புதன், 11 ஜூலை, 2012

முஸ்லிம் வீராங்கனைகள் ஹிஜாப் அணிந்து விளையாட அனுமதிக்கமாட்டோம் – பிரான்சு கால்பந்து கழகம்!

France Football to Outlaw Hijab despite Green Light

பாரிஸ்:முஸ்லிம் வீராங்கனைகள் ஹிஜாப் அணிந்து விளையாட அனுமதிக்கமாட்டோம் என பிரான்சு நாட்டு கால்பந்து கழகம் அறிவித்துள்ளது.

முஸ்லிம் பெண்கள் அவர்களுடைய மதம் சார்ந்த ஆடைகளை அணிந்துகொண்டு போட்டிகளில் கலந்துகொள்ளலாம் என கடந்த வாரம் FIFA இன் விளையாட்டு சட்ட உருவாக்க அவையான The International Football Association Board (IFAB) அறிவித்திருந்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் பிரான்சு நாட்டு கால்பந்துக் கழகம் பிடிவாதாமாக இதனை தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவிலான போட்டிகளுக்கான தேசிய தேர்வில் தங்களின் சட்டத்தை தாம் நடைமுறைப்படுத்துவோம் என பிரான்சு கால்பந்துக் கழகம் கூறியுள்ளது. பிரான்சு நாட்டு அரசியல் சாசனம் கூறும் மதசார்பற்ற விழுமியங்களை முறுக பிடிக்கும் கடமை கால்பந்து கழகத்திற்கு உண்டு என பிரான்சு நாட்டு கால்பந்துக் கழகம் நியாயம் கற்பிக்கிறது.

விளையாட்டுத் துறைக்கு வெளியே மதம் இருக்கவேண்டும். விளையாட்டுக்கு வெளியே அவர்களின் மத அடிப்படையில் வாழ்ந்து கொள்ளலாம் போன்ற கருத்துக்களை முஸ்லிம் பெண்கள் விளையாட்டின் போது ஹிஜாப் அணியக்கூடாது என கூறுபவர்கள் கூறி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக