வெள்ளி, 7 செப்டம்பர், 2012

தொடரும் அநீதி:அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் மறுப்பு – உயர் சிகிட்சை வழங்க உத்தரவு!


7 Sep 2012 திருவனந்தபுரம்:பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அநீதமாக கர்நாடகா மாநில சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனிக்கு சுதந்திரமான சிகிட்சை அளிப்பதற்காக ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடிச் செய்துவிட்டது. அதேவேளையில் உடல்நிலை சீர்குலைந்த அப்துல் நாஸர் மஃதனிக்கு சிறந்த நிபுணர்களின் சிகிட்சையை வழங்க நீதிபதி ஹெச்.ஆர்.ஸ்ரீனிவாஸ், சிறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். என்னென்ன நோய்கள் மஃதனியை பாதித்துள்ளது என்பதுக் குறித்த விபரங்களை சிறை அதிகாரிகளுக்கு எழுதி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். உயர்தர நிபுணர்களின் சிகிட்சை கிடைக்காவிட்டால், மஃதனி விசாரணை நீதிமன்றத்தை அணுகலாம். உச்சநீதிமன்றத்தையும் அணுகலாம் என நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார். உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் மறுத்தது. சுதந்திரமான சிகிட்சைக்காக மஃதனிக்கு ஜாமீன் வழங்க தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியது. கடந்த ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி மீண்டும் மஃதனி விசாரணை நீதிமன்றத்தை அணுகினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக