புதன், 12 செப்டம்பர், 2012

லிபியாவில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் : அமெரிக்க தூதரகம் சூறை


.
கெய்ரோ: அமெரிக்காவில் அல்கய்தா தீவிரவாதிகளால் நியூயார்க் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அமெரிக்காவில் வசிக்கும் எகிப்து கிறிஸ்தவர்கள், இஸ்லாம் குறித்த சர்ச்சைக்குரிய வீடியோ படம் வெளியிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முஸ்லிம் அமைப்பை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டனர். தூதரகத்தை சூறையாடினர். லிபியாவின் பெங்காசி நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பும் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அங்கு பறந்த அமெரிக்க கொடியை எடுத்து விட்டு இஸ்லாமிய கொடியை பறக்கவிட்டனர். தூதரகத்துக்கு தீ வைத்தனர். அப்போது பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் போராட்க்காரர்களும் மோதல் வெடித்தது. போராட்டக்காரர்கள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியதில் தூதரக அதிகாரி ஒருவர் பலியானதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். ஆனால் தூதரக அதிகாரி இறப்பை அமெரிக்கா உறுதி செய்யவில்லை. தூதரகம் தாக்கப்பட்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக