புதன், 12 செப்டம்பர், 2012

நாட்டை துண்டாடியவர்கள் யார் ? : Part 7


இந்துத்துவ அறிஞர்கள் பலர் முஸ்லிம்கள் இணைந்த இந்திய தேசத்தை விரும்பவில்லை என்பதை அவர்களின் வார்த்தைகளை வைத்தே நாம் அறியலாம். ஹர்த்தால் என்ற இந்து அறிஞர் இப்படி குறிப்பிடுகிறார் " இந்துக்களும், முஸ்லிம்களும் சேர்ந்து வாழக்கூடிய இந்தியா வேண்டும் என்பது முட்டாள்தனமானது . அது ஒரு போதும் நிலையாக இருக்க முடியாது. " அதாவது முஸ்லிம்களை இந்தியாவில் வைக்க வேண்டும் என்ற எண்ணமே தவறு என்று இவர் வாதிடுகிறார். அதே போல் மெயரே விசர் என்பவர் இந்து ராஜ்யம்தான் தங்கள் கனவு என்று கூறுமளவுக்கு முழங்குகின்ற வார்த்தைகளை பாருங்கள் " இந்து இனத்தின் இந்தியா மற்றும் பஞ்சாப்பின் எதிர்காலம் நான்கு தூண்களில் தான் நிறுவ முடியும். 1 . இந்து சங்காதனம். 2 . இந்து ராஜ்ஜியம் , 3 . முஸ்லிம்களை தூய்மைப் படுத்துவது ( கிளீன் பண்ணுவது ) 4 . ஆப்கனிஸ்தானை கைப்பற்றி தூய்மைப்படுத்துவது. மேலும் வி.டி.சாவர்கரின் இந்தியப் பிரிவினை கருத்துகளை ஆர்.ஏன். அகர்வால் அவர்களின் தேசிய இயக்கம் நூலில் உள்ள வார்த்தைகளின் அடிப்படையில் பார்த்தால் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் இடமில்லை என்றே தோன்றுமளவுக்கு சாவர்கரின் பிரகடனம் அமைந்துள்ளதை நாம் அறியலாம். " இந்தியா என்பது ஒற்றை தேசம் அல்ல. அது இந்து நாடு, முஸ்லிம் நாடு என இரண்டாக உள்ளது. முஸ்லிம்களுக்கு இந்தியாவில் சிறுபான்மையர் என்று இல்லாமல் எந்த ஒரு எதிர்காலமும் இல்லை " என்று சாவர்கர் குறிப்பிடுகிறார். மேலும் கே.எல். கௌபா என்ற பிரபலமான சட்ட வல்லுநர் 1973 ம் ஆண்டு வெளிவந்த தன்னுடைய மறைமுக வார்த்தை என்ற நூலில் சாவர்கர் மட்டும் இந்த கருத்தில் இருக்கவில்லை. அதற்கு முன்பே பல இந்து தலைவர்கள் பிரிவினை கருத்தில் இருந்தார்கள் என்று குறிப்பிடுகிறார். இந்துமாக சபை தலைவரான சங்கராசார் குர்தொகி வெளியிட்ட அறிக்கையில் " இந்தியா இந்துக்களுக்கே சொந்தம். முஸ்லிம்கள் இங்கு விருந்தினர் தான், விருந்தினர் போல் நடக்க அவர்கள் கற்று கொள்ள வேண்டும். " என்று காட்டமாகவே குறிப்பிடுகிறார். இன்னும் எத்தனை சான்றுகளை வேண்டுமானாலும் வைக்க முடியும். முஸ்லிம்கள் பிரிவினையை தூண்டுவதற்கு காரணமும் இல்லை, நாட்டை துண்டாடவும் இல்லை. நயவஞ்சகர்கள் விரித்த வலையில் ஜின்னா என்ற தனி மனிதன் விழுந்து அந்த பழியை கோடிக்கணக்கான முஸ்லிம்களை சுமக்க வைத்து விட்டார் என்று தான் சொல்ல தோன்றுகிறது . தேசப்பிரிவினை பற்றிய மேலும் பல தகவல்களை அடுத்த தொடரில் காண்போம். ஆக்கம் : அபுல் ஹசன் - தக்கலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக