புதன், 11 ஜூலை, 2012

முஸ்லிம் மாணவர்கள் கல்வியின் மூலம் சவால்களை எதிர்கொள்ள வேண்டும்!

புதுடெல்லி:இந்தியாவில் முஸ்லிம் சமூகம் உயர் கல்வியைப் பெற்று அவர்கள் சந்திக்கும் சவால்களுக்கு தீர்வு காணவேண்டும் என்று முஸ்லிம் மாணவர் அமைப்புகளின் தேசிய கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

ஃபெடரேசன் ஆஃப் இஸ்லாமிக் யூத் ஆர்கனைசேசன் (எஃப்.ஐ.ஒய்.ஒ) நடத்திய கருத்தரங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 12 மாணவர்கள் அமைப்புகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

நவீன கல்வி அரங்கில் முஸ்லிம் இளைஞர்களை சக்திப்படுத்த மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகளைக் குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

முஸ்லிம் சமூகம் சந்திக்கும் சவால்களுக்கு மாணவர்களும், இளைஞர்களும் கல்வியின் மூலமும், தார்மீக விழுமியங்கள் மூலமாகவும் தீர்வு காணவேண்டும் என ஃபதேஹ்பூரி ஷாஹி இமாம் முஹம்மது முகர்ரம் கோரிக்கை விடுத்தார்.

இளைஞர்கள் இடையே கல்வியறிவின்மையையும், அதார்மீகத்தையும் சந்திக்க ஒருங்கிணைந்து செயல்பட தயார் என்று எஃப்.ஐ.ஒய்.ஒ கன்வீனர் ஆபிதுர் ரஹ்மான் பிரதிநிதிகளை வரவேற்று ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

இந்தியா ஊழல் நாடாக மாறிவரும் சூழலில் முஸ்லிம் இளைஞர்கள் அவர்களின் கல்வியின் லட்சியத்தை அடையவேண்டும் என்றும், மெளலவிகள் மற்றும் முஃப்திகளுடன் டாக்டர்களையும், பொறியாளர்களையும் உருவாக்கவேண்டும் என்றும் மர்க்கஸ் ஜம்மியத்துல் உலமாயே முஃப்தி அர்ஷத் ஃபாரூகி தனது உரையில் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக