திங்கள், 28 ஜனவரி, 2013

சவுதியில் கள்ளச்சாராயம் விற்றஇந்தியர்களுக்கு ஓராண்டு சிறை


துபாய்:சவுதி அரேபியாவில், சாராயம் விற்ற இந்தியர்கள் இருவருக்கு, ஓராண்டு சிறையும், 50 பிரம்படி தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன.அரேபியாவின் ஜெட்டா நகரில், சிலர் கள்ளத்தனமாக ஒரு இடத்திற்கு சென்று மது அருந்தி வந்தனர். மது அருந்திவிட்டு சென்ற ஒரு நபரை, போலீசார் பிடித்து விசாரித்த போது, அவர் மது விற்ற இடத்தை போலீசாருக்கு காட்டி கொடுத்தார். சவுதி அரேபியாவில், மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மது விற்பனை செய்த, இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கை விசாரித்த ஜெட்டா கோர்ட், இந்தியர்கள் இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனையும், 50 பிரம்படி தண்டனையும் வழங்கி தீர்ப்பு கூறியது.பிரம்படி தண்டனையை, ஒரு வாரத்தில் ஆறு முறை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த தண்டனை முடிந்த பின் இருவரும், இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.குற்றவாளிகளை இந்தியாவிடம்ஒப்படைக்கும் ஒப்பந்தம்:வங்கதேச அமைச்சரவை ஒப்புதல்தாகா:குற்றவாளிகளை, இந்தியாவிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்துக்கு, வங்கதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம், வடகிழக்கு மாநில பயங்கரவாதிகள் பலருக்கு புகலிடமாக உள்ளது. இதே போல், வங்தேச ராணுவப் புரட்சியில் சம்பந்தப்பட்ட பலர், இந்தியாவில் தலைமறைவாக உள்ளனர். இவர்களை பரஸ்பரம் ஒப்படைக்க, இருநாட்டு அரசுகளும் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளன.இந்த ஒப்பந்தத்துக்கு, வங்கதேச அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளதாக, அந்நாட்டின் காபினட் செயலர் முகமது முஷ்ரப் ஹுசைன் தெரிவித்துள்ளார்.அரசியல் கைதிகள், ஓராண்டுக்கும் குறைவான சிறைத் தண்டனைக்குரிய கைதிகள், இந்த ஒப்பந்தத்தின்படி ஒப்படைக்கப்பட மாட்டார்கள். கொலை உள்ளிட்ட பயங்கர குற்றங்களில் ஈடுபட்டவர்களை, பரஸ்பர நாடுகளிடம் ஒப்படைக்க இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக