செவ்வாய், 4 செப்டம்பர், 2012

எகிப்தில் மீண்டும் அதிரடி: 70 ராணுவ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு!


கெய்ரோ:எகிப்தில் புதிய ராணுவ கவுன்சிலை உருவாக்கும் திட்டத்தின் படி ஸ்காஃபில் (சுப்ரீம் கவுன்சில் ஆஃப் ஆம்ட் ஃபோர்ஸஸ்) 70 ராணுவ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த மாதம் எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸியால் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் அப்துல் ஃபுதூஹ் அல் ஸீஸி, முன்னாள் சர்வாதிகார அதிபர் ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியின் கீழ் செயல்பட்டு வந்த ராணுவ ஜெனரல்களுக்கு கட்டாய ஓய்வை அளித்துள்ளார். பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்களில் மிலிட்டரி இண்டலிஜன்ஸ் இயக்குநரும் அடங்குவார்.
கடந்த இருபது ஆண்டுகளாக எகிப்தின் பாதுகாப்பு, ராணுவ துறைகளை தம் கைவசம் வைத்திருந்த மார்ஷல் ஹுஸைன் தன்தாவியை கடந்த மாதம் அப்பதவியில் இருந்து அதிரடியாக நீக்கினார் அதிபர் முஹம்மது முர்ஸி. ஸ்காஃபில் 2-வது இடம் வகித்த ஜெனரல் ஸாமி அனான் உள்ளிட்ட மூத்த ராணுவ அதிகாரிகளும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாகத்தான் 70 ராணுவ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வுக் கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் முபாரக் ஆட்சியில் பதவி வகித்த 6 ஜெனரல்கள் நீக்கப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக