புதன், 12 செப்டம்பர், 2012

ஆப்கானிஸ்தான்:அமெரிக்கா படுதோல்வியை சந்தித்துள்ளது – தாலிபான்!


காபூல்:செப்.11 தாக்குதல் நிகழ்ந்து இன்றோடு 11 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. செப்.11 , 2001-ஆம் ஆண்டு நியூயார்க்கின் இரட்டைக் கோபுரங்கள் விமானம் மோதி தகர்க்கப்பட்ட சம்பவத்தில் போதிய ஆதாரங்கள் எதுவுமின்றி உஸாமாவை பிடிக்கப் போகிறோம் என கூறி சுதந்திர நாடான ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் சீரழித்தன. லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொலைச் செய்ததை தவிர வேறு எதுவும் அமெரிக்காவால் சாதிக்க இயலவில்லை. கடந்த ஆண்டும் அல்காயிதா தலைவர் உஸாமா பின் லேடனை கொலைச் செய்ததாக நாடகமாடி ஏதோ பெரியதொரு சாதனையை புரிந்ததாக தம்பட்டம் அடித்ததுதான் மிச்சம். தற்பொழுது ஆப்கானில் இருந்து வெளியேற முடியாமல் போராளிகளின் அதிகரித்து வரும் தாக்குதல்களால் திக்குமுக்காடி வருகிறது அமெரிக்காவும், நேட்டோ படையும். இந்நிலையில் செப்.11 தாக்குதல் நிகழ்ந்து 11 ஆண்டுகள் முடிவடைந்த சூழலில் தாலிபான் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்கப் படைகள் படுதோல்வியை சந்தித்துள்ளன என்றும், அமெரிக்கர்கள் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும்” கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக