வெள்ளி, 7 செப்டம்பர், 2012

நாட்டை துண்டாடியவர்கள் யார் ? : Part 3


இந்தியா 1947 ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் என்று 2 நாடுகளாக பிரிக்கப் பட்டது. இந்தப் பிரிவினைக்கு இந்திய முஸ்லிம்கள்தான் காரணம் என்பது நெடுங்காலமாக சொல்லப்பட்டு வரும் பொய் குற்றசாட்டு . இந்தக் குற்ற சாட்டு பொய் என்பதற்கு புதிதாக தர்க்க ஆதாரங்கள் எதுவும் வைக்க தேவையில்லை. இந்திய அரசியல் தலைவர்கள் அதுவும் முஸ்லிமல்லாத அரசியல் தலைவர்களின் தேசப்பிரிவினை பற்றிய கருத்துகளை நாம் பார்த்தாலே உண்மை புரியும்.
1993 ல் வெளிவந்த கைதே ஆசம் மற்றும் பாகிஸ்தான் உருவாக்கம் என்ற புத்தகத்தின் ஆசிரியர் திரு. பந்தோபாத்யாயா அவர்கள் குறிப்பிடுகையில் : " ஒரு முறை ஜின்னாஹ் அவர்கள் சொன்னார் . பாகிஸ்தான் அவருடைய இலட்சியம் இல்லை. அவர் முஸ்லிம்களுக்கு சில சலுகைகளை பெற்று தர விரும்பினார். அதனால் காங்கிரசுக்கு சில அழுத்தங்களை கொடுத்தார். ( அதுவே பாகிஸ்தானை உருவாக்கி விட்டது ) ." இதே போல் மற்றொரு சிறந்த எழுத்தாளர் எச்.எம். செர்வாய். இவர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் வரலாறு என்றொரு நூலையும் எழுதியுள்ளார். இவர் தன்னுடைய " இந்திய பிரிவினை உண்மையும், கற்பனையும் " என்ற நூலில் பக்கம் 4 ல் இப்படி குறிப்பிடுகிறார். " முஸ்லிம்கள் தான் இந்த நாட்டைத் துண்டாடினார்கள் என்பதோ அல்லது முஸ்லிம்கள் சார்பாக பேசிய ஜின்னா தான் அதைச் செய்தார் என்பதோ உண்மை கிடையாது. ஆனால் இந்த உண்மை இந்தியாவில் இப்போது நிலவி வரும் கருத்துகளுக்கு முற்றிலும் எதிரானது . இப்போது கிடைக்கும் வரலாற்று சான்றுகள் பல் புதிய வினாக்களை எழுப்புகின்றன. இந்த வினாக்களுக்கான விடைகள் இந்த நாட்டின் சுதந்திரத்திகாக போராடிய பல தலைவர்களை, மக்களால் பெரிதும் மதிக்கப் படக் கூடிய தலைவர்களை அவமதிப்பதாக குற்றப் படுத்துவதாக அமையும்."
மேற்குறிப்பிட்ட ஆதாரங்களெல்லாம் சும்மா போகிற போக்கில் யாரோ கூறிவிட்டு போன கருத்துகள் அல்ல. வரலாறுகளை ஆய்வு செய்து பல்வேறு புத்தகங்களை எழுதி அறிஞர்களின் பாராட்டுகளை பெற்றவர்கள். ஒரு சார்பாக கருத்து கூற இவர்கள் முஸ்லிம்கள் அல்ல. அவர்கள் குறிப்பிடும் கருத்துகளும் சாதாரணமான பேச்சுகள் அல்ல வரலாற்று ஆவணங்கள். அந்த வரலாற்று ஆவணங்கள் இன்றளவும் பாதுகாக்க பட்டு வருகிறது. தேசப் பிரிவினையின் போது மறைக்கப் பட்ட வரலாற்று ஆவணங்கள் எனென்ன என்பதையும் நாம் இந்த கட்டுரையின் பிற்பகுதியில் பார்க்க இருக்கிறோம். எனவே பிரிவினையின் மூலம் தேசத்தை பிரிப் பதென்பது முஸ்லிம்களுக்கோ, ஜின்னாவுக்கோ ஆசையில்லை என்பதை நாம் அறியலாம். பாகிஸ்தான் பிரிவினை என்பது இந்தியத் தலைவர்களால்அவர் மீது திணிக்கப் பட்டது . பெரும்பான்மையாக முஸ்லிம்கள் இருந்தால் முஸ்லிம்களால் இந்த நாட்டின் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற முடியும் என்ற பயத்தினால் தான் தேசப் பிரிவினை. அதனால் தான் இந்தியாவின் முதல் பிரதமர் , காந்திக்கு அடுத்தபடியாக இந்திய மக்களால் போற்றப் படக்கூடிய பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் " வருங்கால சமுதாயம் மற்றும் சரித்திர ஆய்வாளர்களும் தான் நாங்கள் செய்தது எது சரி ? எது தவறு ? என்பதை முடிவு செய்ய வேண்டும். " என்று குறிப்பிட்டார். தேசப்பிரிவினை பற்றிய மேலும் பல தகவல்களை அடுத்த தொடரில் காண்போம். ஆக்கம் : அபுல் ஹசன் - தக்கலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக