திங்கள், 16 ஜூலை, 2012

பாகிஸ்தான் பள்ளிக்கூடங்களில் மதச்சார்பின்மை?


இந்தியாவில் முஸ்லிம்களுக்கு வெளிப்படை யான பெரிய பிரச்சனைகள் நிகழும்போது, அதைப்பற்றிப் பேச முற்பட்டால் இங்குள்ள ஊடகங்கள், பாகிஸ்தானில் இந்துமக்கள் துன்புறுத்தப்படுவதாகவும், வலுக்கட்டாய மாக மதமாற்றம் செய்யப்படுவதாகவும் கூக்குரலிட்டு இந்திய முஸ்லிம்களின் குரலை திட்டமிட்டு நசுக்குகின்றன.
இந்தியாவில் வாழும் சிறுபான்மை மக்களின் உயிர், உடைமை, வாழ்வாதாரம் அழிக்கப்படும் போது அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் ஊடகங்கள் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை மக்களுக்காக போலிக் கண்ணீர் வடிக்கும். இந்திய அரசியல் சாசனம் இந்தியாவில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு மத சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்கி இருப்பதைப் போன்றே பாகிஸ்தானிலும் அதன் அரசியல் சாசன சட்டம் அங்குள்ள சிறுபான்மை மக்களுக்கு அனைத்து உரிமை களையும் மத சுதந்திரத்தையும் வழங்கியுள்ளது. பாகிஸ்தானின் நாடாளுமன்றத்திலும் 10 சதவீதம் பிரதிநிதித்துவ இடஒதுக்கீடு உள்ளது. இன்றுவரை அவர்கள் அந்த உரிமைகளை அனுபவித்து வருகின்ற னர். இந்தியாவிற்கு நல்லெண்ணப் பயணமாக வந்து போயிருக்கும் பாகிஸ்தான் இந்து மக்கள் தாங்கள் நலமுடனும் ஒற்றுமையுடனும் சுதந்திரமாகவும் வாழ்ந்து வருவதாக கூறி யிருக்கின்றனர்.
பாகிஸ்தானுக்கு நல்லெண்ணப் பயணமாக சென்று வந்திருக்கும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனை வெளிப்படையாகக் கூறியுள்ளனர். குல்தீப் நய்யார் போன்ற எழுத் தாளர்களும் கூறியுள்ளனர். ஆனால், பாகிஸ்தானில் உள்ள பிரச்சனை களை முன்வைத்து இங்குள்ள இந்திய முஸ்லிம்களையும் குற்றவாளிகளாகப் படம் பிடித்துக் காட்ட விரும்பும் மதவெறி பிடித்த ஊடகங்களே பிரச்சனைகளைப் பெரிதாக்கி காட்டுகின்றன.
இந்தியாவில் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளுக்கு எதிராக இயங்கும் மதவெறி சக்திகள் போன்று பாகிஸ்தானிலும் அங்குள்ள சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக மதவெறி சக்திகள் இயங்குகின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால், பிற மதத்தினரின் வழிபாடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் மதிக்கவேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்ட மார்க்கம் கற்றுக்கொடுக்கும் இஸ்லாம் நெறியை வாழ்வியலாகக் கொண்ட மக்கள் பிற சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக கலகம் செய்ய மாட்டார்கள்.
பாகிஸ்தான் உருவான போதே முஹம்மதலி ஜின்னா இதனைப் பதிவு செய்தார். பாகிஸ்தான் 80 சதவீதம் முஸ்லிம்களைக் கொண்ட நாடாக இருந்துள்ள போதிலும், ஜின்னா, பாகிஸ்தானை மதச்சார்பற்ற நாடாக அறிவித்தார். இதற்காக யாரும் ஜின்னாவை சுட்டுக் கொல்ல கிளம்ப வில்லை. நீங்கள் இந்தியாவில் இருக்கும் சிறுபான்மை முஸ்லிம்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக நாங்கள் இங்குள்ள சிறுபான்மை இந்து மக்களை நடத்துவோம் என்றார். ஜின்னாவின் மீதும் முஸ்லிம்கள் மீதும் நம்பிக்கை வைத்துதான் இந்துக்களில் கொஞ்சம்பேர் பாகிஸ்தானிலேயே தங்கிவிட்டனர்.
அதனால்தான் அத்வானி கூட உண்மையை மறைக்க முடியாமல் ஜின்னாவை, மதச்சார்பற்ற தலைவர் என்று புகழ்ந்தார். பாபர் பள்ளி வாசல் இடிக்கப்பட்ட போது பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட கோயில்களை அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் புதுப் பித்துக் கட்டினார்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் இந்துக் கோயில் கட்டலாமா? என்று அங்கு யாரும் கொந்தளிக்கவில்லை. அது இஸ்லாம் அவர்களுக்கு வழங்கியிருக்கும் மதச்சுதந்திரம் என்பதை அங்குள்ள முஸ்லிம் மக்கள் விளங்கியுள்ளனர். இஸ்லாம் வருவதற்கு முன்னதாக அங்கு கட்டப்பட்டிருந்த இந்து கோயில்கள் எல்லாம்கூட இன்றுவரை பராம ரிக்கப்பட்டு வருகின்றன என்பதை செய்தியின் வழியே அறிகிறோம்.
இப்போது, கராச்சி நகரில் உள்ள சாந்தா மரியா பள்ளிக்கூடத்தில், இந்து மாணவ மாண வியர் மத அறிவை வளர்க்கும் பொருட்டு, கீதைப் பாடல்களை வினாடி-வினா முறை யில் கற்பித்துக் கொடுக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இந்துசமய மாணவ மாணவியர் கலந்து கொண்டுள்ளனர்.
இப்போட்டியினை ‘பாகிஸ்தான் இந்து சேவா’ என்ற நல அறக்கட்டளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. குழந்தைகளுக்கு கீதை கற்பிக்கப்பட்டு வினாடி வினாவில் பங்கெடுக் கப்படுகின்றனர் என்கிறார் அவ்வமைப்பின் தலைவர் சஞ்சேஷ் எஸ்.தன்ஜா. இந்த நிகழ்ச்சிக்கு முஸ்லிம்களிடம் இருந்து பேரளவு ஆதரவு கிடைத்திருப்பதாக அவ்வமைப்பின் உறுப்பினர் முகி ஒதாமல் கூறுகிறார். (ஆதாரம்: டைம்ஸ் ஆப் இந்தியா) ச மூ க ங் க ளு க் கிடையே நல்லிணக் கம் உண்டாகும் போது அதனை வெளிப்படுத்திக் காட்ட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக