வெள்ளி, 7 செப்டம்பர், 2012

சமூக புரட்சிக்கு தடைபோடவே முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றார்கள் – ராம்விலாஸ் பஸ்வான்!


8 Sep 2012 புதுடெல்லி:முஸ்லிம் இளைஞர்களையும், அமைப்புகளையும் தீவிரவாதிகளாகவும், தேச விரோதிகளாகவும் சித்தரிப்பதன் மூலம் பழங்குடியின-தலித்-பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் முன்னேற்றத்திற்கு தடைபோட உயர்ஜாதியினர் நடத்தும் முயற்சியாகும் என்று லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ்பஸ்வான் கூறினார். டெல்லியில் இந்தியன் இஸ்லாமிக் கல்சுரல் செண்டரில் பெருநாள் சந்திப்பு சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார் அவர். மேலும் அவர் கூறியது: “இஸ்லாம் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு பிற்படுத்தப்பட்ட-தலித் மக்களின் நிலைமை இங்கு நிலவிய சாதிக் கொடுமைகளால் மிகவும் துயரமானதாக இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களை, முஸ்லிம்கள் தங்களது வீடுகளுக்கும், மஸ்ஜிதுகளுக்கும் அழைத்துச்சென்று சமூக ஐக்கியத்தை கட்டியெழுப்பினார்கள். இதற்கு எதிரான உயர் ஜாதியினரின் சூழ்ச்சியே முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், தேச விரோதிகளாக சித்தரிப்பதன் வாயிலாக தொடர்கிறது.” இவ்வாறு ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக