திங்கள், 10 செப்டம்பர், 2012

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு – 58 பேர் பலி!


பாக்தாத்:ஈராக்கில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் ராணுவ வீரர்கள் உள்பட குறைந்தது 58 பேர் பலியாகினர். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
பாக்தாதில் பிரான்சு நாட்டு தூதரகத்திற்கு வெளியே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் ஒரு பாதுகாப்பு படை வீரர் கொல்லப்பட்டார். பாக்தாதின் வடக்கே துஜைலில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு மற்றும் கார் குண்டுவெடிப்பில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் துஜைலில் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். கிர்க்குக்கில் தேசிய எண்ணெய் நிறுவனத்தில் நடந்த வேலைக்கான ஆள் தேர்வு முகாமில் கார் குண்டு வெடித்ததில் எட்டுபேர் பலியானார்கள். ஸமாரா, பஸரா, துஸ் குர்மாதோ ஆகிய இடங்களிலும் குண்டுகள் வெடித்தன. ஈராக்கில் அண்மைக் காலமாக பிரிவினை மோதல்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்புகளின் பொறுப்பை எவரும்ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அரசு அல்காயிதா மீது குற்றம் சாட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக