வெள்ளி, 21 செப்டம்பர், 2012

கருத்து சுதந்திரத்தை அமெரிக்கா மறுபரிசீலனைச் செய்யவேண்டும் – ஹினா ரப்பானி!


இஸ்லாமாபாத்:இறைத்தூதரை அவமதிக்கும் அமெரிக்க திரைப்படத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் வேளையில் அந்நாட்டில் கருத்து சுதந்திரம் குறித்து அமெரிக்கா மறுபரிசீலனைச் செய்யவேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கோரிக்கை விடுத்துள்ளார். சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்முகத்தில் ஹினா ரப்பானி இவ்வாறு கூறினார்.
“இறைத்தூதரை அவமதிப்பது கருத்து சுதந்திரமா? என்பது குறித்து அமெரிக்கா ஆலோசிக்கவேண்டும். கருத்து சுதந்திரத்தின் திரைமறைவில் இத்தகைய திரைப்படங்கள் வெளியாகும் வேளையில் உலகின் பல பகுதிகளில் அமெரிக்க குடிமக்கள் தாக்கப்படும் வேளையில் அது எவ்வளவு தூரம் சுதந்திரமானது என்பது குறித்து பரிசோதிக்கப்பட வேண்டும்” என்று ஹினா ரப்பானி கூறினார். இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக பாகிஸ்தானில் நடைபெறும் போராட்டங்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் ஹினா ரப்பானி இவ்வாறு பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக