செவ்வாய், 4 செப்டம்பர், 2012

இந்தியாவில் எந்த மதத்தவரும் பெரும்பான்மை இல்லை :


டில்லியில் நடந்த தேசிய சிறுபான்மை கமிசனின் 5 வது கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் " இந்தியாவில் எந்த மதத்தவரும் பெரும்பான்மை இல்லை. இந்துக்கள் பெரும்பான்மை என்றாலும் அவர்கள் சாதி, இனம், பிராந்திய அடிப்படையில் பிரிந்து கிடக்கின்றனர். கர்நாடக பிராமணர்களுக்கும் , மேற்கு வங்க பிராமணர்களுக்கும் பிராந்திய அடிப்படையில் வேறுபாடுகள் உள்ளன. இது போல் எல்லா சாதிகளையும் சொல்லலாம், நாட்டில் 22 மொழிகளும், 22 ஆயிரம் பேச்சு வழக்காலும் உள்ளன.எனவே எந்த மதத்தவரும் இந்தியாவில் தாங்கள் பெருமை அடிக்க முடியாது. அந்த வகையில் அனைவரும் சிறுபான்மையினரே" என்று குறிப்பிட்டார். சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் சசி தரூர். ஒரு தேர்தல் வந்தால் கூட அனைத்து இந்துக்களும் ஒரு கட்சியின் பின்னால் செல்வதில்லை, சும்மா பெயரளவில் அனைவரையும் இந்து என்று சொல்லி ஏமாற்றலாம், நிஜத்தில் பிராமணர், யாதவர், வெள்ளாளர், நாயர், நாயுடு, ரெட்டியார்,நாடார், தேவர், வன்னியர், தலித் ( இன்னும் ஏராளமாக) என்று தான் இருக்கிறார்கள். தலித்தை ஒரு காலத்திலும் பிராமணன் தன் இனம் என்று ஏற்றுகொள்ள போவதில்லை. அப்பா எதுக்கய்யா இந்துக்கள் பெரும்பான்மை 90 கோடி இருக்கிறார்கள் அப்டி இப்டி என்று ஏன் பில்டப் கொடுக்கணும், ஒரு மதம், மார்க்கம் , சித்தாந்தம் என்றால் ஒரு அடிப்படையான விசயத்தில் ஒற்றுமை இருக்கணும். ஆனால் இந்து மதத்தில் அடிப்படை இல்லை. ஒரு சாதியின் கடவுளை மற்ற சாதி மறுக்கிறான். அப்படிஎன்றால் சாதி தான் அவர்களை ஒன்றுபடுத்துகிறது. அந்த சாதியை மதம் என்று மாற்றி மக்கள் தொகை கணக்கெடுத்தால் இந்தியாவில் அனைவரும் சிறுபான்மை என்பது தெரிந்து விடும். ஆனால் அரசியல்வாதிகள் செய்ய மாட்டார்கள் ஏனென்றால் அதன் பிறகு முஸ்லிம்கள் பெரும்பான்மை ஆகிவிடுவார்கள் என்ற பயம். ஆனாலும் உண்மை மறையாது அல்லவா அதனால்தான் இந்த மாதிரி அரசியல்வாதிகளின் வாய் வழியாக சில நேரம் வெளிவந்து விடுகிறது. இதில் முஸ்லிம்களுக்கான தகவல் என்னவென்றால் நீங்கள் சிறுபான்மை அல்ல பெரும்பான்மையினரே ! அபுல் ஹசன் - தக்கலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக