வியாழன், 20 செப்டம்பர், 2012

முஸ்லிம்களை விமர்சிக்கும் அட்டைப்பட கட்டுரை: நியூஸ் வீக் பத்திரிகையின் திமிர்!


நியூயார்க்:இறைவனின் இறுதித்தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தின் காட்சிகள் யூ ட்யூப் இணையதளத்தில் வெளியானதை தொடர்ந்து முஸ்லிம் உலகில் உருவான பெரும் கொந்தளிப்பு அடங்கு முன்னரே அமெரிக்காவில் இருந்து மீண்டும் ஒரு சர்ச்சை நியூஸ் வீக் பத்திரிகை மூலம் வெளியாகியுள்ளது.
‘Muslim Rage’ என்ற தலைப்பில் அட்டைப்பட கட்டுரையை வெளியிட்டுள்ள நியூஸ் வீக் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றும் செயலை புரிந்துள்ளது. இக்கட்டுரை வாசகர்களையும், அரசியல் நோக்கர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
முன்பு இறைத்தூதரையும், முஸ்லிம்களையும் விமர்சித்து முஸ்லிம்களின் கண்டனத்திற்கு ஆளான அயான் ஹிர்ஸி அலி என்ற சோமாலியா நாட்டு வலதுசாரி ஆதரவு எழுத்தாளர் பெண் தான் இந்த கட்டுரையை எழுதியுள்ளார். ஹிர்ஸி அலி. சோமாலியாவின் ஒரு முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த இவர் 1992-ல் நெதர்லாந்தில் தஞ்சம் புகுந்தார். இஸ்லாத்தை தாக்கி இவர் எழுதியும் பேசியும் வந்ததால் மிக விரைவில் இவர் புகழ் அடைந்தார். பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆனார். இவர் எழுதிய ஒரு கதையை( the submission) படமாக எடுத்த இயக்குனர் தியோ வான்கோ ஆம்ஸ்டர்டாமில் கொல்லப்பட்டார். இதனால் ஹிர்ஸி அலியின் ‘புகழ்’ மேலும் உலகெங்கும் பரவியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக