ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

ஆப்கானில் பாகிஸ்தான் பத்திரிகைகளுக்கு தடை!


காபூல்:பாகிஸ்தானின் அனைத்து பத்திரிகைகளுக்கும் ஆப்கான் அரசு தடைவிதித்துள்ளது. தாலிபான் போராளிகளுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டி பாகிஸ்தானில் பத்திரிகைகளை விநியோகம் செய்வதை தடுக்க ஆப்கான் அரசு தீர்மானித்துள்ளது. நாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து அனைத்து பாகிஸ்தான் பத்திரிகைகளையும் விநியோகிப்பதை தடுக்குமாறு ஆப்கான் உள்துறை அமைச்சகம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. தாலிபான் தலைவர்களுக்கு தங்களின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க பாகிஸ்தான் பத்திரிகைகள் துணை போகின்றன என்று ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. பத்திரிகைகளுக்கு தடைவிதிப்பதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்படும் என கருதப்படுகிறது. எல்லையில் நடக்கும் தாக்குதல்களின் பெயரால் இரு நாடுகள் இடையே கருத்துவேறுபாடுகள் நிலவும் வேளையில் புதிய சர்ச்சைக்குரிய முடிவை ஆப்கான் அரசு எடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக