சனி, 8 செப்டம்பர், 2012

நாட்டை துண்டாடியவர்கள் யார் ? : Part 4


இந்திய நாடு பிரிந்ததற்கு பாகிஸ்தான் உருவானதற்கு முஸ்லிம்கள் காரணமில்லை என்பதை ௨ வரலாற்று ஆசிரியர்களின் நூல்களில் இருந்து அறிந்தோம். மேலும் சில தகவல்களை காண்போம். திரு. வி.பி. மேனன் என்ற எழுத்தாளர் , இந்தியாவின் அதிகார மாற்றங்கள் என்ற நூலின் ஆசிரியர் தன்னுடைய நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார் : முஸ்லிம் லீக் கட்சி உத்தர பிரதேசத்தில் தந்த ஒத்துழைப்பை காங்கிரஸ் ஏற்றிருக்குமானால், முஸ்லிம் லீக் கட்சி அனைத்து செயல்முறை யதார்த்தங்களோடும் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்கும். ஆனால் ஜவஹர்லாலின் செயல்பாடுகள் முஸ்லிம் லீகுக்கு உத்தரபிரதேசத்தில் புதிய வாழ்வை கொடுத்தது." அதாவது ஜின்னாவின் முஸ்லிம் லீக் கட்சியானது ( முஸ்லிம் லீக் ஏன் உருவானது என்பதையும் பின்னால் பார்ப்போம். இப்போது இந்தியப்ப் பிரிவினைக்கு யார் காரணம் என்பதை அறிஞர்களின் கருத்துகள் வாயிலாக பார்த்து வருகிறோம் ) நேருவின் மாநிலமான உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ்க்கு அதிக ஒத்துழைப்பு கொடுத்து வந்துள்ளது, இதனை காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி முஸ்லிம் லீக்கை கலைத்து காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து இருக்கலாம். இதன் மூலம் இந்தியப் பிரிவினையை தடுத்து இருக்கலாம். பாகிஸ்தான் என்ற நாடே உருவாகி இருக்காது. ஆனால் இதனை காங்கிரசின் தலைவரான நேரு விரும்பவில்லை.அதற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என்று வி.பி. மேனன் குற்றம் சாட்டுகிறார்.. அதே போல் நினைவுகளும் , பிரதிபலிப்பும் என்ற நூலில் சர். சிமன்லால் சிட்டல்வர்ட் என்ற அறிஞர் பாகிஸ்தான் உருவாக்கத்திற்கு காரணம் காங்கிரசின் செயல்பாடுகள் தான் என்று குறிப்பிடுகிறார். " பாகிஸ்தான் இயக்கத்தின் உண்மையான ஆதரவு எங்கிருந்து வந்தது என்பதை ஆராயும்போது , அதிகாரம் தங்கள் கைகளில் வந்த பொது தங்கள் நடத்தைகளால் முஸ்லிம்களின் உள்ளத்தில் மிகப் பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்திய காங்கிரஸ் கட்சியிடமிருந்து தான் என்பது தெளிவாகத் தெரியும். " - என்று பிரிவினையில் காங்கிரசின் நிலை என்ற அத்தியாயத்தில் சுட்டி காட்டுகிறார். மேலும் இந்திய விடுதலை இயக்க வரலாறு என்ற நூலில் திரு. மஜூம்தார் அவர்கள் இவ்வாறு கூறினார் " முஸ்லிம் லீக் - காங்கிரஸ் கூட்டு மந்திரி சபை அமைக்க காங்கிரஸ் தவறிய பொது , காங்கிரஸ் தலைவர்கள் செய்த முடிவு மிகவும் அறிவற்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. இப்போது தான் முஸ்லிம்கள் தங்களுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்பதை முழுவதுமாக உணர்ந்தார்கள். காங்கிரசின் தீர்மானங்கள் பிரிவினைக்கான பாதையை காட்டியது.இந்த மாதியான தவிர்க்க முடியாத நிலைகள் மூலம் பாகிஸ்தானுக்கான அடித்தளம் அமைந்தது. " இதே போன்று பிரிவினைக்கு பின்னால் உள்ள சக்திகள் என்ற நூலில் " இந்துக்கள் நாடு பிளவு படுவதை எதிர்த்தார்கள் என்பது அன்றைக்கும் இல்லை இன்றைக்கும் இல்லை. ஏனெனில் இந்தியாவை பிரித்த சக்திகளுள் ஒன்று இந்து தீவிரவாதமாகும். " என்று குறிப்பிடப் பட்டுள்ளது. தேசப்பிரிவினை பற்றிய மேலும் பல தகவல்களை அடுத்த தொடரில் காண்போம். ஆக்கம் : அபுல் ஹசன் - தக்கலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக