செவ்வாய், 4 செப்டம்பர், 2012

அலிகர்:மாணவிகளுக்கு தனியாக யூனியன்!


4 Sep 2012 அலிகர்:அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் பெண்களுக்கு தனியாக மாணவிகள் யூனியன் உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் ஷமீருத்தீன் ஷா இதனை தெரிவித்தார். இரண்டு ஆண்டுகள் இடைவேளைக்குப் பிறகு மாணவிகளுக்கு என தனியாக யூனியன் நடைமுறைக்கு வருகிறது. லிங்தோ கமிட்டி சிபாரிசுக்கு தவறான விளக்கம் அளிக்கப்பட்டதன் விளைவாக முந்தைய நிர்வாகம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனியாக ஒரு யூனியன் என்ற முடிவை எடுத்தது என்று ஷா கூறினார். லிங்தோ கமிட்டி சிபாரிசின் அடிப்படையில் இவ்வாண்டும் பல்கலைக்கழகத்தில் யூனியன் தேர்தல் நடைபெறும் என்று ஷா தெரிவித்தார். உயர் பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் மாணவர்களின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று ஷமீருத்தீன் ஷா கூறினார். பாரம்பரியமாக பெண்கள் கல்லூரிக்கு தனியாக யூனியன் தேவை. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தில் ஒரு யூனியன் மட்டுமே உள்ளது. பெண்கள் கல்லூரியில் பேராசிரியர்களுடன் விவாதித்த பிறகே புதிய தீர்மானம் எடுக்கப்பட்டது. இதில் 95 சதவீதம் பேரும் பெண்கள் கல்லூரிக்கு தனியாக யூனியன் தேவை என்ற கருத்தை ஆதரித்தனர். புதிய தீர்மானத்தில் எவ்வித பால் ரீதியான பாகுபாடு இல்லை. மாணவிகளின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதில் நாங்கள் உறுதிப்பூண்டுள்ளோம். இவ்வாறு ஷமீருத்தீன் ஷா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக