ஞாயிறு, 8 ஜூலை, 2012

ஏற்றத்தாழ்வு:சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் – நீதிபதி சச்சார்!

rajendra sachar
பெங்களூர்:சமூக ரீதியான ஏற்றத்தாழ்வு இந்தியாவில் சிறுபான்மை சமூகத்தினர் எதிர்கொள்ளும் பொதுவான அச்சுறுத்தல் என்றும், சக்திப்படுத்தலுக்கு இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருடன் இணைந்து முஸ்லிம் சமூகம் பாடுபடவேண்டும் என்றும் நீதிபதி ராஜேந்திர சச்சார் கூறியுள்ளார்.
பெங்களூரில் எஸ்.கே.எஸ்.எஸ்.எஃப் என்ற அமைப்பு ஏற்பாடுச் செய்த தேசிய கருத்தரங்கை துவக்கிவைத்து உரை நிகழ்த்தினார் அவர்.
மேலும் அவர் கூறியது: இந்திய சமூகங்களில் தேசிய நீரோட்டத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்ட 70 சதவீத மக்களில் பெருந்தொகையினர் முஸ்லிம்கள் ஆவர். சமூக தளத்தில் செயல்பாடுகளை தீவிரப்படுத்துவதுடன், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருடன் இணைந்து சக்திப்படுத்தலுக்கு முன்வரவேண்டும்.
கேரளாவில் முஸ்லிம்கள் பெற்ற சக்திப்படுத்தல் நடைமுறை இதர மாநிலங்களுக்கு பரவவேண்டும். பள்ளிக்கூட கல்விக்கு தடை ஏற்படாத கேரள மாநிலத்தில் முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் மதரஸா கல்வி பிறர் பின்பற்றத்தக்கதாகும். இவ்வாறு சச்சார் உரை நிகழ்த்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக