வெள்ளி, 21 செப்டம்பர், 2012

இயேசு (இறைத்தூதர் ஈஸா) திருமணமானவர்! ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியரின் ( இஸ்லாத்தை உண்மை படுத்தும் ) தகவல்!


நியூயார்க்: கிறிஸ்தவர்களால் இயேசு என்றும் முஸ்லிம்களால் இறைத்தூதர் ஈஸா(அலை) என்று அழைக்கப்படும் ஜீஸஸ், திருமணமானவர் என்று ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இறையியல் பிரிவு தலைவரான பேராசிரியர் கேரன் கிங் கூறியுள்ளார். காப்டிக் ஸ்டடீஸின்10-வது சர்வதேச மாநாட்டில் தனது ஆய்வை வெளியிட்டார் கேரன் கிங். கிறிஸ்தவர்கள் பாரம்பரியமாக இயேசுவுக்கு திருமணமாகவில்லை என்று கூறினாலும் மிக மிகப் பழமையான கையால் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய கோரைப் புல்லால் ஆன கையெழுத்துப் படி ஒன்று கிடைத்துள்ளது. அதில் இயேசுநாதரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
முழுமையான வாசகங்கள் அதில் இல்லை. பண்டைய எகிப்திய கோப்டிக் மொழியில் வாசகங்கள் உள்ளன. அதை ஆராய்ந்து பார்த்ததில், இயேசுநாதரின் மனைவிதான் அவரது முதன்மையான பெண் சிஷ்யையான மேரி மெகதலீன் என்பது தெரிய வருகிறது என்று கேரன் கிங் கூறியுள்ளார். இந்த கையெழுத்துப் படியானது 8 செமீ நீளமும், 4 செமீ அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த கையெழுத்துப் படியில் உள்ள வாசகங்கள் மூலம் இயேசுநாதரும், மேரி மெகதலீனும் கணவன் மனைவி என்பது திட்டவட்டமாக தெரிய வருகிறது. ஒரு இடத்தில் மேரி மெகதலீனை எனது மனைவி என்று இயேசுநாதர் தனது சீடர்களிடம் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் மேரி மெகதலீன் எனது சிஷ்யையாக இருப்பார் என்று இயேசுநாதர் கூறுகிறார். அடுத்த2 வரிகளில், நான் அவருடன் வசித்து வருகிறேன் என்று கூறியுள்ளார் இயேசுநாதர். இந்த கையெழுத்துப் படி நம்பகத்துக்குரியதாக இருக்க வேண்டும் என்றே நம்புகிறோம். அப்படி இருந்தால் இது மிகப் பெரிய ஆச்சரியகரமான தகவலாக அமையும் என்றார். ஏற்கனவே மேரி மெகதலீனும், இயேசுநாதரும் தம்பதியர் என்று அமெரிக்க எழுத்தாளர் டேன் பிரவுன் தனது தி டாவின்சி கோட் நூலில் குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையையும், எதிர்ப்புகளையும்,புயலையும் கிளப்பியிருந்தது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் மேரி மெகதலீன், இயேசுநாதரின் மனைவிதான் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் இஸ்லாத்தின் இறுதி வேதமான திருக்குர்ஆன் இறைவனால் அனுப்பப்பட்ட அனைத்து இறைத்தூதர்களும் திருமணமானவர்கள் என்று குறிப்பிடுகிறது.
ஈசா நபி ( இயேசு) திருமணமானவர் தான் என்ற தகவலை சகோ. பி.ஜே. அவர்கள் தன்னுடைய திருக்குர்ஆன் தமிழாக்கதிலே கீழ்காணும் வசனத்தை அடிப்படையாக வைத்து விளக்கினார். அது இப்போது பைபிளின் அடிப்படையிலும் உணமைகி விட்டது . ஆனால் சில பரேலவி மவ்லவிகளும், ஜாக்கின் தலைவரும் விமர்சித்தனர். இது பி.ஜே. யின் சொந்தக் கருத்து என்றனர். இவர்கள் பைபிளை அடிப்படையாக வைத்து தான் இயேசுக்கு திருமணமாகவில்லை என்றனர். அது இன்று அந்த பைபிளை தூக்கி பிடிக்கும் பாதிரியராலேயே பொய் படுத்தப் பட்டுவிட்டது. முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் திருக்குர்ஆனில் கீழ்க் கண்ட வசனத்தை அல்லாஹ் கூறுகிறான்: உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும் மக்களையும் ஏற்படுத்தினோம்…’. (அல்குர்ஆன் 13:38)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக