சனி, 8 செப்டம்பர், 2012

ஆளில்லா விமானத் தாக்குதல்களை கண்டித்து மீண்டும் பாக்.கில் கண்டனப் பேரணி!


8 Sep 2012 இஸ்லாமாபாத்:நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்கா தொடர்ச்சியாக நடத்தும் ஆளில்லா விமானத்(ட்ரோன்) தாக்குதல்களை கண்டித்து பாகிஸ்தானில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. வடமேற்கு பாகிஸ்தானில் நவ்ஷேரா நகரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. பாகிஸ்தானில் பிரபல அரசியல் கட்சியான ஜமாஅத்தே இஸ்லாமி இப்பேரணியை ஏற்பாடுச் செய்தது. கொடூரமான ட்ரோன் தாக்குதல்கள் மூலமாக நிரபராதிகளை கொன்றொழிக்கும் அமெரிக்காவுக்கு எதிராக மக்கள் முழக்கங்களை எழுப்பினர்.
நாட்டின் இறையாண்மையில் அத்துமீறும் அமெரிக்காவின் திமிருக்கு அடங்கி ஒடுங்கும் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையாக முழக்கங்களை மக்கள் எழுப்பினர். கைபர் பஸ்தூன்க்வா மாகாணத்தில் அடிக்கடி அமெரிக்கா நடத்து ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு எதிரான தங்களது கோபத்தை பிரகடனப்படுத்தவே இப்பேரணி என்றும் நாட்டில் அமைதியும், இஸ்லாமிய புரட்சியும் உருவாக்குவதே இப்போராட்டம் என்றும் ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர் இஃப்திகார் அஹ்மத் தெரிவித்தார். ட்ரோன் தாக்குதல்களை கண்டித்து இதற்கு முன்பும் பல்வேறு பாக்.நகரங்களில் கண்டனப்பேரணிகள் நடந்துள்ளன. ஆனால், போராட்டங்களை அமெரிக்காவும், பாகிஸ்தானும் கண்டுக்கொள்வதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக