புதன், 12 செப்டம்பர், 2012

கூடங்குளம் பிரச்சினை அயல்நாட்டு சதியா ?


கூடங்குளம் பிரச்சினை அயல்நாட்டு சதியா ? கூடங்குளம் போராட்டங்களை நாம் அயல் நாட்டு சதி என்று சொல்வதற்கு பல நியாயமான காரணங்கள் உள்ளன. ஏனென்றால் தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் செயல்படுகின்ற பல கிறிஸ்தவ அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து சமூக சேவைக்காக என்று சொல்லி அதிகமான அளவில் நிதி பெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக அமெரிக்கா , பிரான்ஸ் , ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து கணிசமாக பணத்தை பெற்று உள்ளன. உதாரணமாக, தூத்துக்குடி டயசிஸ் அசோசிசன் (TDA) என்ற அமைப்பு 2010 -2011 ம் ஆண்டில் பிரான்சில் இருந்து ஒரு கோடியே 43 லட்சம் 23 ஆயிரம் 406 ரூபாய், ஜெர்மனியில் இருந்து 84 ,13 ,619 ரூபாய், இத்தாலியில் இருந்து 61 ,55 ,843 ரூபாய், நெதர்லாந்தில் 45 ,54 ,572 ரூபாய் ஆக மொத்தம் ஏறக்குறைய 4 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை ஒரு ஆண்டில் பெற்றுள்ளது. இது போல் பல அமைப்புகள் பெற்றுள்ளன . இவை அனைத்து பணமும் மத விவகாரங்கள், மக்கள் சேவைக்கு மட்டும்தான் பயன் படுத்தப் படுகிறதா ? இல்லை கூடங்குளத்திற்கும் பயன் படுத்தப் படுகிறதா ? என்ற சந்தேகம் பெரும்பாலோருக்கு எழத்தான் செய்கிறது. இந்த சந்தேகம் பிரதமருக்கும் எழுந்ததால் தான் கடந்த வருடம் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பெட்டியில் இந்த கருத்தை தெரிவித்தார். மேற்குறிப்பிட்ட தகவல் அனைத்தும் இந்த வருடம் ஜனவரி மாதம் இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள். பல பத்திரிகைகளிலும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க , பிரான்ஸ் ,ஜெர்மனிக்கு இந்தியாவில் உருவாகும் அணுஉலை திட்டத்தை எதிப்பதற்கான காரணம் என்ன ? ஏன் தேவை இல்லாமல் எதிர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா ? அதற்கு காரணம் உண்டு. அமெரிக்க, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் அணு உலைகளையும் , அதன் தொழில் நுட்பத்தையும் இந்தியாவிடம் விற்க முயற்சி செய்து முடியாமல் போய் விட்டது. ஏனென்றால் இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு அவை ஒத்துவரவில்லை. உதாரணமாக ஏ,பி, 1000 (A.P.1000) அணு உலையை தயாரிக்கும் வெஸ்டிங் ஹாவுஸ் - டோசிபா என்கிற அமெரிக்க நிறுவனம் இந்திய சட்டங்களில் இருந்து தங்களுக்கு விதிவிலக்கு அளிக்கும்படி கேட்டன இந்தியா அதற்க்கு மறுத்து விட்டது. இது போல் தான் மற்ற நாடுகளும். தங்கள் அணு உலைகளின் விற்பனை வாய்ப்பு பறிபோய் விட்டதே என்ற காழ்புணர்ச்சியில் இந்த நாடுகளின் நிறுவனங்கள் சதி வேலைகளில் ஈடு பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு. மேலும் தமிழ் நாட்டில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு ( பெரும்பாலானவை கிறிஸ்தவ அமைப்புகள் ) 2009 - 2010 ம் ஆண்டுகளில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து வந்த நிதி தொகை 1663 .31 கோடி ரூபாய்கள் என்பது நம்மை எல்லாம் மலைக்க வைக்கிறது. இதில் கூடங்குளம் போராட்டகுழு ஒருங்கிணைப்பாளர் உதய குமாருக்கும் சாக்செர் (SOCCER) South Asian community center for Education and Research என்ற பெயரில் தன்னார்வ அமைப்பு உள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும். பல நிறுவனங்களை சி.பி.ஐ. விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒட்டு மொத்தமாக கண்ணைமூடி கொண்டு நாம் குற்றம் சுமத்தவில்லை . சந்தர்ப்ப சூழ்நிலைகள் கூடங்குளம் போராட்டத்திற்கு அயல் நாட்டு சதிதான் காரணமாக இருக்கும் என்று நம்பத்தான் வைக்கிறது. பொதுவாகவே ஊடகங்கள் பொறுப்புணர்வில்லாமல் நடப்பது தான் இந்த மாதியான அறிவியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உணர்ச்சிபூர்வமாக மாறுவதற்கு காரணம். பிரச்சினையை ஊதி பெரிதாக்காமல் இருப்பது பத்திரிகைகளின் கடமை. கேட்டதை விசாரிக்காமல் இணையதளம் மூலமாக பரப்பாமல் இருப்பது பொது மக்களின் கடமை. மக்களின் அச்ச உணர்வை நீக்கி ஆபத்து இல்லை என்று புரிய வைப்பது நல்ல அரசின் கடமை. அவரவர் கடமையை சரி வர செய்தாலே பிரச்சினை தீர்ந்து விடும் . மக்களின் வாழ்விலும் வீடுகளிலும் ( மின்சார பிரச்சினை தீர்ந்து ) ஒளி பிறக்கும். எல்லாம் வல்ல இறைவன் அதற்கு அருள் புரியட்டும். அபுல் ஹசன் - தக்கலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக