செவ்வாய், 29 ஜனவரி, 2013

விஸ்வரூபம் எதிர்ப்பு - முடங்கியது பிரதமரின் மின்னஞ்சல்! Read more about விஸ்வரூபம் எதிர்ப்பு - முடங்கியது பிரதமரின் மின்னஞ்சல்! [8544] | இந்திய செய்திகள் | செய்திகள் at www.inneram.com


நடிகர் கமலஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருப்பதால் அதனை திரையிட அனுமதிக்ககூடாது என்று தடை செய்யக்கோரி போராடி வருகின்றனர். தமிழகம்,ஆந்திரம், கர்நாடகம் மட்டுமின்றி இலங்கை,மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளிலும் திரையிட எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கடந்த 25 ஆம் தேதி பிரிமியர் காட்சிக்காக அமெரிக்காவிலிருந்த நடிகர் கமலஹாசன், நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். தமது படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இல்லை என்று திரும்பத் திரும்ப சொன்னபோதும்,விஸ்வரூப எதிர்ப்பு இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் அவற்றை ஏற்கவில்லை. இந்நிலையில், விச்வரூபம் மீதான தடையை நீக்கவேண்டும் என்று கமலஹாசன் சார்பில் தொடுக்கப்பட்டுள்ள முறையீட்டு வழக்கை நேற்று ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்,நீதிமன்றத்துக்கு வெளியே அரசு அதிகாரிகளுடன்பேசி சுமூக தீர்வுகாணும்படி பரிந்துரைத்தது. விஸ்வரூபம் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதற்கு கமலாஹசன் முன்வந்துள்ளார். எனினும், இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் முழுபடத்தையும் தடைசெய்யும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் விஸ்வரூபம் படத்திற்கான சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில், விஸ்வரூபம் படத்தை தடைசெய்யக்கோரி இணைய தளங்களில் பல்வேறு பதிவுகள் வெளியாகியுள்ளதோடு, இந்திய பிரதமர் மன்மோகன்சிங், குடியரசு தலைவர் மற்றும் தேசிய தலைவர்களுக்கு மின்மடல் மூலமாகவும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் அலுவலக கணினியில் அளவுக்கு அதிகமான மின்மடல்கள் குவிந்துள்ளதால், பிரதமரின் மின்னஞ்சல் வசதி முடங்கியுள்ளது என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக