ஞாயிறு, 15 ஜூலை, 2012

ஆளுங்கட்சியுடன் கூட்டணி: இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் பிளவு!

Sri Lanka Muslim Congress denies rift in the party
கொழும்பு:இலங்கையில் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட எடுத்துள்ள தீர்மானம் அக்கட்சிக்குள் கருத்து வேறுபாட்டை உருவாக்கியுள்ளது.
இலங்கை கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணக்கத்தின் அடிப்படையில் போட்டியிட வேண்டும் என்ற பரவலான எதிர் பார்ப்புகளுக்கு மத்தியிலேயே முஸ்லிம் காங்கிரஸ் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாகக் கூறபபடுகின்றது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியுடன் இனைந்து போட்டியிட எடுத்த தீர்மானம் காரணமாக கட்சியின் முக்கிய தலைவர்களில் சிலர் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியல் பலம் மிக்க மாகாணம் என்று கருதப்படும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் கூட இந்த தீர்மானம் குறித்து மாறு பட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதன் மூலமே முஸ்லிம்களின் எதிர்பார்ப்பான முஸ்லிம் முதலமைச்சர் என்ற இலக்கை எட்ட முடியும் என ஒரு சாரார் நம்பிக்கையுடன் காணப்படுகின்றார்கள்.
ஆனால், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்று சவுதி அரசாங்கத்தின் உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளைக் கூட வழங்கத் தயங்கும் அரசாங்கத்துடன் எப்படி முஸ்லிம் காங்கிரஸ் உடன்பாட்டுக்கு வரலாம் என்று மறு சாரார் கூறுகிறார்கள். இந்த தீர்மானம் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது அரசியல் தனித்துவத்தை இழந்து விட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக