சனி, 15 செப்டம்பர், 2012

சென்னையில் திடீர் முற்றுகை, பரபரப்பு அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்


சென்னை: சென்னையில் அமெரிக்க துணை தூதரகத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி, அதை கண்டிக்கும் வகையில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நேற்று முற்றுகையிட்டது.ஊர்வலமாக சென்று அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர். அங்கு துணை கமிஷனர் புகழேந்தி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கதீட்டரல் சாலையிலும் தடுப்பு அமைத்து போலீசார் நின்றிருந்தனர். ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்த நிலையில் பாதுகாப்பு பணிக்கு குறைந்த அளவிலான போலீசாரே வந்திருந்தனர்.அவர்களை கட்டுப்படு த்த முடியாமல் திணறிக் கொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென அண்ணா மேம்பாலத்தில் 5 வாகனங்களில் வந்தவர்கள் அப்படியே வாகனத்தை நிறுத்தி விட்டு பாலத்தில் இருந்து குதித்து தூதரகம் முன்பு குவிந்தனர். தூதரகத்தின் வரவேற்பு பகுதியில் பாறாங்கற்களை தூக்கி வீசி தாக்கினர். கண்ணாடிகள் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டது.
கண்காணிப்பு கேமராக்களை அடி த்து நொறுக்கினர். செருப்பு, முட்டை போன்றவைகள் தூதரக கேட் மீது வீசப்பட்டன. தூதரகத்தைச் சுற்றி, ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதன் மீது கண்ணாடிகள் வைக்கப்பட்டிருந்தன. அதை உடைத்தனர். தூதரகத்துக்குள் சிலர் கற்களை வீசிக் கொண்டிருந்தனர். அந்த இடமே போர்களமானது. அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காத வகையில் கடைசி வரை சமாதான பேச்சுவார்த்தை நடத்தி தூதரகத்தில் இருந்து அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். 5க்கும் மேற்பட்ட அவரது உருவ பொம்மைகள் அண்ணா சாலையில் எரிக்கப்பட்டன. அமெரிக்க நாட்டின் கொடிகள் பல இடங்களில் எரிக்கப்பட்டது. அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் சுமார் 2மணி நேரம் பரபரப்பு மிகுந்த அண்ணாசாலையில் மவுண்ட் ரோடு முதல் நந்தனம் வரை வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. அண்ணா மேம்பாலம் அருகே நின்றிருந்த வாகனங்களில் இருந்த பெண்கள் சம்பவத்தை பார்த்து அலறி அடித்து ஓடினர்.பின்னர் தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி, தமுமுக தலைவர் குனங்குடி அனிபா மற்றும் மமக பொது செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தொண்டர்களை சமாதானப்படுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 600க்கும் மேற்பட்டோரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் நியூ கல்லூரியில் தங்க வைக்கப்பட்டனர். தூதரகத்தின் செக்யூரிட்டி அதிகாரி விசாரணை செய்து தூதரகத்துக்கு அறிக் கை கொடுத்துள்ளார். இது குறித்து அமெரிக்க அரசுக்கும் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக