சனி, 28 ஜூலை, 2012

45 பேரை காவு வாங்கிய அசாமில் பிரதமர் ;


கவுகாத்தி:  இருபிரிவினர் மோதல் சம்பவம் நடந்து இன்றுடன் 9 வது நாளை எட்டும் இந்நாளில் பிரதமரும் , காங்., தலைவர் சோனியாவும் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் அளிக்கின்றனர்.

சிறுபான்மை- பழங்குடி இனத்தவர்கள் இடையே நில ஆக்கிரமிப்பு தொடர்பாக கலவரம் மூண்டது, இதில் 50 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர், துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 200 க்கும் மேற்பட்ட முகாம்களில் லட்சக்கணக்கானவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். முகாம்களில் உள்ளவர்களுக்கு முறையான உணவு, தண்ணீர் வழங்க முடியாமல் அரசு திணறி வருகிறது. இந்நிலையில் முதல்வர் தருண்கோகை மத்திய அரசு மீது குறை கூறியிருந்தார். ராணுவ படையினர் காலம் தாமதிக்காமல் வந்திருந்தால் கலவரம் பரவாமல் தடுத்திருக்க முடியும் என்றார். 

கலவரம் பாதித்த பகுதிகளில் பார்வையிட பிரதமர் மன்மோகன்சிங், காங்., தலைவர் சோனியா ஒரே விமானத்தில் வருகின்றனர். கவுகாத்தியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோக்ராஜ்கர் மாவட்டத்திற்கு வந்தபோது அங்கு வானிலை கோளாறு காரணமாக தரை இறங்க முடியவில்லை. இதனால் ஹெலிகாப்டர் மீண்டும் கவுகாத்தி திரும்பியது,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக