ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

முஸ்லிம் இளைஞர்களை குறி வைத்து தொடரும் கைது படலம் :


சென்னையை தகர்க்க திட்டமிட்ட பயங்கர தீவிரவாதிகள் கைது. திடுக்கிடும் தகவல்கள். பின்னணி என்ன ? என்று தினந்தோறும் பத்திரிகைகளில் வரும் தலைப்பு செய்திகள் திகில் திரைப்படம், நாவல்களையே மிஞ்சும் அளவுக்கு நம் உள்ளத்தை அதிரவைக்கின்றன. எப்படியும் முஸ்லிம்களாகத்தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டே செய்தியை வாசித்தால் அந்த என்னத்தை பொய்யாக்காமல் அது மெய்படுத்தியது. அந்த பயங்கரவாதிகள் வீரப்பன் போன்று பெரிய மீசையுடன் இருக்கிறர்களா? இல்லை. ஆட்டோ சங்கர் போல் niraiya தலை முடியுடன் உள்ளார்களா? இல்லை திரைப்பட வில்லன்கள் போல் முகத்தில் கீறல், மச்சத்துடன் இருக்கிறார்களா ? அதுவும் இல்லை. பின் எப்படித்தான் இருக்கிறார்கள் . பள்ளி மாணவர்கள் போல் அரும்பு மீசையுடன், பால் வடியும் முகம் என்று சொல்வார்களே அது போன்ற தோற்றத்துடன் இருப்பவர்களை பார்க்கும் போது இவர்களா நாட்டையே உலுக்கிய தீவ்விரவாதிகள். இளமை பருவ குரும்புகளையே ( திருட்டு தம் , சினிமா, டூர் ) வீட்டுக்கு தெரியாமல் செய்ய தெரியாதவர்கள் , அப்பா ,அம்மா விடம் கையும் களவுமாக பிடிபடக்கூடியவர்கள் இவர்களா பெரிய தலைவர்களை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியவர்கள், பெரிய நகரங்களை தகர்க்க திட்டம் தீட்டியவர்கள் ஆச்சர்யம் தான். பயங்கரவாதிகள் சிக்கியது எப்படி ? என்ற தலைப்பில் தினமலர், தினத்தந்தி உள்ளிட்ட பத்திரிகைகளில் வந்த செய்தியை படிக்கும் போது நம்மை மேலும் அதிரவைக்கிறது. இந்த இளைஞர்கள் பார்வையிட்ட இணையதளங்கள் பயங்கரவாத அமைப்புகளின் இணையதளன்களாம், இதை ஆறு மதமாக புலனாய்வுத்துறை கண்கானித்ததாம். அப்படி என்றால் இந்த நாட்டில் முஸ்லிம்கள் மட்டும் இணையதளங்கள் பார்க்கும் போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். எந்த நேரமும் அவர்கள் கண்காணிக்க படுகிறார்கள். ஒரு தனிமனிதனின் பிரைவசி ( அந்தரங்கம் ) பாதிக்க படுவதை பற்றி எந்த அரசியல்வாதிகளுக்கும் கவலை இல்லை. இதை விட ஒரு சிறந்த ஆதாரத்தை காவல் துறை வெளிப்படுத்தி இருந்தால் நாம் நம்பலாம். ஆனால் இது நாட்டில் நடக்கும் சில அரசியல் நிகழ்வுகளை திசை திருப்புவதற்காக அல்லது யாரோ இதன் மூலம் வரும் தேர்தலில் ( தேர்தலை முன் கூட்டியே நடத்தி ) ஆதாயம் பெறுவதற்காக இந்த செய்தியை பிரபலப் படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப் படவேண்டியதில் முஸ்லிம்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது. ஆனால் உண்மையான குற்றவாளிகள் மதத்தின் பெயரால் தப்புவது அனைத்து சமூகத்தையும் அதிகமாக பாதிக்கும் என்பதை அனைவரும் உணரவேண்டும். அமைதியை போதிக்கும் இஸ்லாத்தில் இந்த பயங்கரவாதிகளுக்கு இடம் இல்லை என்பது முஸ்லிம் ஒவ்வொருவனுக்கும் தெரியும். ஒரு மனிதனை கொலை செய்பவன் ஒட்டு மொத்த சமுதாயத்தையே கொலை செய்தவன் போலவன் என்பது குரான் வாக்கு. இதற்கு மாற்றமாக நடப்பவன் முஸ்லிமே கிடையாது. பெயரிலேயே சாந்தியை பொருளாக கொண்ட மார்க்கம் பயங்கரமாக சித்தரிக்க படுவது வேடிக்கையே. சூடான ஐஸ் கிரீம் உண்டா ? அது போல்தான் தீவிரவாத இஸ்லாம் என்ற வார்த்தை பொருளற்றது. அபுல் ஹசன் - தக்கலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக