வியாழன், 13 செப்டம்பர், 2012

அஸ்ஸாம் முதல்வரை கண்டித்து சென்னையில் நடைபெற்ற மாபெரும் முற்றுகைப் போராட்டம்: கைது செய்ய வசதி இல்லாமல் கலைந்து செல்லுங்கள் எனக் கூறிய காவல்துறை! அல்ஹம்துலில்லாஹ்!!


கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறி, அகதி முகாம்களில் நிவாரணப் பணிகளில் மெத்தனம் காட்டி, முஸ்லிம்களின் மக்கட்தொகைப் பெருக்கமே கலவரத்திற்குக் காரணம் என்று கூறிய அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகையைக் கண்டித்து சென்னை சத்தியமூர்த்திபவன் அருகில் இன்று மாலை 4 மணி அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தருண் கோகையை முதல்வர் பதவியில் இருந்து நீக்குமாறு கோரி தங்களது கண்டன கோஷங்களை எழுப்பினர். இது முற்றுகைப் போராட்டம் என்பதால் காவல்துறையினர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கைது செய்ய வேண்டும் ஆனால் மாறாக காவல்துறையே கூட்டம் ”அதிகமாக உள்ளது இவர்களை கைது செய்யும் அளவிற்கு எங்களிடம் வசதி இல்லை எனவே அனைவரும் போராட்டம் முடிந்ததும் கலைந்து செல்லுங்கள்” எனக் கூறினர். அல்ஹம்துலில்லாஹ்! காரணம், ஓரிரு நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் என கூட்டத்தை பார்த்த யாரும் நம்ப முடியாத அளவிற்கு ஏராளமானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். அல்ஹம்து லில்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக