வியாழன், 20 செப்டம்பர், 2012

நபிகள் நாயகத்தின் நிர்வாண கார்ட்டூனை வெளியிட்டுள்ள ஃபிரன்ச் பத்திரிக்கை!, தூதரகங்களை மூட ஃபிரன்ச் அரசு உத்தரவு


Charlie Hebdo என்ற ஃபிரன்ச் பத்தரிக்கை நேற்று (19-9-2012) நபிகள் நாயகத்தின் நிர்வாண கார்ட்டூனை தனது பத்திரிக்கையில் வெளியிடுள்ளது. நபிகள் நாயகத்தை வீல் சேரில் தள்ளிக் கொண்டு செல்வது போன்று அட்டைப்படத்தையும் வெளியிடுள்ளது. ஃபிரன்ச் அரசாங்கம் இதை வெளியிட வேண்டாம் என கெஞ்சியம் (ஒபாமா போன்றே..) அதெல்லாம் நிறுத்த முடியாது எனக் கூறி நபிகள் நாயகத்தின் நிர்வாண கார்டூன் படத்தை தனது பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து ஃப்ரன்ச் அரசாங்கம் தற்காப்பு நடவடிக்கையாக நாடெங்கிலும் உள்ள ஃப்ரன்ச் தூதரகங்களுக்கும் பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. சென்ற ஆண்டு இதே பத்திரிக்கை நபிகள் நாயகத்தின் படத்தை வெளியிட போகின்றேன் என அறிவித்ததற்கு அந்த பத்தரிக்கை அலுவலகம் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டது. தற்போது அது போன்று எதுவும் அசம்பாவிதம் நிகழ்ந்து விடாமல் இருக்க ஃப்ரன்ச் அரசாங்கம் இந்த பத்திரிக்கைக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றது.
இந்த பத்திரிக்கையின் ஆசரியரிடம் இது குறித்து கேட்கும் போது, ”நாங்கள் கவலைப்பட வில்லை. எதாவது நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல. இது பத்திரிக்கை சுதந்திரம். நான் ஒன்னும் முஸ்லிம்களை எங்க பத்திரிக்கைய வாங்கி படிங்கன்னு சொல்லலயே? பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்படும் உரை எனக்கு பிடிக்காது அதனால் நான் பள்ளிவாசலுக்கு போக மாட்டேன். அது போல் பிடிக்கவில்லை எனில் வாங்காதீங்க என திமீறாக பதில் அளித்துள்ளான். ஃபிரன்ச் முஸ்லிம்கள் மிகுந்த கொந்தளிப்பில் உள்ளனர். மேற்கத்திய நாடுகள் உயிரினும் மேலான முஹம்மது அவர்களை கேலிப் பொருளாக்கி வருகின்றனர். கார்ட்டூனை வெளியிட்டதும் ஃபிரன்ச் பத்தரிக்கையின் இணையதளம் பல மணி நேரம் hack செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக