திங்கள், 9 ஜூலை, 2012

ஃபஸீஹ்: இந்தியாவுக்கு கொண்டுவருவது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

உச்சநீதிமன்றம்

புதுடெல்லி:கடந்த மே மாதம் 13-ம் தேதி சவூதியில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட பீகார் மாநிலத்தைச் சார்ந்த இளம் பொறியாளர் ஃபஸீஹ் மஹ்மூதை இந்தியாவுக்கு கொண்டுவருவது குறித்து மூன்று வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் இருந்து இந்தியா-சவூதி அதிகாரிகள் ஒன்றிணைந்து பிடித்துச் சென்ற ஃபஸீஹை குறித்து அரசு எந்த தகவலும் அளிக்கவில்லை என குற்றம் சாட்டி ஃபஸீஹின் மனைவி நிகாத் பர்வீன் சமர்ப்பித்த மனுவில் விசாரணை நடத்தவே நீதிபதி பி.சதாசிவத்தின் தலைமையிலான பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது.

ஃபஸீஹ் சவூதி அரேபியா சிறையில் உள்ளார் என்று மத்திய அரசுக்காக ஆஜரான சோலிசிட்டர் ஜெனரல் கவுரவ் பானர்ஜி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஃபஸீஹை இந்தியாவுக்கு கொண்டுவர சி.பி.ஐ முயற்சி கொண்டுள்ளது. பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஃபஸீஹை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை பூர்த்திச்செய்ய காலதாமதம் ஆகும் என கவுரவ் பானர்ஜி தெரிவித்தார்.

share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக