வியாழன், 13 செப்டம்பர், 2012

பாகிஸ்தான் தொழிற்சாலைகளில் தீ: பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது!


லாகூர்:பாகிஸ்தானின் லாகூரிலும், கராச்சியிலும் தொழிற்சாலைகளில்ஏற்பட்ட தீ விபத்துகளில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 300 ஐ தாண்டியுள்ளது. ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். லாகூர் நகரில் ஷூ தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் தீயில் கருகி பலியானார்கள். தொழிற்சாலையின் உரிமையாளர் ரஜப் அலியும் அவரது 10 வயது மகனும் பலியானவர்களில் அடங்குவர். 40க்கும் மேற்பட்டவர்கள் தொழிற்சாலையில் இருந்தனர். 15 பேர் தீக் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜெனரேட்டர் வெடித்ததே தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. கராச்சியில் ஆடை தயாரிப்பு தொழிற்சாலையிலும் தீ விபத்து ஏற்பட்டது. பல உடல்களும் அடையாளம் காணமுடியாத அளவுக்கு கருகிய நிலையில் உள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் கூறுகின்றனர். காயமடைந்த பலரும் கராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு படையினரும், உள்ளூர் மக்களும் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இதில் அங்கு வேலைப்பார்த்த 270 மேற்பட்டோர் மரணமடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக