வெள்ளி, 7 செப்டம்பர், 2012

இஸ்ரேல் தாக்குதலில் 6 ஃபலஸ்தீனர்கள் பலி!


7 Sep 2012 காஸ்ஸா:வடக்கு காஸ்ஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வெறித் தாக்குதலில் ஆறு ஃபலஸ்தீன் மக்கள் படுகொலைச் செய்யப்பட்டனர். பைத் ஹானூன் நகரின் கிழக்கு பகுதியில் இஸ்ரேல் ராணுவ டாங்க் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக காஸ்ஸா சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அஷ்ரஃப் அல் குர்தா தெரிவித்தார்.
அல் மக்ஸயர் அகதி முகாமில் காரின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து பைத் ஹானூனில் தாக்குதல் நடந்தது. காரில் இருந்த 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மரண எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பலியானவர்களின் பெயர்களை அமைச்சகம் வெளியிடவில்லை. வடக்கு காஸ்ஸாவில் வெடிக்குண்டு தயாரித்தவர்களின் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் சியோனிச ராணுவம் கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக