ஞாயிறு, 15 ஜூலை, 2012

சந்தனகுடம் தூக்கிய இசை மே(பே)தை ஏ.ஆர்.ரஹ்மான் :




சென்னை பரங்கிமலை ராணுவ பகுதியில் ஹசரத் சையத் ஷா அலி மஸ்தான் ஷமன் ஷா அலி தர்கா உள்ளது. இந்த தர்காவில் 128-ம் ஆண்டு சந்தன முபாரக் உரூஸ் திருவிழா நடைபெற்றது.கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில், நேற்று முன்தினம் மாலை சந்தன குடம் ஊர்வலம் நடைபெற்றது. ஆலந்தூரில் உள்ள முக்கிய வீதிகளில் இந்த சந்தன குடம் ஊர்வலமாக சென்று வந்தது. இதில் என்ன இதுதான் மார்க்கம் அறியா மூடர்களால் ஊர் ஊரா நடத்தப்பட்டு வருகிறதே என்று கேட்கிறீர்களா ? அடுத்த செய்தியை பாருங்கள். 

சந்தன குடம் ஊர்வலம் தர்காவிற்கு வந்ததும் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது தலையில் சந்தன குடத்தை சுமந்து ஊர்வலத்துடன் சென்றார்.
அதைத்தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப் பட்டது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

இந்த ஏ.ஆர்.ரகுமான் வேறு மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்  இங்கு வந்த பிறகும் பழைய மதத்தின் ரீமேக்கான (அம்மனுக்கு பால் குடம் தூக்குதல் ) காரியங்களை செய்வரானால் இஸ்லாத்திற்கு திரும்பியதன் பலன் என்ன என்பதை அவர் சிந்திக்க வேண்டும். மக்கள் மத்தியில் காணாமல் பொய் கொண்டிருக்கும் தர்கா வழிபாடு எனும் நரகத்திற்கு கொண்டு செல்லும் காரியத்தை விட்டும் விலக வேண்டும் .இவரை போல பெரிய இசை அமைப்பாளர்கள் எல்லாம் தூய இஸ்லாத்தை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவின் பிரபலமான  ஏ.ஆர்.ரகுமானின் இந்த செயல் கவலைக்குரியது . 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக