர்களுக்கு விற்பனைச் செய்வதாக நேற்று முன் தினம் பி.பி.சி கூறியிருந்தது. ரோஹிங்கியா முஸ்லிம்களை பாதுகாக்கவேண்டும் என்று ஆம்னஸ்டி இண்டர்நேசனலும், ஹியூமன் ரைட்ஸ் வாட்சும் கோரிக்கை விடுத்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக