வியாழன், 20 செப்டம்பர், 2012

தவறு தவறு தினமணியின் தலையங்கம் தவறு :


கருத்து சுதந்திரம் என்றால் நான் கூறிய கருத்தை ஆதரங்களுடன் விமர்சிக்க வேண்டும். நான் சொல்லாத ஒரு விசயத்தையோ , நான் செய்யாத ஒரு செயலையோ சொன்னதாக ,செய்ததாக அவதூறு சொல்வது கருத்து சுதந்திரம் அல்ல. இன்றைய தலைவர்களின் மனைவியை பற்றியோ , அல்லது தலைவர்களின் பெயரில் அவரை போல வேடமிட்டு ஆபாச படம் எடுத்தால் ஒத்துகொள்வார்களா ? சாதாரண அரசியல் தலைவர்களை , சினிமாகாரர்களை பற்றி இல்லாததை சொன்னாலே அவர்களுடைய தொண்டர்களால் தாங்க முடியவில்லை. அப்படிஎன்றால் முஸ்லிம்கள் தங்கள் வழிகாட்டியாக மதிக்க கூடிய , மனிதர்களிலே முதல் இடத்தில் வைத்து போற்ற கூடிய ஒரு இறைதூதரை குறை கூறினால் அவர்களால் தாங்க முடியுமா ? என்று மற்ற மத சகோதரர்கள் சிந்திக்க வேண்டும். தினமணியின் துணிச்சல் என்று கருத்து சொல்பவர்கள் தங்கள் தாயாரை கெட்ட வார்த்தையால் திட்டினால் ஏற்று கொள்வார்களா ? முஸ்லிம்கள் நபியை தங்கள் குழந்தைகள், பெற்றோர்கள், ஏன் தங்கள் உயிரை விட மேலாக மதிக்கிறார்கள் இந்த விஷயம் இத்தனை வருட காலம் பத்திரிக்கை நடத்துபவர்கள் கண்டிப்பாக தெரிந்திருக்கவேண்டும். அடுத்ததாக இஸ்லாமோ முஸ்லிம்களோ அறிவிப்பூர்வமான விவாதத்திற்கோ, விமர்சனத்திற்கோ ஒரு காலமும் அஞ்சுவதில்லை. குரானிலுள்ளதை விமர்சியுங்கள், நபியின் சொற்களில் செயல்களில் வரலாற்றிலிருந்து எடுத்துக்காட்டி விமர்சியுங்கள். முஸ்லிம்கள் பதில் தர தயாராக இருக்கிறோம். எல்லாவற்றிற்கும் பதில் உள்ள மார்க்கம் இஸ்லாம் (மவ்லவி பி.ஜே. , ஜாகிர் நாய்க் போன்றவர்கள் எந்த கேள்விக்கும் ,பதில் தர தயாராக இருக்கிறார்கள், எந்த விவாதத்தையும் சந்திக்க தயாராக இருக்கிறார்கள்) ஆனால் இந்த மாதிரி இல்லாததை சொல்வது பெட்டை தனம் . தினமணி துணிச்சலாக சொல்கிறது என்பவர்கள் அவர்களுடைய இந்து மத புராணங்களில் உள்ள ஆபாச கருத்துகளை பற்றியோ, பைபிளில் உன்னதப் பாட்டு அதிகாரத்தில் உள்ள ஆபாசங்களை பற்றியோ இருப்பதை கூறி ( அவதூறாக இல்லாததை கூற தேவையில்லை ) விமர்சிக்க , விவாதம் செய்ய திராணி உண்டா ? என்று கேட்க ஆசைப்படுகிறேன். ஒரே மொழி பேசுகிறார்கள் என்பதற்காக இலங்கையில் உள்ள தமிழர்களை ( முஸ்லிம் தமிழர்களெல்லாம் இவர்களுக்கு தமிழர்கள் அல்ல , இந்துக்கள் மட்டுமே தமிழர்கள் ) தங்கள் உடன்பிறப்புகளாக சித்தரித்து இங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டம் செய்கின்றனவே அதனை எதோ உரிமை தியாகப் போராட்டம் போல இங்குள்ள மீடியாக்களும் சித்தரிக்கின்றணவே , கூடங்குளத்தில் மின்சாரம் உற்பத்தியானால் அனைத்து தமிழ் நாட்டவர்க்கும் நன்மை என்று பாராமல் போராடுபவர்களை விடுதலை போராளிகள் போல் சித்தரிகின்றனவே இதுவெல்லாம் அரசியலாக தெரிய வில்லை. முஸ்லிம்கள் விஷயம் என்றால் மீடியாக்களுக்கு அறிவு ஞானம் அதிகம் வந்து விடுவது இயல்பாக உள்ளது அதுபோல் தினமணி ஒரு நகைக்கத்தக்க கருத்தி கூறி உள்ளது . சாருக்கான், அப்துல் கலாம் ஆகியோர் அமெரிக்காவில் அவமானப் படுத்தப்பட்ட பொது முஸ்லிம்கள் போராடவில்லை என்று வருத்தப் பட்டுள்ளது . முஸ்லிம் என்றால் பிராமண சமுதாயம், மற்ற சமுதாயங்களை போல் பிறப்பால் வருவது இல்லை . சாருக்கான், அப்துல் கலாம் ஆகியோர் இஸ்லாம் கூறும் முறையில் முதலில் வாழ்க்கையை அமைத்து கொள்ளவில்லை என்பதற்கு அவர்களுடைய செயல்பாடுகளே சாட்சி. அதனால் தான் பா.ஜ.க. போன்ற முஸ்லிம்களை வெறுக்கும் கட்சிகள் அப்துல் கலாம் என்ற பெயர் தாங்கி முஸ்லிமை குடியரசு தலைவராக அங்கீகரித்தன . எந்த முஸ்லிம் அமைப்பும் அவரை ஆதரிக்கவில்லை. அதுமட்டுமல்ல முஸ்லிம்களை பொறுத்தவரை வேட்பாளர் முஸ்லிமா ? என்று பார்ப்பதில்லை , நல்லவரா தீயவரா என்றுதான் பார்ப்பார்கள். அரசியலில் மதவெறியை காட்டமாட்டார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். அது மட்டுமல்ல அப்துல் கலாம் முறையான முஸ்லிமாக இருந்தால் இன்று அவரை புகழ்பவர் யாரும் அவரை புகழமாட்டார்கள் என்பது வேறு விஷயம். அதே மாதிரி சாருக்கானும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட பல மோசமான செயல்களை செய்து கொண்டிருப்பவர். இவர்களை எல்லாம் முஸ்லிம் ரோல் மடலாக தினமணி சித்தரித்திருப்பது கேலிக்குரியது. அப்படியே அவர்கள் சிறந்த முஸ்லிமாக இருந்தாலும் முகம்மத் நபியின் தகுதிக்கு கடுகளவும் தகுதியானவர்கள் அல்ல. இறைவனின் தூதராக மதிக்க கூடிய ஒருவரை இந்த அற்பமானவர்களுடன் ஒப்பிட்டிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. மேலும் முஸ்லிம்கள் இந்தியாவில் போராடி என்ன பயன் என்று ஒரு அறிவுப்பூரவமான ? கேள்வியை எழுப்பியுள்ளது தினமணி. போராடியதால தான் இந்தியாவின் கூகுளில் அந்த படம் தடைசெய்யப் பட்டது. இதையும் தாண்டி இந்திய முஸ்லிம்கள் எதிர்பார்ப்பது அமெரிக்க அரசிடம் இந்தியா தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்பது. ஒரு இந்து கடவுளின் பெயரையோ உருவத்தையோ பிற நாடுகள் தவறாக பயன்படுத்தி விட்டால் இந்திய பாராளுமன்றத்திலேயே கண்டனம் தெரிவிக்கப் படுகிறது. சீக்கியர்களுக்கு அமெரிக்காவில் ஒரு பிரச்சினை என்றால் இந்தியா இங்கிருந்து எகிறுகிறது. முஸ்லிம்கள் விஷயம் என்றால் கண்டும் காணாமல் இருப்பது ஏன், ? என்பதே இந்தியாவில் உள்ள கோடானு கோடி முஸ்லிம்களின் கேள்வி ? அபுல் ஹசன் - தக்கலை. http://www.dinamani.com/edition/story.aspx?&SEO&Title&SectionName=Editorial&artid=663927&SectionID=132&MainSectionID=132

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக