சனி, 26 ஜனவரி, 2013

விசா மோசடி:இந்து சாமியாருக்கு அமெரிக்காவில் சிறை!


சிகாகோ:விசா மோசடி வழக்கில் குற்றவாளி என கண்டுபிடிக்கப்பட்ட இந்தியாவைச் சார்ந்த இந்து சாமியாருக்கு அமெரிக்கா நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. கவுடியா வைஷ்ணவ சொஸைட்டி(ஜி.வி.எஸ்) தலைவரும், மில்வாகி ஹரே கிருஷ்ணா கோயிலில் முக்கிய சன்னியாசியுமான கோபால் ஹரிதாஸ் என்ற ஸகர்ஸென் ஹல்தார்(வயது-32) என்பவர் தாம் விசா மோசடிக்காக சிறைத் தண்டனை பெற்றவர் ஆவார். சிறைத் தண்டனை முடிந்த பிறகு ஹரிதாஸ்,இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார். மத நிகழ்ச்சிகளில் பங்கேற்க வழங்கப்படும் ஆர்-1 விசாவை சட்டவிரோதமாக பெற்று ஏராளமானோரை இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு அழைத்து வந்ததாக நீதிமன்றம் கண்டறிந்தது. 12க்கும் மேற்பட்ட நபர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு வந்ததாக போலீஸ் கூறுகிறது. ஒவ்வொரு நபரிடமும் 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்பட்டுள்ளது. ஜி.வி.எஸ்ஸின் பெயரில் ஏராளமான விசா மனுக்கள் அளிக்கப்படுவதை கண்காணித்த போலீஸ் நடத்திய விசாரணையில் ஹரிதாஸ் சிக்கினார். விசா மோசடி வெளியானதை தொடர்ந்து கடந்த 2010ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக